Home Blog Page 99

போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் டட் பிரஸ் (ஏபி) புதன்கிழமை(2) செய்தி வெளியிட்டுள்ளது.
“போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தெளிவாக வழிவகுக்கும் எந்தவொரு முயற்சியையும் ஹமாஸ் ஏற்கத் தயாராக உள்ளது” என்று ஹமாஸ் அதிகாரி தாஹர் அல்நுனு கூறி யதாக மேற்கோள் காட்டப்பட் டுள்ளது. இருப்பினும்,வாஷிங்டன் முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத் திட் டத்தை அது அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஆதரவு திட்டத்தை நிராகரிப்பது ஹமாஸின் நிலைப்பாட்டை மோசமாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்குத் தேவையான விதிமுறைகளுக்கு இஸ்ரேல் “ஒப்புக் கொண்டுள் ளது” என்று செவ்வாயன்று(1) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைத் தளத்தில் கூறினார், இதன் போது போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினரும் பாடுபடும்.
இந்தத் திட்டத்தில் காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படையினரை பகுதியளவு திரும் பப் பெறுதல், மனிதாபிமான உதவிகளின் அதிகரிப்பு மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஆகியவை அடங்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஏபியிடம் தெரி வித்தார். இருப்பினும், தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக மோதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் முறையாக உறுதியளிக்க வில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹமாஸ் பிரதிநிதிகள் குழு கெய்ரோவில் எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக போராளிக் குழு தெரிவித்துள்ளது – அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பப்படு கிறது அதற்கு மாற்றீடாக இஸ்ரேல் தனது படையினரை முழுமையான திரும்பப் பெறுதல் மற்றும் போருக்கு நிரந்தர முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால். இஸ்ரேல் அந்த நிபந்தனைகளை நிராகரித்துள்ளது.
வருங்காலத்தில் “ஹமாஸ் இருக்காது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு புதன்கிழமை ஒரு உரையில் கூறினார். ஹமாஸ் ஏற்க மறுக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, குழு சரணடைய வேண்டும், நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
22 மாதங்களாக நடைபெற்று வரும் போர், காசாவை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இதுவரையில் அங்கு 57,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 130,000 ஈற்கு மேற் பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற வேண்டும்!

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்​றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள், மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கொள்கை எதிரி​களு​டனோ, பிளவு​வாத சக்​தி​களு​டனோ என்​றும் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ கூட்​டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்​ளிட்ட 20 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

ஐ.நாவிற்குள் ஊடுருவிய பிரித்தானியா உளவுத்துறை

ஈரானுக்கு எதிரான மேற்கத்திய தடைகளை ஒருங்கிணைக்க உதவும் வகையில், சர்வதேச அணு
சக்தி நிறுவனத்தில் (IAEA) ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஊடுருவியதாகக் கூறப்படுகிறது என்று தி கிரேசோன் என்ற பிரித் தானியா ஊடகம் செவ்வாயன்று(1) தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியக புலனாய்வு அமைப்பான MI6 அமைப்பைச் சேர்ந்த முகவர் நிக்கோலஸ் லாங்மேன் மற்றும் ஐ.நா. கண்காணிப்பு அமைப்பில் அவரது பங்கை விவரிக்கும் கசிந்த ஆவணங்களை அந்த ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
இங்கிலாந்து உளவுத்துறை கட்அவுட்டான டார்ச்லைட்டின் செயல்பாடுகளை விவரிக்கும் கசிந்த ஆவணங்களின் தொகுப்பில் லாங்மேனின் விண்ணப்பம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இள வரசி டயானாவின் மரணத்தில் பிரிட்டிஷ்  உளவுத்துறையின் பங்கை மறைப்பதில் அவர் தொடர்பு டையவர் என்றும், ஏதென்ஸில் பாகிஸ்தான் குடியேறிகளைக் கடத்தி சித்திரவதை செய்த குழுவை அவர் நிர்வகித்ததாக கிரேக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப் பட்டிருந்தார்.
சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் இரசாயன ஆயுதத் தடை அமைப்பு (OPCW) ஆகியவற்றிற்கான ஆதரவு உட்பட, அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத தொழில்நுட்பத்தின் பரவலை அடையாளம் கண்டு தோற்கடிக்க பெரிய, நிறுவனங்களுக்கு இடையேயான குழுக்களை லாங்மேன் வழி நடத்தியிருந்தார்.
2010 மற்றும் 2012 க்கு இடையில், “அர சாங்கம் முழுவதும் மற்றும் மூத்த அமெரிக்க, ஐரோப்பிய, மத்திய மற்றும் தூர கிழக்கு சகாக்களுடன் மூலோபாயத்திற்காக மிகவும் பயனுள்ள மற்றும் பரஸ்பர ஆதரவான உறவுகளை கட்டமைப்பதன் மூலம்” ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை ஒழுங்க மைப்பதில் லாங்மேன் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. “ஈரானிய அணுசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகள் ஒப்பந்தத்தின் முக்கிய இராஜதந்திர வெற்றியை” சாத்திய மாக்கியதற்கான பெருமையும் அவருக்குரியது.

செம்மணி மனித புதைகுழியில் ஏராளமானவர்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தகவல்

செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர்  வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது.

மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது.

நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது.

உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.

தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும்.

செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள்.

அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.

அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும்.

கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 346

பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும் மாற்றத்தையே நடைமுறைச்சாத்தியமாக்கியுள்ளது. இதனால் பிரித்தானியப் பிரதமரின் செல்வாக்கு மக்களிடை படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் மக்கள் ஆதரவு நிலையில் ‘ரிவோம்’  கட்சி முதல் நிலையிலுள்ளது எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத்தில் நிதிச் செயலாளர் கொன்சேர்வேடிவ் கட்சித் தலைவியின் மக்கள் உதவிப்பண குறைப்புகள் குறித்த சரமாரியான கேள்விகளுக்குப் பதில் கூற இயலாது அழுத வரலாறும் பிரித்தானியப் பாராளுமன்ற வரலாறாக மாறியுள்ளது. சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என ஆட்சிக்கு வந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்காவுக்கும் பிரதமர் ஹரிணி அபேயசேகராவுக்கும் இதே நிலைதான் ஈழத்தமிழர்கள் கேள்வி கேட்டாலும் ஏற்படும் என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.  மேலும் கொவென்றி சவுத்தின் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற உறுப்பினர் சாரா சுல்தானா, முன்னாள் பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோபினுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை உருவாக்கி வேண்டிய மாற்றங்களை முன்னெடுக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பிரித்தானியத் தமிழரும் உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்த பிரித்தானிய ஈழத்தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்குங்கள் அதுவே இனத்துவ அடையாளத்தினையும் இனத்துவத் தேவைகளையும் அடையச் சிறந்தவழி என்பதையும் இலக்கு வலியுறுத்த விரும்புகிறது.
மேலும் 2025 பிறந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன.  இந்த ஆறுமாதத்திலும் அமெரிக்காவின் வர்த்த கப் போராலும் தொழில்நுட்பப் போராலும் அதனுடன் இணைந்த அமெரிக்க வளைகுடாப் பிரகடனத்துடன் கூடிய  கனடாவை அமெரிக்க மாநிலமாக அமெரிக்க எல்லையை விரிவுபடுத்தி மெக்சிக்கோவை அடக்கி டென்மார்க்கின் கிறின்லாந்து வரை எல்லை நீட்சி செய்யும் முயற்சிகளாலும்,  நேட்டோவுக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்குதல் என்ற நிபந்தனையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதுகாப்புச் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி அமெரிக்காவுடன் மருவி உயரவும் ஐரோப்பிய இராணுவத்தையும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதபலத்தை தனியாகவும் கூட்டாகவும் பலப்படுத்தி அமெரிக்காவைக் மறுத்து உயர வேண்டிய புதிய சூழ்நிலை ஐரோப்பிய நாடுகளிலும் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த உலக நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிறிலங்காவின் அநுர குமரதிசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சிறிலங்காவுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவுடனும் சீனாவுடனும் தனக்கான ஆயுதபலத்தைக் கூட்டாண்மைப்பலத்தை பங்காண்மைப்பலத்தை பெருக்கியுள்ளது என்பதும் அனைத்து நாடுகளுடனும் ஏதோ ஒருவகையில் பங்காண்மை பெற்று வருகிறது என்பதும் யாவருக்கும் தெரியும். அத்துடன் இந்த வாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அடுத்த பத்தாண்டுக்கான கூட்டாண்மைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே சிறிலங்கா, இந்திய அமெரிக்க கூட்டாண்மை பங்காண்மை வழி 2009 இல் ஈழத்தமிழர்களின் 31 ஆண்டு கால நடைமுறையரசை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களில் 176000 பேரைத் தேசமாகவே இனஅழிப்பு செய்து தனது ஆக்கிரமிப்பு ஆட்சியை ஈழத்தமிழர்கள் மேல் மீளவும் நிறுவியமையை நினைவூட்டுகிறது.
அவ்வாறே தற்போதைய உலக முறைமைகளாலும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய இறைமை மேலும் ஒடுக்கப்படுவதற்கான காலமாக எதிர்காலம் அமையப்போகிறது என்ற எச்சரிப்பை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. இதனால் ஈழத்தமிழரே ஈழத்தமிழரின் இறைமையைப் பாதுகாத்தேயாக வேண்டிய நிலை தோன்றியுள்ளதென்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது. இதனை எப்படி சனநாயக வழிகளில் செய்வது என்பது இன்றுள்ள கேள்வி.  சமகாலத்தில் உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அறிவார்ந்த ஆய்வுகளுடன் கூடிய  எதிர்வினைகள் வழியாகவே இது சாத்தியமாகும் என்பதே பதில்.  அனைத்துலக ஈழத்தமிழர்களதும் தமிழர்களதும் மனித உரிமை மற்றும் அமைதிச் செயற்பாட்டாளர் களதும் எதிர்வினைகளுக்கான  கூட்டான சந்திப்புக்கள் திட்டமிடல்கள் ஒருங்கிணைப்புக்கள்  மேற்கொள்ளப்பட வேண்டியவொன்றாகவுள்ளது.
சிறிலங்காவிடம் கேட்டுப்பெறும் மனநிலையில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் இதற்கான எதிர்வினையை உருவாக்க முடியாது. அனைத்துலக தொடர்புகள் அனைத்துலக சட்ட இணைப்புக்கள் அனைத்துலக அமைப்புக்களை நாடுகளைக்  கேள்வி கேட்கக் கூடிய ஈழத்தமிழர் கட்டமைப்புக்கள் என்பவற்றை உருவாக்குதல் வழி ஈழத்தமிழரே ஈழத்தமிழரின் இறைமையைச் சனநாயக வழிகளில் பாதுகாத்தேயாக வேண்டும். காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அனைத்துலக அமைப்பால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை உள்ளது. அதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிநிதியின் நியமனமே ஈழத்தமிழர்கள் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையயைப் பயன்படுத்தி வாழ்வதற்கான முறைமையை உருவாக்குமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்காவின் நாடாளுமன்ற யாழ்ப்பாண உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 2023இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் தெளிவாக எடுத்து விளக்கியிருந்தார்.
ஆனால் சிறிலங்காவுக்கு கடந்த மாதத்தில் சென்ற அதன் ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக பொறிமுறையை அனைத்துலக தரத்துக்குக் கொண்டு வந்து நீதியைப் பெற வேண்டும் என்று கொழும்பில் வைத்துக் கூறியமை வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் உள்ளது. இதற்கு அனைத்துலகிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் செயற்பாட்டாளர்கள் யாரும் கவலையோ கண்டனமோ தெரிவிக்காதது ஆணையாளர் கூறியது தரும் வேதனையை விடப் பலமடங்கு வேதனையைத் தருவதாக உள்ளது. சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை நீதி வழங்கல் எப்படியானது என்பதற்கு ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் நிற்கும் பொழுதே மண்ணுக்குள் இருந்து எழுந்த ஒவ்வொரு மனித எலும்புக் கூடுகளுமே சான்று பகர்ந்தன. அதுவும் பால்குடி மறவாத பச்சைக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ பள்ளியில் படிக்கவென வழங்கிய நீலப் பள்ளிப் பையுடனும் விளையாட்டுப் பொம்மையுடன் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு என்பன எத்தகைய நீதி உள்ளக பொறிமுறையில் வழங்கப்படுமென்பதை தெளிவாக்கியுள்ளது. மேலும் வேதியல் பாடத்து உயர்தர வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு எதிர்காலக் கனவுகளுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரிசாந்தியை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திக் கூட்டுப்பாலியல் வன்முறைப்படுத்திய சிறிலங்காப் படையினர் மூச்சு விட நேரம் தாருங்கோவெனவும் தாகத்துக்குத் தண்ணீர்தாருங்கள் எனவும் கிரிசாந்தி கெஞ்சக் கெஞ்ச மிருகங்களாக அவளை தொடர்ந்து பாலியல் வன்முறைப்படுத்திய தகவல் வெளியான நிலையில் எந்த ஈழத்தமிழனாவது உள்ளக பொறிமுறையில் நீதி கிடைக்குமென நினைப்பானா? 1998 இலேயே கிரிசாந்தியை இனப்படுகொலை செய்தவன் தனக்கு தண்டனை கிடைத்ததம் தனக்கேன் தண்டனை தானே 400 பேரைக் படுகொலை செய்து புதைக்க உதவியதாக கூறி அவர்களையும் தண்டியுங்கள் என செம்மணி புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களின் தொகையைக் கூறிய பின்னர்  27 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எந்த நீதியும்  வழங்காத சிறிலங்கா இன்று வெளிப்படத் தொடங்கியுள்ள தடயங்களை கண்டா நீதி வழங்கும். மாறாக கிடைக்கும் தடயங்களையும் மரபணுச் சோதனைக்கு உதவாதவாறு சிதைக்கும். இதனை சிறிலங்காவின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களே ஊடக கடிதம் மூலம் வெளிப்படுத்தி அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் நெறிப்படுத்தலில் அனைத்துலக தடயவியலாளரின் மூலம் இவை விசாரணை வரை பேணப்பட வேண்டுமென வலியுறுத்தியதை இலக்கு எடுத்துரைத்து. இதற்காவது அனைத்துலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பணிவாக வேண்டுகிறது.
ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025

Ilakku Weekly ePaper 346

Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025

Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம் அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்
  • பேச்சுக்களின் விளைவுகள் என்ன? விதுரன்
  • கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்
  • செம்மணி மனித புதை குழி, நீதி கிடைக்குமா? – கிண்ணியான்
  • விடியலைத்தேடி மயிலிட்டித்துறை – கலாநிதி சூசை ஆனந்தன்
  • அணையா விளக்குப் போராட்டம் நடைபெற்ற போது என்ன நடந்தது” – மக்கள் செயல் அமைப்பு- மணிவண்ணன் தனுசன்
  • வஞ்சிக்கப்படும் மலையக மாணவர்கள் எங்கே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது? – மருதன் ராம்
  • இலக்கு- இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • கனடா மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான இரண்டு காற்பந்துப் போட்டிகளிலும் தமிழீழ மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
  • ஈரானின் கண்களுக்கு முகமூடி போட்ட உளவாளி- பகுதி 2 (இறுதிப் பகுதி) பருத்திவீரன்-வளைகுடா
  • இந்தியாவில் தடம்புரண்ட அமெரிக்க வான்படையின் உயர் தொழில்நுட்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை : ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை என்றும் விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றது.
‘இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்ற போது, சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிசாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது நாட்டில் ஆட்சிபீடத்திலுள்ள அரசும், அரசுத்தலைவரும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர்’.

‘நாமும் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்’.
‘ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டியுள்ளது’.
‘பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் உள்ளிட்ட, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன’.
‘விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களோ எவையும் இருக்கவில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தில் எதிர்மறை அபாயங்கள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா () இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அண்மையில் அங்கீகரித்திருந்தது.
இந்தநிலையில், நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா, இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான எதிர்வுக்கூறல்களை வெளியிட்டுள்ளார்.

நிதி திட்டங்களின் கீழ் இலங்கையின் செயற்திறன் வலுவாக உள்ளதுடன் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி வலுவடைந்துள்ளதுடன் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இருப்புக்கள் அதிகரிக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் நிதி வருவாய் மேம்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பொருளாதார கண்ணோட்டம் நேர்மறையாக இருக்கின்ற போதிலும் சில எதிர்மறையான அபாயங்கள் உள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா தெரிவித்துள்ளார்.

நிதி நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நிலையான வருவாய் திரட்டல் மிக முக்கியமானதாகும்.
வரி விலக்கு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல் என்பன முக்கியமாகும்.

பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான பாதுகாப்புடன் இலக்குகளை மேலும் அதிகரித்தல் அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், எஞ்சியுள்ள வணிக கடன் வழங்குநர்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் இறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணியில் சிறுமியின் ஆடையுடன் மேலும் இரு சிறார்களின் என்புக் கூடுகள் மீட்பு

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் (04) இரண்டு சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரையில் 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று (03) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வௌ;வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்  தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என  ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை” என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது.