கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல்

கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்கள் பயணித்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு சாதனம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு சீன நாட்டவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் தகவல்படி, இந்த மோதல் இன்று(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகக் காவல்துறையினர் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.