தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசிடம் சொல்லியும் பயனில்லை – சாந்தி

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி L வலயம் என்ற பெயரில் தமது நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் போராட்டம் 2019 மிலேச்சத்தனமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு வகையில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சிறிலங்கா படையினரால் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களங்கள் இவ்வாறான அபகரிப்புத் திட்டத்தை மேற்கொள்வதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராசா தலைமையில் முல்லைத்தீவில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.