Home Blog Page 3120

முடிவுக்கு வந்தது புத்த பிக்குவின் உண்ணாவிரதம்

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, இன்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் மேற்கொண்டு வரும் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவுகள் பெருகி வருவதைத் தொடர்ந்து மேற்கு மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று (03) தமது பதவிகளைத் துறந்துள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை அரச தலைவரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இதனிடையே முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் முழுமையாக தமது பதவிகளைத் துறந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை அலரி மாளிகையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன் மலைப்பகுதியில் இருந்து இரண்டு உந்துகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் ஒன்று இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 3 சிரிய இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டுப்படையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் இற்கு அண்மையாக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா படையினர் தங்கியிருந்த இடத்தின் மீதே ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட போர் அவதானிப்புக்குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக சிரியப் படையினர் ஏவுகணை எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரையில் சிரியா மீது இஸ்ரேல் 100 இற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், சிரியாவுக்கு ஈரான் படையினர் ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 8 வருடங்களாக நடைபெறும் போரில் 370,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் 

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.

அந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 4800 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 65 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 650 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள்.

65 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழி வளம்) எதிர்வரும் சனிக்கிழமைகளிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆகிய நான்கு நாள்களும் தமிழாலயங்களில் நடைபெறவுள்ளது.

தேர்வெழுதிய 4800 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.

யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 310 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2020 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.DC6FC758 416B 45D4 9772 CF8703E79637 ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் GER 2 ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் 

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (Ile de france) ) மாணவர்களுக்கான தேர்வு வழமைபோன்று Maison des examens 7 Rue Ernest Renan 94110 Arcueil என்ற முகவரியில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் இடம்பெற்றது.

மதியம் 13.00 மணியளவில், அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி அரியரட்ணம் நகுலேஸ்வரி, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னிலையில் ஒப்பமிடப்பட்டு தேர்வுத்தாள் பொதி திறக்கப்பட்டது. தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.

பிரான்சில் இம்முறை மொத்தம் 6085 மாணவர்கள் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 500 இற்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் தேர்வுக்கடமையைத் திறம்பட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்வுக் கடமையில் ஈடுபட்டவர்களுக்கு சிற்றுண்டி, தேநீர், தண்ணீர், மதிய உணவு என்பனவும் வழங்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரான்சின் ஏனைய பிற மாவட்டங்களிலும் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு நடைபெற்றது. ஸ்ராஸ்பேர்க், நீஸ், துலுஸ், தூர், மூல்கவுஸ், றென், போ, நெவர் ஆகிய பிற மாவட்டங்களிலே தமிழ் மொழிப் பொதுத்தேர்வு இடம்பெற்றுள்ளது.

இம்முறை பிரான்சில் கடும் வெப்பமான காலநிலை நிலவிய போதும், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. பெற்றோர்கள் கடும் வெய்யிலுக்கு மத்தியில் காத்திருந்த காட்சி வெள்ளை இனத்தவர்களையும் ஆச்சரியப்படவைத்தது. வெளிநாட்டவர்கள் பலரும் குறித்த தேர்வுதொடர்பான விடயங்களைக் கேட்டுத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததையும் காணமுடிந்தது.dscn3009 0 பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு

சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவை­சே­னா­தி­ராஜா

இலங்­கையில் இனி­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் தமி­ழர்கள் எதிர்­காலம் தொடர்­பாக நிதா­ன­மாக சிந்­தித்து பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­சே­னா­தி­ராஜா தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற சமுர்த்தி நிவா­ரண உரித்து பத்­திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்கையில்:

நாட்டில் போர் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்­துள்ள போதும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் முழு­மை­யாக கட்­டி­எ­ழுப்­பப்­ப­ட­வில்லை.தமி­ழர்கள் விட­யத்­திலும் இனப்­பி­ரச்­சினை விட­யத்­திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்­று­வரை அரசு எவ்­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை.தமி­ழின வர­லாற்றில் 60 ஆண்­டு­க­ளாக இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் ஏமாந்து வரு­கின்றோம்.தென்­னி­லங்கை அர­சினால் தொடர்ச்­சி­யாக வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.

போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­ய­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம்.இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார்.

நல்­லாட்சி அரசில் நீண்­ட­கால பிரச்­சி­னை­யான இனப் பிரச்­ச­னைக்கு தீர்­வாக கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.பின்னர் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக கூட­வி­ருந்­தது அத்­துடன் வடக்கு, கிழக்கு மாகா­ணத்­துக்கு வரவு செலவுத் திட்­டத்தில் அதிக நிதி ஒத்­துக்­கீடு செய்­யப்­பட இருந்­தது.அனால் அதற்­கி­டையில் எந்தக் கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டாது திருட்­டுத்­த­ன­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­த­மா­ராக கொண்டு வந்தார்.இதனால் வரவு செல­வுத்­திட்டம் உட்­பட அனைத்து விட­யங்­களும் இழுத்­த­டிக்­கப்­பட்­டன.

தற்­போது ஜனா­தி­பதி இந்­தி­யா­விற்கு சென்­றி­ருந்த சமயம் டெல்­லியில் ஊட­க­வி­யா­ளர்கள் மத்­தியில் ஆற்­றிய உரை எமக்கு வருத்தம் அளிக்­கின்­றது.தமி­ழின வர­லாற்றில் நாம் ஆரம்­பத்தில் இருந்து இன்று வரை வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.அண்­மையில் இடம்­பெற்ற குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களில் கூட அதி­க­மாக தமி­ழர்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.போரிலும் தமி­ழர்­களே அதி­க­மாக கொன்று அழிக்­கப்­பட்­டனர்.

நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை அடுத்து சர்­வ­தேச உள­வுத்­துறை மற்றும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை அரசு செலுத்தவில்லை.இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் என்றார்.

சிறிலங்காவில் இயல்பு நிலை திரும்பவில்லை தனது மக்களை எச்சரிக்கின்றது சீனா

சிறிலங்காவில் இயல்பு நிலைமை இன்னும் திரும்பவில்லை என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா வரும் தனது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ”முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்” என்று சீனர்களை அது கேட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான, தீவிரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உட்கட்சி முரண்பாட்டால் கூட்டத்தை புறக்கணித்த அனுஷா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறினார் அனுஷா சந்திரசேகரன். மலையக மக்கள் முன்னணியில் அதிருப்தியில் இருக்கும் அதன் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தப் புறக்கணித்து வெளியேறியதாகக் கூறப்படுகின்றது.

இவர் மலையக மக்கள் முன்னணியில் பிரதியமைச்சராக கடமையாற்றிய பி.சந்திரசேகரன் அவர்களின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம் – ஞானசார தேரர் எச்சரிக்கை

கண்டியில் உண்ணா நோன்பிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆண்கள், பெண்கள் என பலரும் அவரைச் சந்தித்து, அவரின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் அவருக்கு சிங்களத் தரப்பினர் பலர் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர், அத்துரலியே ரத்னதேரரை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, அரசாங்கத்திற்கு 24 மணி நேர காலக்கெடு விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரத்ன தேரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத விடத்து, நாடு தழுவிய அளவில் எங்கள் ”திருவிழாவை” சந்திக்க நேரும் என ஞானசார தேரர் மிரட்டியுள்ளார்.

நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம். இந்த பகிரங்க எச்சரிக்கை தொடர்பில் அரசோ, பாதுகாப்பு பிரிவினரோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

rather ther2 நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம் - ஞானசார தேரர் எச்சரிக்கைநாடு தழுவியரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இன்னும் மூன்று நாட்களில் முஸ்லிம்களின் பெருநாள் வர இருக்கிறது. சில வேளை அவர்களுக்கான பெருநாள் பரிசாகக்கூட ஞானசார தேரர் பகிரங்கமாக சொல்லும் ”திருவிழா” என்பது இருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள் – மே பதினேழு இயக்கம்

சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இந்தியாவிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் ஈழத்தில் களமிறங்க ஆரம்பித்தன.

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் சிவசேனாவின் வழியாக ஈழத்தில் இந்துத்துவ மதவெறிக் கோட்பாடுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும், இந்திய தூதரக அதிகாரிகளும் இணைந்து இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் களைந்தெறியப்பட்ட சாதி, மத வேறுபாடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.61360201 2724035200947255 5453798568231960576 n தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள் - மே பதினேழு இயக்கம்

70 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தினை நடத்தி வரும் தேசிய இனமாகிய (Ethnic Nationalities) தமிழர்களை மதச் சிறுபான்மையினர்களாக (Religious Minorities) சுருக்கி அடையாளப்படுத்தும் வேலையினை இந்த கும்பல் செய்து வருகிறது.

தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று சொல்வதும், அதன் மூலமாக அங்கு நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று சொல்வதும் அமெரிக்கா-இந்தியா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது.

இதன் காரணமாகத் தான் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்கள் தொடர்ச்சியாக தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டது.

அதனை எதிர்த்து உலகத் தமிழர்கள் பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியக் கூட்டணியின் இனப்படுகொலையை மறைக்கும் சதி வேலையினைத் தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெறுவதினை தடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ கும்பல்கள், அடிப்படையிலேயே தமிழின விரோத சக்திகளாகவே இருக்கின்றன.

தமிழீழ போராளிகள் இருந்தவரை அம்மண்ணில் நிலைபெற முடியாத மதவெறிக் கருத்துக்களை இப்போது இந்தியாவின் துணையுடன் இந்துத்துவ கும்பல்கள் அம்மண்ணில் விதைக்க நினைக்கின்றன. மாலதி படையணியும், சூசை கடற்படையும், இம்ரான் படையணியும் இணைந்து களமாடிய தேசமது. அங்கே தமிழின விரோத இந்துத்துவ கும்பல்களை அனுமதிப்பது சீரழிவையே கொடுக்கும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பதே இவர்களின் நோக்கம்.

ஈழத் தமிழர்களே! எச்சரிக்கை கொள்ளுங்கள். தமிழின விரோத இந்துத்துவ மதவெறி கும்பல்களை தமிழீழ மண்ணிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.