Home Blog Page 2806

சிறிலங்கா ஒரு பன்முக சமுதாய நாடு ஐ.நா அதிகாரிகள் தகவல்

சிறீலங்காவில் சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா அதிகாரிகளான  சிறப்பு அலோசகர் அடாமா டயேன் மற்றும் ஐ.நா விசேட ஆலோசகரான கரோன் ஸ்மித் ஆகியோர் கூட்டாக விடுத்த தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட சிறுபான்மை முஸ்லிம், பெரும்பான்மை சிங்களவர்களுக்கிடையிலான மோதலில் கடந்த திங்கள் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

அண்மைக்கால வன்முறை ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்கள் வளர்ந்து வருவதை காட்டியுள்ளது. சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர் சிறிலங்கன் ஒவ்வொருவரும் தமது சமூகங்களை சுதந்திரமாக அடையாளப்படுத்த வேண்டும் என சிறப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். என்றும் அவர்கள் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வன்முறை அதிகரிக்காதிருப்பதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்ப்படுத்தியுள்ளதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு – வற்றாப்பளை அம்மன் உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கெரிப்பதற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று (13) மாலை 6.00 மணியளவில்  நடைபெற்றது.

காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கப் புறப்பட்ட மாலை 6.00 மணியளவில் கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணியளவில் காட்டா விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றப்பட்டது.

இந்த விளக்கு எதிர்வரும் திங்கட் கிழமை அன்று வற்றாப்பளைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பொங்கல் வழிபாடுகள் நடத்தப்படும்.

நாட்டிலுள்ள மூன்று குழுக்களுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றில், தேசிய துவேத ஜமா அத் (N T J) , ஜமாத் மில்லாத் இப்ராஹஜம் (J M I) மற்றும் வில்லாய்ட் அஸ் செலிணி ஆகிய 3 குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் 75 ( 1 ) ஒழுங்கின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தமானி அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முப்படையினர், மற்றும் காவல்துறையிலுள்ளோர் தவிர ஏனையோர்  இவற்றை பயன்படுத்த முடியாது. கடந்த மாதம் பொது மக்கள் போக்குவரத்து ஆணையமும் (C A A)  இதே அறிவித்தலை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோரோவ் என்பவருடன், சிறிலங்காவிற்கான வெளிவிவகார அமைச்சர் தயான் ஜயதிலக பேச்சு நடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களிற்கு இரங்கலைத் தெரிவித்த, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்த தீவிரவாத செயல்களை கண்டித்துள்ளார்.

1990களில் ரஷ்யாவின் தொண்டர் நிறுவனங்கள் மூலம் பரவிய வகாபியிசம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷயா எதிர்கொண்ட அனுபவங்களை சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் ஜெனரல் தர நிலையில் உள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், சோவியத் ஒன்றிய காலத்தில்  K G B , என அழைக்கப்பட்டு, பின்னர் F S B  என்றழைக்கப்பட்ட சமஷ்டி புலனாய்வு சேவையில் பிரதிப் பணிப்பாளராக இருந்தவராவார். 2004 முதல் 2015 வரை D K R  புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை அறமற்றது – கௌதமன்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என திரைப்பட இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான திரு கௌதமன் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இலங்கையில் சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து அமெரிக்காவும் பிரான்சும் “விடுதலைப்புலிகள்  அந்த மண்ணில் இதுவரை ஒரே ஒரு சாமானிய மக்களை கூட கொன்றதில்லை அவர்கள் நடத்தியது அறப்போர் அந்த மண்ணின் விடுதலைக்கான போர்” என்று விடுதலைப் புலிகளை பெருமைப்படுத்தினார்கள்.

சிங்கள தலைவர்களும் சில புத்த துறவிகளும் கூட புலிகள்  எங்கள் மக்களை இதுபோன்று ஈவு இரக்கமற்ற முறையில் கொன்றதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நற்சான்று வழங்கினார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே சென்று ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி அது வன்முறை இயக்கமல்ல தமிழீழ தமிழ்க்குடி மக்களின் விடுதலைக்கான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியது. அப்படி இருக்க தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு இந்திய ஒன்றிய அரசு 2024 வரை புலிகளின் மீதான தடையை நீட்டித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழர்களை ஒடுக்குவதிலும் இல்லாமல் ஒழிப்பதிலும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதையே இந்நிலைபாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழ் ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் பெருமை கொண்டு வாழ்ந்தவர்கள்.

2009ல் விடுதலைப் புலிகளின் அரசு இருந்தவரை தமிழ்நாட்டு மீனவ தமிழர்கள் ஒருவர் மீது கூட சிங்கள அதிகாரவர்க்கம் கை வைத்தது இல்லை. அதன் பிறகு எத்தனை எத்தனை  படுகொலைகள். விடுதலைப்புலிகள் அரசு இருந்தவரை இந்துமா கடல் பகுதியிலோ இலங்கைத்தீவிலோ அத்துமீறலோடு ஒரே ஒரு சீனர் கூட நடமாடியது இல்லை. ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அதிகாரவர்க்கம் 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தோடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. மிகச் சரியாகப் பார்த்தால் இந்தியா தடுத்திருக்க வேண்டும். புலிகள் இருந்திருந்தால் துரத்தி அடித்திருப்பார்கள். இந்துமா கடலுக்கும் இந்தியாவிற்கும் காலம் முழுக்க அரணாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள். சமீபத்தில்கூட கொழும்பில் உள்ள சீன தூதர் மன்னார் வழியாக ராமேஸ்வரம் நடு கடல் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி சென்றிருக்கிறார்.

2009-க்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு உண்டா என்பதை இப்போதாவது இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். சிங்களப் பகுதியில் மட்டுமல்ல தமிழீழப் பகுதியில் மட்டுமல்ல கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது.

இந்திய அரசு இதையெல்லாம் எப்பொழுது உணர போகிறது. இந்தியா- சீன யுத்தம் நடந்தபோது இலங்கை சீனா பக்கம்தான் நின்றது என்கிற வரலாறை மறந்து விடப் போகிறதா இந்தியா. சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மைத்திரிபாலாவோ ரணில் விக்கிரமசிங்காவோ இந்தியாவிற்கு வந்து ஆலோசனை செய்யவில்லை.

மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு சென்றுதான் ஆலோசனை நடத்தி தங்களது நட்பை பலப்படுத்துகிறார். புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதுதான் யதார்த்தத்தின் பேருண்மை. இந்து மாக்கடலின் அதிகாரம் இந்தியாவிடம் இருக்கவேண்டுமானால் தமிழீழம் தமிழர்களிடமும் விடுதலைப் புலிகளிடமும் இருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்துமாக்கடல் சீனாவிடம் இருக்கும். அப்போது இந்தியா யாருக்கு கீழ் இருக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்.

வ.கௌதமன்

தலைவர்

தமிழ்ப் பேரரசு கட்சி.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக் கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, புலிகள் இயக்கத்தை முற்றி லுமாக அழித்துவிட்டதாக அந்த நாடு கூறிவருகிறது.

இருந்தாலும் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவா ளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டுவருகின்றனர் என்றும் குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் அதற்கான ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அந்த அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை  நீட்டித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள்

நடப்பதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

 

படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

வெள்ளாவையில் குடா-ஓயாவில் நிலத்தில் புதைக்கப்பட்ட
நிலையில் துப்பாக்க கள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள், தொலைநோக்கு குறிகாட்டிகள், ஆயுதங்கள் தொடர்பான நூல்கள் போன்றவை குடா ஓயா பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.image 95dbeba748 படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.WhatsApp Image 2019 05 14 at 01.53.591 தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் WhatsApp Image 2019 05 14 at 01.53.57 தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

சமூகவலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு 7 வருடசிறை

 

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணம் தவிர்ந்தநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குசட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மட்டும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச்சட்டம் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர், அலுவலகம்இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை பயன்படுத்திஅமைதியை நிலைநாட்ட நடவடிக்கைஎடுக்குமாறு காவற்துறை தலைமையகம்அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும்பணிப்புரை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாகபொய்யான மற்றும் இனங்களுக்குஇடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்துகண்டறிய காவற்துறைதலைமையகத்தினால் விசேட காவற்துறைபிரிவு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.அதன்மூலம்குற்றவாளியாகஇனங்கானப்படுபவர்களுக்கு எதிராக 3தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கப்படும் என காவற்துறைஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.

அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காகவிதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும்அமுலில் உள்ளது.