Home Blog Page 3133

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு தடைபோட்ட சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்கும் போது தனது அனுமதியின்றி அமெரிக்காவுடனான எந்த பாதுகாப்பு ஒப்பந்தினையும் மேற்கொள்ள வேண்டாமென, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு மைத்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவிற்கான விஜயத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி, மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்காவிற்கிடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவாத்தையில் ஈடுபட்டிருந்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசும் சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

சிறிலங்காவிற்கான பயண அனுமதி வழங்குவதற்கு அவகாசம் கோரும் வெளிநாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து, சிறிலங்காவில் நிலவும் பதட்ட நிலை காரணமாக பல நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதேவேளை கொழும்பிலுள்ள ஐ.நா. மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 24.05 அன்று 2மணிநேர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தளர்த்துவதற்கு தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி தாக்குதல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருப்பதால் அதை சரிசெய்ய சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை வெளிநாடுகள் தளர்த்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றி தாம் கவனத்தில் கொள்வதாகவும், தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும், சீனா தனது நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்த பயண எச்சரிக்கையை சீன அரசு மீளப் பெற்றுள்ளதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம், மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா மாவட்டத்தில் 4.8ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமேசான் காடுகள் சூழ்ந்திருக்கும் தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு பெருவில் மோயாம்பா நகரில் இருந்து 180 km தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 109.09km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து கொலம்பியா, ஓகுவேடார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே சமயம் இதனால் எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? – பரணி கிருஸ்ணரஜனி

இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

இந்தப் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட ஆய்வுகள், கட்டுரைகள், பேச்சுக்கள், உரைகளில் கூட விதிவிலக்கில்லாமல் ஒரே ஒப்பாரி. தோல்வி உளவியல் அப்படியே வெளிப்பட்டது.

இதிலிருந்து பெற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ எதுவுமில்லை.

ஆனால் இளைய தலைமுறையிடம் இறுதிப் போர் குறித்து எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து விலகி நந்திக்கடலிலேயே தமது கவனத்தைக் குவித்ததால் வந்த தெளிவு அது.

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக, போராட்டத்தின் தொடர்ச்சியாக,  வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது.

2009 தமிழின அழிப்பு நேரத்தில் 16 வயதே நிரம்பிய சிறுவன் மிகத் தீவிரமாக புலத்தில் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாததன் காரணமாக பலரையும் போன்று மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

பிறகு திடீரென்று காணாமல் ஒதுங்கிப் போய்விட்டான்.

கிட்டத்தட்ட அப்படி ஒருவன் இருப்பதையே நானும் மறந்தே போயிருந்தேன்.

திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தொடர்புக்கு வந்து நந்திக்கடல் குறித்து எனக்கே வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

‘அது சரி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் ?’ என்று நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் வந்த பெருமிதம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.

‘அண்ணே தொடர்ந்து சிந்தித்ததில் தலைவர் காட்டிய வழியின் படி அடுத்த கட்டப் போராட்டம் என்னவென்று தெளிவாகத் தெரிந்து விட்டது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற அம்மாவின் கனவை தூக்கி எறிந்து விட்டு ‘ international relations’ கற்கை நெறிக்கு பதிவு செய்து படித்து தற்போது Self – determination (சுய நிர்ணய உரிமை) இல் PhD செய்கிறேன் என்றான்.

அது மட்டுமல்ல, வேறு சக நண்பர்கள் international criminal law/ National security, Peace and War conflicts, International human rights போன்ற பல துறைகளில் PhD செய்வதாகச் சொன்னபோது மிரண்டே போனேன்.

சத்தமில்லாமல் எவ்வளவு தூரம் நகர்ந்து விட்டார்கள்.

இங்கு பத்து வருடங்களாக அமைப்புக்களை உருவாக்கி வைத்து கொண்டு ‘நண்டுப் பண்பாட்டு’ அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழின அழிப்புக் குற்றவாளிகளை, அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைத்துலக சதியாளர்களை ஒரு நாள் இவர்கள் அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால் அதற்கு முன்னையவர்கள் வழி விட வேண்டும்.

அடுத்து அண்மையில் சுவிசில் வெளியிடப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு குறித்த ‘Structures of Tamil Eelam: A Handbook’ என்ற ஆங்கில நூலை எழுதிய மாணவிக்கு வயது இருபது. இவரும் சட்டத்துறையில் Double degree செய்பவர்தான்.

இவர் தமிழின அழிப்பு நேரம் பத்து வயது சிறுமி. இடையில் என்னவொரு பாய்ச்சல்.!

mulli kanchi நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? - பரணி கிருஸ்ணரஜனிநந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கியதால் எல்லோரையும் போல் ஒப்பாரி வைக்காமல் நடை முறை அரசை ஆவணப்படுத்துவதன் அரசியல் புரிந்து அதை சக நண்பர்களுடன் சேர்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

எமது நீதிக்கான பயணத்தில் இது ஒரு பாய்ச்சல் என்று துணிந்து சொல்வேன்.

பழைய பஞ்சாங்கம் பாடுபவர்கள் இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இனியும் ஒதுங்காது முரண்டு பிடித்தால் வரலாறு உங்களை வேறு விதமாகத்தான் பதிவு செய்யும்.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு அறிக்கை சட்டமா அதிபரிடம்

கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் பங்கு தொடர்பான துல்லியமான விபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என கூறப்படுகிறது.

பெருவில் பாரிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

பெருவில் இன்று(26) பிரித்தானியா நேரம் காலை 8.41 மணியளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் மொயபம்பாவில் இருந்து 180 கி.மீ கிழக்காக 105 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8.0 அளவுடைய இந்த நில நடுக்கம் இந்த வருடத்தில் ஏற்றட்ட நில நடுக்கங்களில் பெரியது என அது மேலும் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், பிரேசில், கொலம்பியா மற்றும்  ஈகுவடோர் அகிய நாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருவில் உள்ள லிமா என்னும் நகரத்தில் உள்ள விடுதியின் 9 ஆவது மாடியில் தான் அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்கப் பயணி ஒருவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலம் 600 மைல்களுக்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – சிறிலங்கா பிரதமர்

இலங்கையில் முஸ்லீம் பெண்களுக்கான திருமண வயது வரம்பை
18 ஆக அதிகரிக்கும் வகையில் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட த்தில் திருத்தம் கொண்டுவரப்படுமென சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை முடிந்தவரை தனிப்பட்ட சட்டங்களை ஒன்றிணைப்பதனை நோக்கமாகக் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கல்வித் துறை மற்றும் நாட்டின் சட்டத்துறை ஆகியவற்றை சீர்திருத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது எல்லா சமூகங்களுக்கு பொருந்தக்கூடியவாறு அவை அமையவேண்டும் எனவும் இதனடிப்படையிலேயே முஸ்லீம் மதப் பள்ளிகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கை ,மற்றும் முஸ்லீம் பெண்களின் திருமண வயதை 18 அதிகரித்தல் என்பன அமைவதாக அவர் கூறினார்.

ஈழம் வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த விக்கி

இந்திய தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்த, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,  தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன்,  மு.க.ஸ்டாலினை ஈழம் வருமாறும், அதற்குரிய ஒழுங்குகளை தான் மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்ட விதம் தொடர்பாக எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும், கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

எமது மக்களின் அரசியல், பொருளாதார சமூக முன்னேற்றங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் எதிர்காலத்தில் திட்டங்களை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மென்மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டு, தமிழகத்திற்கும் உலகில் வாழும் தமிழ் மக்களுக்கும் நல்ல பணிகளை நிறைவேற்றும் என நம்புகின்றேன்.

இவை தொடர்பாக என்னாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் நிச்சயம் உங்களுக்கு நான் வழங்குவேன். எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்ளவும், எமது மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடேயே சமூக, கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் நீங்கள் ஒருதடவை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களில் பாரிய தேடுதல் – 24 பேர் கைது…இன்றும் தேடுதல் தொடரும்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் (26) சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்தே குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.5 மாவட்டங்களில் நேற்றும் சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா பகுதியில் இருந்து 11 பேரும், தும்மலசூரிய பகுதியில் இருந்து 9 பேரும், களுத்துறை பகுதியில் 2 பேரும், மக்கும்பர பகுதியில் இருந்து 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், இராணுவ சீருடைகளை வைத்திருந்தமை, போதைப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட சிறீலங்கா அரசு தடுக்கின்றது- புவனராஐ்

உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரபீட   மாணவர்  ஒன்றிய தலைவர் த.புவனராஐ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும், எமது இனத்தின் விடுதலையை வலியுறுத்தியும் நடைபெறும் சனநாயக போராட்ட ங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக நாம் பங்கெடுத்து வந்தோம். தற்போதும் கூட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எமது வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு உயர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

ஆனால் எமது நியாயமான அபிலாைசகளை வழங்கி விடக்கூடாது என்ற பெரும்பான்மை இனத்தின் சிந்தனையில் எள்ளளவும் மாற்றமில்லை. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது சமூகம் சார்ந்து சிந்தித்து செயற்படுவதற்கு கடிவாளம் கட்ட வேண்டும் என்பதில் பெரும்பான்மை தரப்புக்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றன.

ஆகக்குறைந்தது உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வ தைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப்பயன்படுத்தி பாது காப்பு என்ற பெயரில் படைத்தரப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்திரு க்கின்றது. போர் நிறைவடைந்து ஒரு தசாப்தத்தினை நாம் பூர்த்தி செய்திரு க்கின்ற போதும் அதன் வடுக்களை ஆற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கமோ பெரும்பான்மை தேசிய வாதிகளோ தயாராக இல்லை.

மேலும் மேலும் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் செயற்பாடுகளை முன்னெடுகின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரல் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும். எமது விடுதலைக்கான பயணத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று இப்புனித நாளில் திடசங்கல்பம் பூண வேண்டும். பத்தாண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது ரணங்களுக்கு உரியவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.