Home Blog Page 2787

சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டேயாகவேண்டும் – சிறிலங்கா சபாநாயகர்

நாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் சட்டத்தை மீறமுடியாது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் சிறுகுழு காரணமாக அனைத்து முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் அடிப்படை வாதத்திற்கு முரணானவர்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அடிப்படை வாதிகளின் தேவைக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நிராகரிக்கும் சிறுவர் உரிமையை மீறும் வகையிலான திருமண நடைமுறைகள் போன்றவை தொடர்பில் சட்டங்களை கொண்டுவர பாராளுமன்றம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றேன் அது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தல்ல-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆளுநர் அலு­வ­ல­கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கை யில், நான் தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான கருத்­துக்­களை பாரா­ளு­மன்றில் கூற­வில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க இந்த அர­சாங்­கத்தால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அதை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கு வடக்­கா­கவும், கிழக்கு கிழக்­கா­கவும் இருக்­க­வேண்டும். ஆனால் இரு சமூ­கமும் ஒன்­று­பட்டு வாழ்வோம். இரு­மா­கா­ணங்­க­ளையும் இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான எந்த கருத்­தையும் நான் பாரா­ளு­மன்றில் கூற­வில்லை.

பொது­ப­ல­சேனா அமைப்­பினர் முஸ்லிம் மக்­க­ளையும் பள்­ளிவாசல்­க­ளையும் தாக்க முற்­ப­டும்­போது அதனை அரசு தடுத்து நிறுத்­த­வேண்டும். நிறுத்­தாமல் இன­ரீ­தி­யான முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முனைந்தால் முஸ்லிம் இளை­ஞர்­களும் ஆயுதம் ஏந்­து­வார்கள். அந்த சூழ்­நி­லைக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என கூறி­யி­ருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. என­வேதான் இத்­த­கைய இன­வா­தத்­துக்கு இட­ம­ளித்தால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கு­வார்கள் என்று கூறி­யி­ருந்தேன். மாறாக எத­னையும் கூற­வில்லை.

நூறுக்கு மேற்பட்ட ஆலயங்களில் பிரவேசிக்கத் தடை- இந்தியாவில் அல்ல ஈழத்தில்

யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர யாழில் மேலும் பல இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவித்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் இந்த விடயம் தொடர்பாக வெட்கமடைவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் முப்பது வருடங்களாக திருவிழா இடம்பெறாதிருந்த நிலையில், கடந்த வருடம் திருவிழா இடம்பெற்றிருந்தது.

எனினும் தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை, வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழாவை நடாத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

போதிய ஆதாரங்கள் இல்லை, ஆயுள் தண்டனை ரத்து விடுதலைப்புலிகள் உறுப்பினரை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

திருகோணமலையில் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ளது.

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட அவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

திருகோணமலையைச் சேர்ந்த மீனவரான கனகசூரியன் அழகதுரை என்பவர், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் 2008 ஜூன் 29ஆம் நாள், உப்பூறல் சோதனைச் சாவடியில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரசாங்க பிரதி பகுப்பாய்வாளர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்

இந்தக் குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் நிராகரித்திருந்த போதும், அவரை குற்றவாளி எனக் கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம், 2014 ஜூலை , ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராகவும் தண்டனைக்கு எதிராகவும், கனகசூரியன் அழகதுரை மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தமது கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்றும், ஆதாரங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என்றும் மனுதாரரின் சட்டவாளர், வாதிட்டார். சாட்சியங்களும், ஆதாரங்களும் சரியாக முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர், இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்க்ஷ விற்கான குண்டு துளைக்காத வாகனம் – மங்கள எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் வாங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்கான கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்த விடயத்திற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர பதிலளிக்காது, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இப்படியான ஆடம்பரமான வாகனங்களை வாங்குவது, மக்களிடத்தில் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மற்றைய அமைச்சர்கள் இது தொடர்பாக மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

யாழில் போலி ஆவணங்கள் மக்களே எச்சரிக்கை

போலி ஆவணங்கள் தயாரித்து யாழில் காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடைபெற்று வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்குமாறும் யாழ். செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்டகாலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்தக் காணிகளை குறைந்த விலைக்கு விற்பதாகவும், இதனை வாங்கியவர்கள் மீண்டும் அதை தங்களின் பெயருக்கு மாற்றும் போதே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது என்றும் கூறப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு முதல் இது வரையான காலப்பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக 4 வழக்குகளை மேலதிக காணி பதிவாளர் மேற்கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசிடம் சொல்லியும் பயனில்லை – சாந்தி

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி L வலயம் என்ற பெயரில் தமது நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் போராட்டம் 2019 மிலேச்சத்தனமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு வகையில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சிறிலங்கா படையினரால் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களங்கள் இவ்வாறான அபகரிப்புத் திட்டத்தை மேற்கொள்வதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராசா தலைமையில் முல்லைத்தீவில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக சிறிலங்கா சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.

சீனா, ஜேர்மனி, சவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளே தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ள நாடுகளாகும்.

சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தூதர்களை அழைத்து, நாட்டு நிலைமை தொடர்பாக விளக்கமளித்ததுடன், பயண தடைகளை நீக்கும்படி கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா

சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி புன்னக்குளம் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு முஸ்லிம்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் மட்டு படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி என்னுமிடத்திலுள்ள வாவாயை அண்டிய பகுதியிலேயே  நடமாடினர்.

காலை 10 மணியளவில் இவர்களைக் கண்ட இளைஞர்கள் சந்தேகத்தில் விசாரித்த போது, இவர்கள் மாறுபட்ட விதமாக ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்ததால், இவர்களை பிடித்து வெல்லாவெளி படையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைக்காக படையினர் அவர்களை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.