சிறிலங்காவிற்கான பயண அனுமதி வழங்குவதற்கு அவகாசம் கோரும் வெளிநாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து, சிறிலங்காவில் நிலவும் பதட்ட நிலை காரணமாக பல நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதேவேளை கொழும்பிலுள்ள ஐ.நா. மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 24.05 அன்று 2மணிநேர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தளர்த்துவதற்கு தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி தாக்குதல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருப்பதால் அதை சரிசெய்ய சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை வெளிநாடுகள் தளர்த்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றி தாம் கவனத்தில் கொள்வதாகவும், தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும், சீனா தனது நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்த பயண எச்சரிக்கையை சீன அரசு மீளப் பெற்றுள்ளதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.