உக்ரைன் மீது ரஷ்யா நேற்று(15.4.2026) இரவு நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் (Drone) தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில், நேற்று ஒரே நாளில் மட்டும் 659 ஆளில்லா விமானங்கள் மற்றும் 44 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானவற்றை உக்ரைன் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்திய போதிலும், குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது விழுந்த ஏவுகணைத் துண்டுகளால் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



