உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட சிறீலங்கா அரசு தடுக்கின்றது- புவனராஐ்

உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரபீட   மாணவர்  ஒன்றிய தலைவர் த.புவனராஐ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும், எமது இனத்தின் விடுதலையை வலியுறுத்தியும் நடைபெறும் சனநாயக போராட்ட ங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக நாம் பங்கெடுத்து வந்தோம். தற்போதும் கூட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எமது வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு உயர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

ஆனால் எமது நியாயமான அபிலாைசகளை வழங்கி விடக்கூடாது என்ற பெரும்பான்மை இனத்தின் சிந்தனையில் எள்ளளவும் மாற்றமில்லை. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது சமூகம் சார்ந்து சிந்தித்து செயற்படுவதற்கு கடிவாளம் கட்ட வேண்டும் என்பதில் பெரும்பான்மை தரப்புக்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றன.

ஆகக்குறைந்தது உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வ தைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப்பயன்படுத்தி பாது காப்பு என்ற பெயரில் படைத்தரப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்திரு க்கின்றது. போர் நிறைவடைந்து ஒரு தசாப்தத்தினை நாம் பூர்த்தி செய்திரு க்கின்ற போதும் அதன் வடுக்களை ஆற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கமோ பெரும்பான்மை தேசிய வாதிகளோ தயாராக இல்லை.

மேலும் மேலும் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் செயற்பாடுகளை முன்னெடுகின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரல் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும். எமது விடுதலைக்கான பயணத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று இப்புனித நாளில் திடசங்கல்பம் பூண வேண்டும். பத்தாண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது ரணங்களுக்கு உரியவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.