Home Blog Page 3108

ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவிற்கு ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறும் போது, ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். அது மட்டுமன்றி ஒருங்கிணைந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக உள்ளது.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்திய இராணுவ அதிகாரிகள் மகேஷ் சேனநாயக்க சந்திப்பு

இந்திய இராணுவ உயரதிகாரிகள் ‘Army-to-Army Staff Talks’ (AAST) எனும் தலைப்பில் ஐவரை உள்ளடக்கிய குழுவினர்கள் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இந்திய இராணுவ உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் சுசிந்ரா குமார், கேர்ணல் நிஷ்சிட் ரஞ்சன், லெப்டினன்ட் கேர்ணல் சிறிநாத் சந்திப்பா ரெட்டி, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதினாரிகளான கப்டன் அசோக் ரேவ், லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஷ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இராணுவ தளபதி அவர்கள் இந்திய இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இந்தியாவில் இளம் இராணுவ அதிகாரிகளுக்கான பாடநெறி பயிற்சிகளுக்கு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விளையாட்டு துறையை மேம்படுத்துவது, உளவுத்துறை, சிமுலேட்டர் அமைப்புகள், குறுகிய ஆயுதம் போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு இராணுவ தளபதி இந்த இந்திய உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இராணுவ தளபதியின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகள் இலங்கை இராணுவத்திற்கு வழங்குவதாக இராணுவ தளபதிக்கு உறுதியளித்தார். அத்துடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு நிலைபேறான தன்மை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடினார்.
கடந்த (11), இராணுவ தலைமையக கலந்துரையாடல் மண்டபத்தில் ஏஏஎஸ் அமர்வுகள் இடம்பெற்றன. இதன் போது பயிற்சி மாதிரிகள், உள்கட்டமைப்பு முன்னேற்றம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நலத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களுடனும் இந்திய இராணுவத்தின் மூத்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது சாத்தியமான விளையாட்டு பரிமாற்ற திட்டங்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட மூலோபாய அணுகுமுறைகளை உள்ளடக்கிய எதிர்கால பயிற்சி தொகுதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த இந்திய உயரதிகாரிகளின் சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவபடுத்தி இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா, இராணுவ விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க, இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, காலாட் பணியகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் தேசபிரிய குணவர்தன, இராணுவ பயிற்சி பணியகத்தைச் சேர்ந்த கேர்ணல் கே.ஏ.என் ரஷிக குமார, இராணுவ செயலகத்தைச் சேர்ந்த கேர்ணல் பி.கே.எஸ் நந்தன போன்றோர் இணைந்து கொண்டனர் 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் இராணுவ தள பணிக்கான பேச்சுவார்த்தைகளில் இந்திய-இலங்கை இராணுவம் (ஆர்எஸ்எஸ்) இரு படைகளுக்குமிடையே நல்ல உறவை வளர்ப்பதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுடன் இந்திய இராணுவம் இதே போன்ற கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க

விஷேட தேவைகளை கொண்ட வர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிரிப்பு

விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அதிகரிக்கப்பட்ட தொகை ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு அமைய விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் தொகை 5000 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தை ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் சுமார் 32,000 பேருக்கு இது வரையில் தலா 3000 ரூபா வீத்ம கொடுப்பனவு வழங்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சரமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக பதிவு செய்யப்படும் 40,000 பேர் அடங்கலாக விஷேட தேவைகளை கொண்ட 72,000 நபர்களுக்கு ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடத்தில் 4350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்று நிருபம் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சுக்கு திறைச்சேரியினால் நேற்று விநியோகிக்கப்பட்டது

சிறிலங்கா ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் தஜிகிஸ்தான் பயணமானார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு CICA ஆனது, ஆசியாவில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்குடன் 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும். இலங்கை CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது.

இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. CICA உறுப்புரிமையானது உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்த உதவியாகவுள்ளது.

CICA யின் உறுப்பு நாடுகளில் ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், வங்காளதேசம், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியன உள்ளடக்குகின்றன.

இதன் 05வது மாநாடு ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜூன் 15 ஆம் திகதி இடம்பெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள் தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மான் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 

நீங்கள் விரும்மியபடியெல்லாம் செயற்படமுடியாது; மைத்திரி மீது ரணில் காட்டம்

19 ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அடுத்த அமைச்சர் ஒருவரை நியமிக்க பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும்.அத்துடன் பிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களை பரிசீலிக்க வேண்டும்.19 ஆவது திருத்தும் இதனை தெளிவாக சொல்கிறது . ஆனால் எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.

உங்களின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களும், சாதாரணதர, உயர்தர பரீட்சை எழுதலாம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளும் சாதாரணதர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழி செய்யப்படும் முறையொன்றை ஒழுங்குபடுத்துமாறு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்ளத்தின் நவீனமயப்படுத்தலுக்கு அமைவாக 2017இல் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரை பிரகாரம் இணையத்தளம் ஊடாக க.பொ.த சாதாரணதரம், உயர்தரப் பரீட்சைகளை நடத்தி சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

தான் கல்வியமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்து பல இடையுறுகளை சந்தித்ததாக கூறினார்.

பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பிற்கு சிறிலங்காவிற்கு உதவ அமெரிக்கா தயார்

சிறிலங்காவில் பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்க தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதனை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், நல்லிணக்கம் தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டன.

சவுதி வானூர்தி நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 26 பேர் காயம்

சவுதி அரேபியாவின் வானூர்தி நிலையத்தின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் இன்று (12) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், வானூர்தி நிலையமும் சேதமடைந்ததாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யேமன் நாட்டில் உள்ள கூதீஸ் ஆயுதக்குழுவினர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் படைகளுக்கு எதிராக தமது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்று அவர்கள் சவுதியின் அபா வானூர்தி நிலையத்தின் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பயணிகள் வந்து இறங்கும் இடத்தில் ஏவுகணை வீழ்ந்த வெடித்ததனால் அந்தப் பகுதியும் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு சம்பவ இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஈரான் வழங்கிய ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றமாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது. எனினும் ஈரான் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

கூதீஸ் படையினரால் பதவியில் இருந்து துரத்தப்பட்ட தமது ஆதரவு அரச தலைவரை மீண்டும் பதவிக்கு கொண்டுவரும் பொருட்டு சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு இராட்சியம் யேமன் மீது 2015 ஆம் ஆண்டில் இருந்து வான் தாக்குதல்களையும் படை நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கையினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிளுடன் தொடர்பு கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது.

உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மேலும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்திய சஹரான் ஹாஷிம் உடன் முகநூல் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் சஹரானின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இப்ராகிம், கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சோதனையின் போது , 14 அலைபேசிகள் , 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணிணிகள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 1 இன்டர்நெட் டாங்கில், 13 காணொளி தகடுகள், 300 ஏர் கன் பெல்லட்டுகள் மேலும், அதிகமான குற்றத்தை சுட்டிக் காட்டுகின்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது

கைப்பற்றிய ஆவணங்கள், மற்றும் நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது என தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் , பொன்விழா நகர் ஆகிய இடங்களில், உள்ளூர் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையினைத் தொடங்கினர். சந்தேகத்திற்குட்பட்ட நபர்களின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை செய்தவர்கள் சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை தனியாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

முகமது அஸாருதீன் என்ற நபரின் மீது, கடந்த மே மாதம் 30ஆம் தேதி தேசிய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை பரப்புவதாகவும், இலங்கையினைப் போல் தமிழகம் ,கேரளா ஆகிய தென்னிந்திய பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆள் சேர்த்தி வருகின்றனர் எனவும் குற்றசாட்டுகள் இருப்பதால் இது குறித்து புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.