தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் 09 சீனர்கள் கைது

ஒருதொகை தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணினி நிதி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பொருட்களை கொண்டுவந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தமது உடல் மற்றும் ஆடையினுன் Sellotape பயன்படுத்தி ஒட்டி, பொருட்களை கொண்டுவந்துள்ளனர்.

சீனாவின் குங்மிங் நகரில் இருந்து வந்த சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.