சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களுக்கு மீண்டும் தடை

சிறீலங்காவில் இன்று (13) காலை முதல் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்தே இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதையே அடிக்கடி கொண்டுவரப்படும் சமூக வலைத்தளங்கள் மீதான தடைகள், மற்றும் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் அதன் விளைவாக அமுல் செய்யப்படும் ஊரடங்கு உத்தரவுகள் என்பன காண்பிக்கின்றன.

முஸ்லீம் இனத்தவர் மீது சிங்கள இனத்தவர் மேற்கொண்டுவரும் இன வன்முறை நடவடிக்கைகள் நாளுக்கு அதிகரித்து வருவது அங்கு செல்லும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பையும், சிறீலங்காவில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் சீர்குலைத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.