“இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்” – ட்ரம்ப்

லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

போர் நிறுத்தத்தை அறிவிக்கும் தனது பதிவில், லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.