ஐ.நாவிற்குள் ஊடுருவிய பிரித்தானியா உளவுத்துறை

ஈரானுக்கு எதிரான மேற்கத்திய தடைகளை ஒருங்கிணைக்க உதவும் வகையில், சர்வதேச அணு
சக்தி நிறுவனத்தில் (IAEA) ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஊடுருவியதாகக் கூறப்படுகிறது என்று தி கிரேசோன் என்ற பிரித் தானியா ஊடகம் செவ்வாயன்று(1) தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியக புலனாய்வு அமைப்பான MI6 அமைப்பைச் சேர்ந்த முகவர் நிக்கோலஸ் லாங்மேன் மற்றும் ஐ.நா. கண்காணிப்பு அமைப்பில் அவரது பங்கை விவரிக்கும் கசிந்த ஆவணங்களை அந்த ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
இங்கிலாந்து உளவுத்துறை கட்அவுட்டான டார்ச்லைட்டின் செயல்பாடுகளை விவரிக்கும் கசிந்த ஆவணங்களின் தொகுப்பில் லாங்மேனின் விண்ணப்பம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இள வரசி டயானாவின் மரணத்தில் பிரிட்டிஷ்  உளவுத்துறையின் பங்கை மறைப்பதில் அவர் தொடர்பு டையவர் என்றும், ஏதென்ஸில் பாகிஸ்தான் குடியேறிகளைக் கடத்தி சித்திரவதை செய்த குழுவை அவர் நிர்வகித்ததாக கிரேக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப் பட்டிருந்தார்.
சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் இரசாயன ஆயுதத் தடை அமைப்பு (OPCW) ஆகியவற்றிற்கான ஆதரவு உட்பட, அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத தொழில்நுட்பத்தின் பரவலை அடையாளம் கண்டு தோற்கடிக்க பெரிய, நிறுவனங்களுக்கு இடையேயான குழுக்களை லாங்மேன் வழி நடத்தியிருந்தார்.
2010 மற்றும் 2012 க்கு இடையில், “அர சாங்கம் முழுவதும் மற்றும் மூத்த அமெரிக்க, ஐரோப்பிய, மத்திய மற்றும் தூர கிழக்கு சகாக்களுடன் மூலோபாயத்திற்காக மிகவும் பயனுள்ள மற்றும் பரஸ்பர ஆதரவான உறவுகளை கட்டமைப்பதன் மூலம்” ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை ஒழுங்க மைப்பதில் லாங்மேன் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. “ஈரானிய அணுசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகள் ஒப்பந்தத்தின் முக்கிய இராஜதந்திர வெற்றியை” சாத்திய மாக்கியதற்கான பெருமையும் அவருக்குரியது.