இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் மேற்கொண்டு வரும் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவுகள் பெருகி வருவதைத் தொடர்ந்து மேற்கு மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று (03) தமது பதவிகளைத் துறந்துள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை அரச தலைவரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இதனிடையே முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் முழுமையாக தமது பதவிகளைத் துறந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை அலரி மாளிகையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.