நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம் – ஞானசார தேரர் எச்சரிக்கை

கண்டியில் உண்ணா நோன்பிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆண்கள், பெண்கள் என பலரும் அவரைச் சந்தித்து, அவரின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் அவருக்கு சிங்களத் தரப்பினர் பலர் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர், அத்துரலியே ரத்னதேரரை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, அரசாங்கத்திற்கு 24 மணி நேர காலக்கெடு விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரத்ன தேரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத விடத்து, நாடு தழுவிய அளவில் எங்கள் ”திருவிழாவை” சந்திக்க நேரும் என ஞானசார தேரர் மிரட்டியுள்ளார்.

நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம். இந்த பகிரங்க எச்சரிக்கை தொடர்பில் அரசோ, பாதுகாப்பு பிரிவினரோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

rather ther2 நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம் - ஞானசார தேரர் எச்சரிக்கைநாடு தழுவியரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இன்னும் மூன்று நாட்களில் முஸ்லிம்களின் பெருநாள் வர இருக்கிறது. சில வேளை அவர்களுக்கான பெருநாள் பரிசாகக்கூட ஞானசார தேரர் பகிரங்கமாக சொல்லும் ”திருவிழா” என்பது இருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.