Home Blog Page 3074

ஆப்கானில் காவல்துறை தலைமையகம் மீது கார்க்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஆப்கானின் தென் பகுதியில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது தலிபான் படையினர் மேற்கொண்ட கார்க்குண்டு மற்றும் அதிரடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கன்டகர் நகரத்தில் உள்ள காவல்நிலையம் மீதே நேற்று (18) மாலை இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் தமது பi-டயினர் நேரடியான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தலிபானின் பேச்சாளர் குரி யூசுப் அகமதி தெரிவித்துள்ளார்.

கனரக மற்றும் இலகு இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவல்நிலைய தi-லமையகத்திற்குள் நுளைந்த தலிபான் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 9 பொதுமக்களும், இரண்டு காவல்துறையினரும் கொல்லப்பட்டதுடன், 89 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசின் பேச்சாளர் பகீர் அகமதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தலிபான் படையினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், மேலும் 6 பேர் மோதல்களில் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சைவ ஆலயங்களில் வேள்விக்கான தடை நீங்கியது

சைவ ஆலயங்களில் வேள்விகளின் போது மிருகங்கள் பலியிடப்படுவதை சிறீலங்கா அரசு தடை செய்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் வேள்விகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மத வழக்கங்களை தடை செய்வதன் மூலம் அவர்களின் இன அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பல தமிழ் அதிகாரிகளும் துணைபேகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ் நீதிமன்றத்தில் வலிகாமத்தில் உள்ள கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடுவதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் வேள்விக்கான தடையை விதித்திருந்தார்.

ஆனால் அதனை எதிர்த்து சட்டவாளர் கே. வி. எஸ் கணேசராஜா மேன்முறையீடு செய்திருந்தார்.

சைவ மக்களின் தென்மையான மத வழிபாட்டுக் கலாச்சாரத்தில் வேள்வியும் அடங்குவதாக  வாதத்தில் தெரிவித்திருந்ததை நீதிபதி ஏற்றுக்கொண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தமிழ் மக்களை ரணில் ஏமாற்ற முயல்கிறார்- மகிந்த ராஜபக்¬

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ, அதனாலேயே இனப்பிரச் சினைக்கு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அறிவித் திருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் அவரது கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க எந்த வொரு யோசனைகளையும் முன்வைக்காது இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் நிலையிலேயே அந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்க்ஷ கடுமையாக சாடியுள்ளார்.

அவசர அவசரமாக இந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சிக்கின்றது.  மறுபுறம் பல்வேறு கொள்கைகள் தொடர்பான விடயங்களை வெளியிட்டு பாராளுமன் றத்தில் சட்டங்களையும் நிறைவேற்றிவருகின்றது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டத்தை வழங்க தயாராகியதாகவும்,ஆனால் அதனை செய்துமுடிக்க முடியாததனால் மீண்டும் அதனை கொண்டு வர வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 4 வருடங்களாகின்ற போதிலும் குறைந்தபட்சமாக ஒரு பிரேரணையேனும் இதற்காக சமர்ப்பிக்கவில்லை.

அந்தப் பிரச்சினை குறித்து ஆழமாக ஆராய்வதற்கும் அந்தக் கட்சியும் அரசாங்கமும் தயாரில்லை. இந்த அரசாங்கம் கடந்த 04 வருடங்களாக அரசியற் பழிவாங்கலைத் தவிர வேறு எதைத்தான் செய்துமுடித்தது என்பதை கேட்கவிரும்புகிறோம்.

மரண தண்டனை தீர்மானம் கூட தற்போது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புதிதாக ஒன்றுமே இடம்பெறவில்லை. காரணம் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான மோதலாகும். இந்த மோதலானது உக்கிரமடைவதானது சமூகத்தையே பாதிக்கும் என்றார்.

 

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக 86,358 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஜேசுராஜா அமிர்தராஜ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பின்னர் யுலை 23ம் நாள் செவ்வாய்கிழமை லண்டன் அலுவலத்தில் சுடறேற்றி அகவணக்கத்துடன் வணக்கம் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை யுலை 21ம் நாளன்று பிரான்சில் கறுப்பு யுலை நினைவேந்தலும், உரையாடலும் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கனடாவில் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்புதலும் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் சிறிலங்கா ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு யூலை – 1983 தமிழினப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.

காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.

கறுப்பு யூலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.

1983 கறுப்பு யூலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச்  சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள ‘அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை’ தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

இலங்கைத்தீவில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை செய்வதற்கு, ஒன்பது நாள் பயணமாக ஐ.நா அதிகாரி சென்றுள்ள நிலையில், தமது மரபுரிமையினை காக்கவும், பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் அமைதியான முறையின் ஒன்றுதிரண்ட தமிழ்மக்கள் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள தமிழர்களின் பாராம்பரிய வழிபாட்டுத்தளமான பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அவ்விடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதோடு, முல்லைதீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தினை ஆக்கிரமித்து பௌத்த சிலையொன்று எழுப்பப்பட்டுள்ளது.

பாரம்பரியமான தமது வழிபாட்டுதளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு பௌத்தமயமாவதற்கு எதிராக தமிழர்கள் தமது மரபுரிமையினைக் கோரும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழர்களின் இந்த அமைதிவழிப் போராட்டங்களை சிறிலங்கா அரச கட்டமைப்பினரும், பௌத்த பிக்குகளும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி வரும் நிலையில், குறித்த சம்பவங்கள் மீது கவனம் செலுத்த ஐ.நா அதிகாரியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

யுலை 18ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை இலங்கைத்தீவில் தங்கியிருக்கும் ஐ.நாவின் அதிகாரி, கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு யுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தனின் தேரோட்டம் ரத்தாகுமா?

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் உற்சவம்  எதிர்வரும் 06.08.2019அன்று ஆரம்பிக்கப்பட்டு, தேர்த் திருவிழா 29.08.2019 அன்று நடைபெற இருக்கும் நிலையில்,  தேர் உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதேவேளை உள்வீதியில் சிறிய தேர் உலாவரும் எனவும் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கோயிலுக்குள் பிரவேசிக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பரிசோதனைக்கு அப்பால் அனுமதிக்கப்படுவர் என்றும், கோயில் வளாகத்தில் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலுள்ள இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவிற்காகவே வருகை  தருவதுண்டு. அவர்களுக்கு இம்முறை திருவிழா ஏமாற்றத்தை தருமா? அல்லது இறுதி நேரத்தில் முடிவுகள் மாற்றப்பட்டு தேர் வெளிவீதி உலா வருமா என்பது முருகனுக்கு மட்டுமே தெரியும்.

இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கின்றது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன் முகநூல் கேள்விக்கான பதிலில், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதியளிக்கவில்லை. ஐ.தே.க.யை ஆட்சியில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை. மக்களே அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த அரசையும் அவர்களே தேர்ந்தெடுக்கப் போகின்றனர். முழுமையான இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கும்

மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கும். எந்த அரசு பதவிக்கு வந்தாலும்  அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது.  சிறிலங்காவின் பாதுகாப்பை அமெரிக்கா மதிக்கின்றது.

MCC எனப்படும் Millennium Challenge Corporation  உடன்பாடு என்பது ஒரு நிர்வாக உடன்பாடாகும். இது நுழைவு, வெளியேறும் தேவைகள் தொழில்முறை உரிமங்களை அங்கீகரித்தல் மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உட்பட வழமையான நடைமுறைகளை தரப்படுத்துகின்றது. இதற்காக 40 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி கடனாக அல்லாது அமெரிக்க ஒத்துழைப்பு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கொடையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

ரணில் அரசை காப்பாற்றும் கூட்டமைப்பு கன்னியா விவகாரத்தை புறக்கணித்தது

கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கு ஆபத்து வருபாேது அவசரமாக செயற்படும் கூட்டமைப்பு எதிர்பார்த்தது பாேல தமிழ் மக்களின் விவகாரத்தை புறக்கணித்துள்ளது.

இந்த சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள்:

கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகள் நடைபெறுவது இடை நிறுத்தம்.

32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார்.

கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும்.

முல்லை நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.

மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது தவறானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம். எம்பீக்கள் திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

அனைத்து தமிழ் எம்பீகளுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய எம்பீக்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை. அரவிந்தகுமார், ராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகிய எம்பீக்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் மனாே கணேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.

மன்னார் பகுதியில் கி.பி13 ஆம் நூற்றாண்டு சைவ ஆலயம்

மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குரிய சைவ ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தில் காணப்படும் பொருட்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வயது எல்லை கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் மக்களின் தொன்மையான சைவ ஆலயங்கள் காணப்படும் பகுதிகளில் சிங்கள அரசின் தனிச் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட தொல்லியல் திணக்களம் பௌத்த ஆலயங்களை நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆலயமும் சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இருந்து தப்புமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

BC 1300 kovil mannar 1 மன்னார் பகுதியில் கி.பி13 ஆம் நூற்றாண்டு சைவ ஆலயம்BC 1300 kovil mannar 2 மன்னார் பகுதியில் கி.பி13 ஆம் நூற்றாண்டு சைவ ஆலயம்