யாழில் போலி ஆவணங்கள் மக்களே எச்சரிக்கை

போலி ஆவணங்கள் தயாரித்து யாழில் காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடைபெற்று வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்குமாறும் யாழ். செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்டகாலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்தக் காணிகளை குறைந்த விலைக்கு விற்பதாகவும், இதனை வாங்கியவர்கள் மீண்டும் அதை தங்களின் பெயருக்கு மாற்றும் போதே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது என்றும் கூறப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு முதல் இது வரையான காலப்பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக 4 வழக்குகளை மேலதிக காணி பதிவாளர் மேற்கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.