Home Blog Page 2808

ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை – கிரிசாந்தன்

அண்மையில் யாழ் பல்கலைக்களத்தினுள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்,கைதுகள் தொடரிப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜரட்ணம் கிரிசாந்தன் அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் இராணுவத்தினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்?

பதில்:- யுத்தகாலத்திலும் சரி, அதற்கு பின்னரும் சரி இராணுவத்தினர் பல்கலைக்கழத்தினுள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மாணவர்களும் அதனை விரும்பியிருக்கவுமில்லை. அப்படியிருக்க, ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் நாட்டில் அசாதாரண சூழலொன்று உருவெடுத்தது. இக்காலத்தில் யாழ்.பல்கலைக்கழகமும் குண்டுதாரிகளின் இலக்கிற்கு உள்ளாகலாம் என்று அச்சமும் காணப்பட்டது.

அதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் சோதனையிட்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பாதுகாப்புத்தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு பல்கலைக்கழக நிருவாகமும் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு மாணவர்களாகிய நாமும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். DSC 0141 ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

கேள்வி:- சோதனை இடுவதற்காக வருகை தந்திருந்த இராணுவம் ஒளிப்படம் வைத்திருந்ததாக காரணம் காட்டி இரு மாணவர்களை கைது செய்வதற்கு ஏன் விளைந்தது?

பதில்:- பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளைச் செய்து குண்டுத்தாக்குதல் சம்பந்தமான அச்சநிலையை போக்கி பாதுகாப்பினை உறுதி செய்வது உள்நுழைந்திருந்த இராணு வத்தின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தில் வந்திருந்த இராணுவம் தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படம் இருப்பதையும், மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் மருத்துவ பீட பழைய மாணவரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் இருப்பதையும் காரணம் காட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோரையும் சிற்றுண்டிச்சாலை ஊழியரையும் கைது செய்தனர்.

உண்மையிலேயே இன விடுதலைக்கான போராட்டத்தில் தலைமையேற்று நடத்தியவர் என்ற அடிப்படையிலும் தேசத்தின் விடுதலைக்காக ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் பல்கலை மாணவன் என்ற அடிப்படையிலும் அந்த ஒளிப்படங்கள் பல ஆண்டுகளாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக வந்த இராணுவம் தனது நோக்கத்தினை மாற்றி பயங்கரவாத தடைச்சட்டமும், அவசரகால சட்டமும் நடை முறையில் இருப்பதை தமக்கு சாதகமாக்கி ஒளிப்படம் இருப்பதை காரணம் காட்டி மாணவர்களை கைது செய்தது.

நீண்டகாலமாக இருக்கும் ஒளிப்படங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்களை இராணுவம் தருணம் பார்த்து கைது செய்தமையானது கவலையளிப்பதோடு இராணுவத்தின் முகத்திரையை கிழித்து உண்மையான தோற்றத்தினை உலகறியச் செய்துள்ளது. இதற்கு நாம் கடுமையான கண்டனத்தினை வெளியிடுகின்றோம்.

கேள்வி:- இராணுவம் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து திட்டமிட்டு செயற்படுகின்றது என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இராணுவத்தின் ஆழ்மனது சிந்தனை பல்கலைக்கழக மாணவர்களை அடக்குவதாகத்தான் இருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழகம் என்பது வெறுமனே கற்கைகளை வழங்கும் ஒரு ஸ்தாபனம் மட்டுமல்ல. தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரையில் பின்னிப்பிணைந்துள்ளது.

ஆகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் என்றுமே கழுகுப்பார்வையுடன்தான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் போர் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காவும், உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட சனநாயக போராட்டங்களில் முன்னின்று உழைத்தார்கள். அதிலும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களில் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு கணிசமாக இருந்தது.

மிகமுக்கியமாக ஐ.நா.வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டபோது அதனை மிகக் கடுமையாக பல்கலை சமூகம் எதிர்த்ததோடு சர்வதேசம் வரையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் நேரடியாகவே பங்கேற்றிருந்தது.

இதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேடையில் அரசியல் பிளவுகள் ஏற்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் உயிர்களை ஆஃகுதியாக்கியவர்களுக்காக உணர்வுடன் நினைவேந்தலைச் செய்வதற்கான கடந்த ஆண்டு முன்வந்திருந்ததோடு இந்த ஆண்டும் அதற்குரிய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.D1wqEpbWoAAoq0Q ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

அதுமட்டுமன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுதினமே பல்கலையில் நினைவஞ்சலியை நாம் செய்திருந்தோம். ஆகவே இதுபோன்ற பல விடயங்களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் பங்குதாரர்களாக முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றமையை ஆட்சியாளர்கள் விரும்பவில்லைபோலும். ஆகவே தற்போதைய தருணத்தில் இராணுவத்தினை பயன்படுத்தி பல்கலை மாணவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து அச்சுறுத்தி வைத்து விடலாம் என்று கருதுகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

கேள்வி:- கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பில் சனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? அதில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றவா?

பதில்:- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் அவசியமாகின்றது. அந்த ஒப்புதல் கிடைக்காத நிலையில்த்தான் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில்த் தான் சனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்புக்குச் சென்றிருந்தோம்.

சனாதிபதிக்கு அவசர அலுவல்கள் காரணமாக கண்டிக்குச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளதால் அவரை நேரில் சந்தித்திருக்க முடியவில்லை.
இருப்பினும் சனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். அவர்களுக்கு ஒளிப்படம் மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தோம். அவர்களும் அந்தவிடயம் பொருத்தமற்ற செயற்பாடு என்பதை ஏற்றுக்கொண்டதோடு சட்டமா அதிபர் புதிதாக பதவி ஏற்றுள்ள நிலையில் 13ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கின்றார். அன்றைய தினமே இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

கேள்வி:- மாணவர்களின் கைது அடுத்து நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் மக்களின் நீதிக்கான போராட்டத்திலும் ஒட்டுமொத்த பல்கலை மாணவர்களின் பங்களிப்பினை வலுவிழக்கச் செய்துவிடுமா?

பதில்:- நாம் மக்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்காகவுந்தான் குரல் கொடுத்து வருகின்றோம். இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக்குழுவில் எமது அங்கத்துவமும் இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாம் முழுமையான பங்குதாரர்களாக இருப்போம். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மாணவர்களின் கைது இடம்பெற்றவுடனேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் பதற்றமான நிலைமையை தோற்றுவிக்க விரும்பவில்லை. சட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதால் அதனைக்கூட சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்ற மனநிலையில் பொறுமை காத்து வருகின்றோம். மாணவர்களின் விடுதலைக்காக அரசியல் பேதமின்றி பலதரப்பினரும் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறுவதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதில் பின்னடிப்புக்களைச் செய்தாலோ அல்லது எதிர்காலத்தில் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தாலோ நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கப்போவதில்லை.

அரசாங்கத்துடன் மல்லுக்கட்ட வேண்டும் என நாம் சிந்திக்கவில்லை. ஆனால் மாணவர்களின் சக்தி மாபெரும் சக்தி என்பதையும் உணரச்செய்வதோடு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும், எமது மக்களும் நிச்சயமாக சனநாயக ரீதியில் வீதிக்கு இறங்குவதில் பின்னிற்கப் போவதில்லை. இதற்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவும் கிடைக்கும் என்ற பெருநம்பிக்கையும் எமக்குள்ளது. தற்போது மாணவர்களின் விடுதலைக்காக நாம் செல்லும் சுமுகமான பயணம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை அதில் தோல்வியைச் சந்தித்தால் அவர்களின் விடுதலைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும். அதேநேரம் சனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம். அச்சமயத்தில் நாம் பின்னிற்கப்போவதில்லை என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றோம்

முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு – கண்டதும் சுட உத்தரவு

இன்று (13) மாலை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் அவசரமாக இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரிஷாட் பத்தியூன் வன்முறையில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை கண்டதும் சுட வேண்டும் என மீண்டும் மீண்டும் உரத்த குரலில் சத்தமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த சிறீலங்கா பிரதமர் கண்டதும் சுடுவதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு கட்டதும் சுடும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல்கள் உக்கிரமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kurunagal முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு - கண்டதும் சுட உத்தரவுபல்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் 6 பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெட்டிபொலவில் முஸ்லீம் மக்களின் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் மினுவாங்கொடையிலும் முஸ்லீம் இனத்தவரை சிங்கள இனத்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடும் சிங்கள இனத்தவர்களை தடுக்காது சிறீலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்திருந்த சிறீலங்கா அரசு தற்போது நாடு முழுவதும் இரவு 9 மணியில் இருந்து காலை 4 மணிவரையிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நாட்டின் பாதுகாப்பு முற்றாக சீர்குலைவு நிலைக்குச் சென்றுள்ளதை இது காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா வெளிநாட்டுப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளதால் சிறீலங்காவில் தாக்குதல் நடைபெறலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் சபை கூட்டத்தின் பின்னர் பேசிய ரணில் விக்கிரம சிங்கா வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றால் நாட்டின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் வட மேற்கு மகாணங்களில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

kurunagal3 முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு - கண்டதும் சுட உத்தரவுபயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்பவே இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அதிகாரங்களை நாம் படையினருக்கு வழங்கியுள்ளோம்.

தற்போதைய வன்முறைகள் வெசாக் பண்டிகையை பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் – கணிதன்-

தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது.

27 சர்வதேச நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து இனப்படுகொலை அரங்கேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்றும் கட்டமைப்பு சார் இனவழிப்பு செவ்வனே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழனம் எழுபது ஆண்டுகளாக போராடுகின்றது. சனநாயக ரீதியில், ஆயுத ரீதியில் என்பதையெல்லாம் கடந்தே வந்திருக்கின்றது.

2009ஆம் ஆண்டு மே 18 மௌனிப்புக்கு பின்னர் எம் தமிழினத்தின் விடுதலையை தன் தோளில் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எடுத்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்களே என்று சிங்கள பெருந்தேசியவாதிகளின் முன்னிலையில் மார்பு தட்டினீர்கள். வெளிநாடுகள் உட்பட எங்கு சென்றாலும் உங்கள் மீது தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற முத்திரையையே பதித்தீர்கள். அதுமட்டுமா, 2009 இலிருந்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 பாராளுமன்ற தேர்தல் வரையில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களிடத்தில் இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களையும், உறவுகளைத் தொலைத்தவர்களையும், சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் பிரதானப்படுத்தி ஆணை கேட்டீர்கள். பாதிக்கப்பட்ட நாமும் பெரும் நம்பிக்கையில் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்கினோம்.

எமது நியாயமான கோரிக்கைளையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து அபிலாசைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏகப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கிய கூட்டமைப்பினரான நீங்கள் அல்லவா இதற்கான அனைத்துப் பொறுப்பினை ஏற்க வேண்டும். தற்போது உறவுகள் மறக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு மன கிலேச்சத்துடன் அன்றாட பொழுதை நகர்த்த வேண்டிய மிக மோசமான நிலைக்குள் அல்லவா நாம் இருக்கின்றோம். ஆனால் தெற்காசியாவின் சாணக்கியன் என்று பெயர் பூத்திருக்கும் சிரேஸ்ட தலைவர் சம்பந்தன் ஐயா எமது நலன்களை மறந்து அரசாங்கத்துடன் தேனிலவு அல்லவா கொண்டாடிக்கொண்டிருக்கின்றார். 003 16263 முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் - கணிதன்-

இத்தனை காலம் சென்றும் தென்னிலங்கையை நம்பிக்கொண்டிருக்கும் உங்களின் பெரும் தன்மையை என்னவென்று சொல்வது. அன்று, முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய நிலப்பரப்பில் வன்னி மாவட்ட மக்களாகிய நாம் முடக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்கறிந்திருந்த ஐயா சம்பந்தரும் அவருடைய பரிவாரங்களும் எம்மை விடுவிக்கும்படி ஒரு உரத்த குரலை உங்களால் முன்வைக்க முடியாமல் போனதேனோ?

முள்ளிவாய்க்காலில் விதையாகிப்போன தேசிய இன விடுதலையை நேசித்த ஒவ்வொரு ஜீவனினதும் ஏக்கங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட ஒவ்வொரு பிரதிநிதியினதும் மனச்சாட்சியை தட்டவில்லையா?

யுத்தம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் முடிவிற்கு வந்ததன் பின்னர் நாம் அனைவரும் வவுனியா மெனிக்பாம் திறந்தவெளி சிறைச்சாலைக்கு வந்தபொழுது அரசாங்கம் எங்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.

எங்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருந்து சனாதிபதித் தேர்தலையும், 2010ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலையும் அரசாங்கம் நடத்தியிருந்தது. அப்பொழுதும் நாங்கள் எங்களின் உயிர்களைத் துச்சம் என நினைத்து நீங்கள் கைகாட்டிய சனாதிபதி வேட்பாளருக்கும், நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் வாக்களித்தோம். சம்பந்தன் ஐயா அவர்களே, பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், மீள்குடியேற்றம் ஆரம்பித்திருந்த வேளையில், அப்பொழுதுதான் மீள்குடியேறியிருந்த எங்களை நீங்களும் உங்களது நாடாளுமன்ற குழுவினரும் எங்களை வந்து எமது இடங்களில் சந்தித்தீர்கள்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் எப்படி ஒரு வெட்டவெளி காணியிலும் புல்மண்டியிருந்த பற்றைகளிலும் இரவோடு இரவாக இறக்கிவிடப்பட்டிருந்தோம் என்பதை நீங்கள் நேரில் கண்டறிந்தீர்கள்.இடிந்த பாடசாலை கட்டிடங்களையும், மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஏணைகளையும் கண்டு உங்கள் குழுவினர் கலங்கி நின்றதையும் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொன்னதை நீங்களும் குறிப்பெடுத்துக் கொண்டீர்களே நினைவிருக்கா உங்களுக்கு?ஆண் துணையின்றி கொடுத்த தகரங்களையும், இரும்புக் கம்பிகளையும் கொண்டு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை மரக்கிளைகளில் கட்டிய ஏணையில் கிடத்தி பெண்கள் ஒன்று திரண்டு கொட்டில்கள் அமைத்ததைக் கண்ணுற்றபோதும் உங்களது இதயங்கள் வலிக்கவில்லையா?

எவ்வளவு பேர் தங்களது இன்னுறவுகளைக் காணவில்லை என்று உங்களிடம் ஓலமிட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இவ்வளவுபேர் இறந்துள்ளனர் என்றும் இவ்வளவு பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என்றும் எத்தனைபேர் உங்களிடம் புள்ளி விபரம் வழங்கினர். நீங்கள் எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவீர்களா? எத்தனை பாடசாலை அதிபர்கள் உங்களிடம் இந்தப் பாடசாலையில் குறைந்த பட்சம் இத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்று முறையிட்டிருப்பர்? அவற்றை நீங்கள் கணக்கெடுத்ததுண்டா?

மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் வேதனைகளையும் செவிமடுத்து மீண்டும் வந்து ஆவணப்படுத்துவதற்கான தரவுகளைப் பெற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தீர்களே இன்றுவரை அதனைச் செய்யாததன் காரணமென்ன? இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரும், தொல்பொருள் திணைக்களத்தினரும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும், வனப்பாதுகாப்பு திணைக்களமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் கையகப்படுத்திய காணிகளின் மொத்த அளவும் மக்கள் போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவும் எஞ்சிய காணிகளின் அளவும் உங்களிடம் இருக்கிறதா?

வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்பை நிரந்தரமாகப் பிரித்து, எமது வாழிடங்களிலேயே எம்மை இரண்டாந்தரக் குடிகளாக மாற்றும் நோக்கில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரசின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தீர்களா? உங்களால் புதிதாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு எம்மினம் பட்ட துன்பங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்களா? எமது விடுதலைப் போராட்டம் பற்றியும் நாம் கடந்துவந்த பாதை பற்றியும் கொஞ்சமாவது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்களா?எமது உறவுகள் தெரிவித்த கருத்துக்களை வைத்து அறிக்கை தயாரித்து இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்திருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுவீர்களா?

கிடைத்தற்கரிய துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டு எம்மினத்தின் விடுதலையை வென்றெடுப்பீர்கள் என்பதற்காகத்தானே நீங்கள் மூடிமறைத்த விடயங்களையும் திரைமறைவில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டோம்.உங்களது அணுகுமுறை தற்போது சர்வதேச உதவிகளையும் கேள்விக்குட்படுத்திவிட்டதே. அரசாங்கத்துடன் ஒத்தூதி சகல தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றிவிட்டீர்கள். அடுத்தநொடியே உங்களுக்கே பிரதிபலன் கிடைத்தாகிவிட்டது. இப்படியிருக்க எம் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது ஆண்டு வருகிறது.

உறவுகளை நினைவு கூருவதை யாரும் தடுக்கமுடியாது என்று அறிக்கை விடுவீர்களா? இல்லை அடுத்து தேர்தல்கள் என்பதால் நீங்களே முள்ளிவாய்க்கால் திடலுக்கு நேரில் வருவீர்களா என்று தெரியவில்லை. அது உங்களின் இராசதந்திரம்.

இப்போது வரையில் நாங்கள் நம்பிக்கெட்டவர்களே! உங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. தீவிரவாதத்தின் பேரால் எமது உரிமைப்போராட்டமே முற்றாக முடங்கும் அபாய நிலையில் இருக்கின்றோம். ஆகவே உங்கள் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் புனிதம் நிறைந்த முள்ளிவாய்க்கால் திடலில் காலடி பதிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அரசியலுக்காக நீலிக்கண்ணீர் வடியுங்கள். ஆனால் ஆஃகுதியானவர்களின் நெஞ்சில் ஏறி நின்று உங்கள் நாடகத்தினை அரங்கேற்றாதீர்கள் என்பதே எமது தயவான கோரிக்கை. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ‘நினைவேந்தல் நிகழ்வு’ என்ற கோட்பாட்டில் நடைபெறுவதற்கு வழிசமைத்து ஒதுங்கிவிடுவதே சாலச்சிறந்தது

பெற்றால் தான் அன்னையா ? – தீபச்செல்வன்-

உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகமும் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப் பிற்கும் தான் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில் உன்னதமாக மதிக்கப்படும் தாய்மைக்கும் ஒப்பிடப்படுகின்றமைதான் தனிச்சிறப்பானது. தாயைப் போன்ற தலைவன் என்ற ஈரமான முகத்தை, அரவணைப்பை, அன்பை எங்கள் ஈழ மண் முழுதாய் அனுபவித்திருக்கிறது. அதுவே தலைவர் பிரபாகரன் உலகின் தலைசிறந்த போராளி, இதுவரை உலகம் கண்டிராத ஒப்பற்ற போராளி என்பதை சொல்கிற வரலாற்று உண்மை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் வீரம் செறிந்த ஒரு போராட்டம். தலைவர் பிரபாகரன், தமிழீழத்தின் அத்தனை படைக்கட்டுமானங்களையும் உருவாக்கி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்த தலைவர். தமிழர்களின் வரலாற்றில் சோழ மன்னன், தனது வீரத்தால் அழியாத சரித்திரத்தை எழுதிச் சென்றான். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக முன்னெடுத்த போர் மரபுகளும் நிலக் கட்டுமானங்களும் புதியதொரு வீர வரலாற்றையும் நிர்வாகத் திறனையும் எழுதியுள்ளமை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாகும்.

சிறந்ததொரு தலைவன், வீரமான தலைவனின் ஈரமான பக்கங்கள்தான், அவரை தாயைப் போன்ற தலைவன் என்று உலகத் தமிழினத்தால் மெச்ச வைக்கின்றது. தமிழர்களின் தலைசிறந்த தலைவனாக, எமது உரிமையையும் நிலத்தையும் வென்றெடுப்பதில் கொண்டிருந்த வீரத்திற்கு நிகராக ஈழ நிலத்தின் ஒவ்வொரு உயிர்களையும் ஒரு தாயைப் போல தலைவர் நேசித்தார். ஒரு தாயைப் போல தலைவர் காத்து நின்றார். அன்னையர் தின நாட்களில் அன்னை போலான எம் தலைவரின் பக்கங்களை பேசுவது, இன்றும் எமது மண்ணை எப்படி நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தான் வலியுறுத்துகிறது, அல்லது

photo7 1 பெற்றால் தான் அன்னையா ? - தீபச்செல்வன்-
National Leader with children

வழிகாட்டுகிறது.

இன்று ஈழத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பெருங்கேள்விக் குறியாகிவிட்டது. சிறுவர் இல்லங்கள் என்ற பெயரில் பணம் பறிப்புக்கள் நிறையவே நடக்கின்றன. பேருந்துகளில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். ஊது பத்தி விற்கும், கடலை மா பொதிகளை விற்கும் குழந்தைகளை தினமும் வீதிகளில் காண்கிறோம். அவர்களுக்கு சரியான கல்வி இல்லை. அவர்கள் சிறுவர் தொழிலாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் சுமக்கும் தொழிலாளியாக, அதற்கு அடிமையாகும் குழந்தைகளாக இன்றைய ஈழத்தின் தலைமுறை மாற்றப்பட்டுள்ளது. மிகக் கடுமையான போர் காலத்தில் – தமிழீழ காலத்தில் இந்த நிலையில்லை.
தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செஞ்சோலை அமைப்பு, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமானது. குழந்தைகளின் மகிழ்ச்சியான பாதுகாப்பான வீடாக அமைந்த செஞ்சோலை, போரினாலும், சமூகப் பிரச்சினைகளாலும் அனாதரவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

தமிழீழக் காலத்தில் தெருக்களில் ஆதரவற்ற குழந்தைகளைக் காண முடியாது. பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் காண முடியாது. தமிழீழ நிலத்தில் எந்தவொரு குழந்தைகளும் அல்லல்படக்கூடாது என்ற பெருந்தாயுள்ளத்துடன் செஞ்சோலை உருவாக்கப்பட்டது.தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய செஞ்சோலைக் குழந்தைகள் பேரன்பு கொண்ட தாய்மையால் வளர்த்து ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு ஆளாக்கப்பட்ட பலரும் இன்று மிகப் பெரிய இடத்தில் உள்ளனர். தலைவரால் வளர்க்கப்பட்ட அந்தக் குழந்தைகள், எமது தலைவனின் தாயுள்ளத்திற்கு சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர். அவர்களுக்கு கல்வி, திருமண வாழ்க்கை என யாவும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

பலர் பல்கலைக்கழகம் சென்று இன்று நல்ல தொழில் நிலைகளில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செஞ்சோலை மாத்திரமின்றி, காந்தரூபன் அறிவுச்சோலை, குருகுலம், பாரதி இல்லம் என இல்லங்களை அமைத்து குழந்தைகள் காக்கப்பட்டனர்.

போராளித் தலைவன், போரில் மாத்திரமே கவனம் செலுத்துவார் என்ற பொது அபிப்ராயத்தை மாற்றிய பெருமை தலைவருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, ஆதரவற்ற தாய், தந்தையருக்குமான தமிழீழ முதியோர் இல்லங்களை தலைவர் அமைத்தார். மதிவதனி பிரபாகரன் அவர்கள், ஈழத்தின் மிகச் சிறந்த முதியோர் இல்லத்தை கிளிநொச்சியில் திறந்து வைத்த அந்த நாட்களை எவரும் மறந்துவிட முடியாது. தன் குழந்தைகளைக் காட்டிலும், தன் பெற்றோரைக் காட்டிலும் இந்த மண்ணின் குழந்தைகளையும் முதியவர்களையும் நேசித்தவர் தலைவர் என்பதை சிங்கள தலைவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.1534240628 பெற்றால் தான் அன்னையா ? - தீபச்செல்வன்-

இனப்படுகொலையாளி சரத்பொன்சேகாவும், இனவாதி ஞானசார தேரரும்கூட பிரபாகரன் அவர்கள் சிறந்த தலைவர் என்றும் அவர் தன்னுடைய மக்களுக்கு சிறந்த தலைவராக வாழ்ந்தார் என்றும் அப்படி சிங்களத் தலைவர்கள் எவருமில்லை என்று கூறியதும் இங்கே சுட்டிக்காட்ட தக்கது. எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தலைவன், எமது தலைவர். அதனால்தான் இன்றும் செஞ்சோலை என்ற பெயரை சிங்கள அரசால் மாற்ற முடியாதுள்ளது. இன்றும் செஞ்சோலை இலங்கை அரசினால் இயக்கப்பட்டாலும், அந்தப் பெயர் பலகையுடன் பள்ளி செல்லும் பேருந்தை காண்கையில் தலைவரின் நினைவு எவருக்கும் வரும்.

அண்மையில் ஒரு முன்னாள் போராளி அண்ணா, ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தலைவர் தன்னை பிள்ளை என்றுதான் அழைப்பார் என்றார். “என்ட பிள்ளை“ என்றழைக்கும் எங்கள் தாயுமானவர், தந்தையுமானவர் என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போரில் பங்குபற்றிய சிங்கள இராணுவத்தினன் ஒருவன், வெற்றிக் பிறகு, மீன் சந்தையில் மீன் வெட்டி பிழைப்பு நடத்துவதாக ஒரு செய்தி இணையங்களை அலங்கரித்தது. தலைவர் பிரபாகரன், போராளிகளுக்கும் அவர்களின்

சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் சேதம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடலோரத்தில், சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இரண்டு நாசவேலை காரணமாக சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபியா எண்ணெய் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஃபுஜைரா துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எண்ணெய் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அடையாளம் காணப்படாத நான்கு வர்த்தக கப்பல்கள் நாச வேலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஆனால் உயிரிழப்புகளோ, ரசாயனங்கள் கசிவோ ஏற்படவில்லை. என ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு கப்பல்களில் ஒன்று அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபியா நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க துறைமுகத்தில் சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயை நிரப்ப சென்றிருந்ததாக தெரியவருகிறது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

இலங்கை முழுவதிலும் உடனடியாக அமுலுக்கு வருகையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்று காவல்த்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்களை அடுத்து இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொது சமாதானத்திற்கோ குந்தகம் ஏற்படும் வகையில் யாராவது தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்குச் சட்டத்திற்கு மத்தியில் செயற்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சக்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை ! கல்முனை மாநகர முதல்வர் அதிரடி

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஐ.எஸ்  பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக  முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமாக ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட செய்தி ஒளிபரப்புகளையடுத்து, கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சி சேவையை தடை செய்யும்படி தொலைக்காட்சி நிறுவனங்களின் சேவையினருக்கு கல்முனை மாநகரசபை முதல்வர் உயர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்கள், மற்றும் முஸ்லிம் அமைப்பினர் மேற்கொண்ட  முறைப்பாடுகளை தொடர்ந்து  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் DAN தொலைக்காட்சி உட்பட்ட தொலைக்காட்சி சேவைகளை தடை செய்வதற்கு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் சிறிலங்கா – இந்தியாவிற்கான பயணத்தை மே 15இல் ஆரம்பிக்கின்றது

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், இலங்கை – இந்தியாவிற்கான தனது போக்குவரத்தை மே 15இல் தொடங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.வட இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் சின்தா வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், அத்தியாவசியமானால் மட்டுமே சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொள்ளும்படி தனது மக்களைக் கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% ஆக குறைந்திருந்தது.ஆனால் நாட்டு நிலைமை நாளாந்தம் சீராகி வருவதால், இந்தியாவிலிருந்தான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக வீரசிங்க மேலும் தெரிவித்தார்.மற்றய நாடுகளிலும் பார்க்க இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகம் இலங்கைக்கு சுற்றுலா வருகின்றனர்.

கடந்த வருடம் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 450.000பேர் இந்தியர்களாவர். சுற்றுலாப் பயணிகள் 50பேரில் ஒருவர் இந்தியராவார்.

உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்… -சுடரவன்-

அது 1990, சிறிலங்கா தரப்பிற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கு மிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அமைதி நிலவிய காலம். மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் அரசியல் பணிமனைகளை அமைத்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்த நேரம். காத்தான்குடி பகுதியில் அமைந்திருந்த அரசியல் பணிகளுக்கு பொறுப்பாக இருந்த போராளியின் (இவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்) கைத்துப்பாக்கி அங்குவைத்து சிலரால் பறித்துச் செல்லப்பட்டதாக செய்தி கிடைக்கிறது. இந்த சம்பவம் பற்றி ஆராய்ந்த விடுதலைப்புலிகள் அன்றிரவே காத்தான்குடியின் குறிப்பிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் ஒன்றை மேற்கொள்கின்றனர்.ready உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெறுகிறது. சுட்டவர்களை துரத்திச் சென்ற விடுதலைப்புலிகள் அவர்களில் ஒருவரை AKMS ரக தானியங்கி சுரிகுழல் துப்பாக்கியுடன் கைது செய்கின்றனர். குறித்தநபர் மூதூர் பகுதியில் இயங்கி வரும் ஜிகாத் அமைப்பைச் சேந்தவர் என்றும் பயிற்சியளிப்பதற்காகவே அவர் காத்தான்குடிக்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில் பலர் கைதாகினர். இதில் இஸ்லாமிய மதபோதகர்களும் அடக்கம்.

குறித்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து .22 வகை சுரிகுழல் துப்பாக்கி பன்புல் கட்டுகளுக்கு இடையே மறைக் கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் முஸ்லீம் ஜிகாத் அமைப்பின் பல ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் அரபு மொழியில் எழுதப்பட்ட வையாக இருந்ததுடன், சில இடங்களில் சங்கேதக் குறியீடுகளும் காணப்பட்டன. பின்னர் அந்த ஆவணங்கள் ஆராயப்பட்ட போது இந்த ஆயுத அமைப்பிற்கு காத்தான்குடியில் பயிற்கிகள் வழங்கப்படுவது, ஆயுதங்கள் பெறப்பட்ட வழிகள்> நிதி நடவடிக்கைகள் போன்ற விபரங்கள் தெரியவந்தன.

அதில் இவ்வமைப்பிற்கு பின்புலமாக இருந்து உதவுவோர் பற்றி குறிப்பிட்ட பகுதியில் சங்கேத மொழியில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடப்படவில்லை ஆயினும் அது அப்போதைய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம். எச் எம் அஷ்ரஃப் அவர்களையே குறிப்பதாக நம்பப்பட்டது. (அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் புகழ் பெற்ற கல்வியாளரான கலாநிதி அமீர் அலி அவர்கள் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் முஸ்லீம் காங்கிரஸே இல்லாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாய் எனக் குறிப்பிட்டிருந்தது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.)

இச்சம்பவத்தை அடுத்து காத்தன்குடி இஸ்லாமிய மதத்தலைவர்கள், சமூகப்பெரியார்கள், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இனி தாம் இவர்களின் நடவடிக்கைகளை அங்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும், சமூகங்களுக் கிடையேயான நல்லிணக்கம் கருதி அனைவரையும் விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகளால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் குறிப்பாக, கிழக்கில் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் தோற்றத்தை ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா இனவாத அரசுகள் நன்கறிந்திருந்தது மட்டுமன்றி, அவற்றை ஊட்டி வளர்த்து தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியும் வந்ததே வரலாற்று உண்மை.

கிழக்கில் முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் என்ற பெயரில் சிறிலங்கா படைத்துறையால் உள்வாங்கப்பபட்ட அநேகர் இந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் அங்கம் வகித்தவர்களே. சிறிலங்கா படையினருடன் இணைந்து இவர்கள் கிழக்கில் மேற்ற கொண்ட தமிழினப் படுகொலைகள் அநேகம். தமிழர்கள் தமது பூரவீக வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இன்று தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பல முற்றாக முஸ்லீம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

இவையனைத்தும் சிறிலங்கா பேரினவாத அரசுகளின் முழு ஆசிர்வாதத்துடன், முஸ்லீம் அரசியல் வாதிகளின் வழிகாட்டலில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களினால் அரங்கேற்றப்பட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி இன்று உரத்துக்க கூச்சலிடும் எந்த அரசியல்வாதியும் அன்று திராய்க்கேணி கிராமம் அழிக்கப்பட்டபோது, வீரமுனையில் தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட போது, மல்வத்தையில் தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டபோது வாய்திறக்கவில்லை. இன்று அறிக்கைமேல் அறிக்கைவிடும் ஆண்டகைகளுக்கும் அந்த மக்களின் அழுகுரல் கேட்கவேயில்லை.ready 2 உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

1990களில் ஜிகாத் என்ற ஒரே இஸ்லாமிய தீவிரவாதக் குழுவே இயங்கிவந்த போதும் பின்னாளில் பல்வேறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த ஜிகாத் குழு சிறிலங்கா அரசபடைகளின் துணை இராணுவக் குழுவாகவே செயற்பட்டுவந்தது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் என நம்பப்படும் தேசிய தவ்ஹீத் அமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தது 26 பேர், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊதியம் பெறும் உறுப்பினர்களாக உள்ளமை இலாமிய தீவிரவாதத்திற்கு சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளுக்கும் இடையேயான நெருக்கமான நீண்டகால உறவை வெளிப்படுத்தி நிற்கிறது.

2004 காலகட்டத்தில் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்து இருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. (The Jihad Group, The Al Fatah Group, The Saddam Group, The Osama Group, The Jetty Group, The Knox Group, The Mujahadeen Group and The Islamic Unity Foundation) இத்தகைய குழுக்களின் தோற்றம், செயற்பாடுகள் பற்றி சிறிலங்கா அரசு மட்டுமன்றி அமெரிக்காவும் கூட நன்கறிந்தேயிருந்தது. இது பற்றி இலங்கையில் இருந்த அமெரிக்கத் தூதுவர் வொசிங்டனுக்கு அனுப்பிய இரகசியச் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில் முஸ்லீம் காங்கிரஸ் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

(CONFIDENTIAL//NOFORN and written on June 09, 2004. The cable is signed by the US Ambassador to Colombo Jeffrey J. Lunstead.

“In the eastern Trincomalee District, Source identified three primary groups : the Knox group (named after a revered Englishman), Ossama group, and Jetty (primarily harbor workers). These groups have the backing of the Sri Lanka Muslim Congress. In the eastern Ampara District, Source identified the Mujahadeen group, comprising 150 armed members, as being stronger even than the Ossama group in Trinco.”)3 உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

காலம் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம். எச் எம் அஷ்ரஃப் வித்திட்ட இந்த இஸ்லாமியத் தீவிரவாதம் காலாகாலமாக முஸ்லீம் அரசியல்வாதிகளால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. சிங்கள பேரினவாத அரசியல்கட்சிகள் தமது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க முஸ்லீம் அரசியல் தலைமைகளை நம்பியிருப்பதும்> அதற்கு கைமாறாக அரசியல் உயர்பதவிகளையும்> சலுகைகளையும் வழங்குவது மாத்திரமன்றி இவர்களின் பின்னணியில் உள்ள இந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் கைங் கரியத்தையும் செய்துவருகின்றன.

‘நானே தமிழர்களின் காணிகளைப் பறித்தேன்> அவர்களின் ஆலயத்தைக் கைப்பற்றி அதனை அழித்து முஸ்லீம்களுக்காக சந்தை யொன்றை அமைத்தேன். நானே முஸ்லீம் இளையோருக்கு ஆயுதங்களை வழங்கினேன்> நீதியாளரின் தீர்ப்பை மாற்றி எழுதவைத்தேன்” என்று மிக வெளிப்படையாகக் கூறும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் இன்றும் கிழக்குமாகாண ஆளுநராக நீடிக்க முடிகிறது. ஊழல்மோசடி> போதைப்பொருள் கடத்தல்> காடுகளை அழித்து காணி பிடித்தமை என குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும் ரிசாட் பதியுதீன்> அமைச்சர் பதவியில் தொடர முடிகிறது. இவற்றுக்கு மேலாக இந்த இருவர் மீதும் இஸ்லாமிய தீவிரவாதத் தொடர்புகள் பற்றி பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும் சிறிலங்கா அரசு ஒப்புக்கு கூட விசாரணை நடத்த முன்வரவில்லை.Kattankudy weapons உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பலரும் பல்வேறு தரப்புகளை நோக்கி விரல்களை நீட்டுகின்றனர். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் செயல் என்கின்றனர் சிலர். இல்லையில்லை இதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்கின்றனர் சிலர். இந்தியாவாகக்கூட இருக்கலாம் என்கின்றனர் வேறுசிலர். எது எப்படி இருந்தபோதும் இந்த பயங்கரவாத நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இலங்கை முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே. இவர்களின் உருவாக்கத்திலும் வளர்ப்பிலும் பிரதான பங்குவகித்தது சிறிலங்கா பேரினவாத அரசே. அத்துடன் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் கூட நன்மையடைந்த ஒரு தரப்பு இருக்குமானால் அது சிங்கள பேரினவாதத் தரப்பாக மட்டுமே இருக்கமுடியும். எனவே இங்கு முதன்மைக் குற்றவாளிகள் என்ற வகையியல் முதலில் கண்டிக்க வேண்டியதும் தண்டிக்க வேண்டியதும் சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளையே.

சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களுக்கு மீண்டும் தடை

சிறீலங்காவில் இன்று (13) காலை முதல் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்தே இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதையே அடிக்கடி கொண்டுவரப்படும் சமூக வலைத்தளங்கள் மீதான தடைகள், மற்றும் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் அதன் விளைவாக அமுல் செய்யப்படும் ஊரடங்கு உத்தரவுகள் என்பன காண்பிக்கின்றன.

முஸ்லீம் இனத்தவர் மீது சிங்கள இனத்தவர் மேற்கொண்டுவரும் இன வன்முறை நடவடிக்கைகள் நாளுக்கு அதிகரித்து வருவது அங்கு செல்லும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பையும், சிறீலங்காவில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் சீர்குலைத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.