Home Blog Page 2740

வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மையினர்

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானத்தை கற்குளம் படிவம் 1,2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பயன்படுத்தி வந்திருந்தனர் . இந்த மயானத்தை பெரும்பான்மையினத்தவர், தங்களுக்கு உரிமையானதெனவும், இந்தக் காணி தமக்குரியது என்றும் உரிமை கோரி வருகின்றனர்.

இந்த மயானத்தில் தமிழ் மக்கள் தங்கள் இறந்தவர்களை புதைத்ததுடன், அவர்களுக்கான கல்லறைகளையும் அமைத்துள்ளனர்.

கடந்த 09ஆம் திகதி  குறித்த பொது மயானத்தை அப்பகுதி தமிழ் மக்கள் துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெரும்பான்மையினத்தவர்கள் குறித்த காணி தமக்குரியது என்று தடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பெரும்பான்மையின பிரதேச சபை தலைவர், மற்றும் உறுப்பினர்கள் இந்த காணியை துப்புரவு செய்ய வேண்டாம் எனவும், இது தொடர்பாக பிரதேச சபையில்  கலந்துரையாட வேண்டியிருப்பதால் அங்கு வருமாறும் தெரிவித்து சென்றனர்.

அண்மைக்காலமாக தமிழ் மக்களின் கோவில்கள், மயானங்கள், காணிகள் போன்றவற்றை பெரும்பான்மையினத்தவர் தமக்குரியவை என்று உரிமை கோருவதுடன், அங்கு உடனேயே ஒரு குடியேற்றத்திட்டத்தையும் நிறுவுவதை காணக்கூடியதாக உள்ளது.

சிறைச்சாலைகளில் புலனாய்வுப் பிரிவினர்

சிறைச்சாலைகளில் புலனாய்வுப் பிரிவொன்றை அமைப்பது பற்றி ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சிறைச்சாலைகளில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் இந்த அமைப்பை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். இவர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு அபிவிருத்திக்கு பல மில்லியன் ஒதுக்கீடு – அபிவிருத்தியூடாக உரிமைகளை பறிக்கும் திட்டம்

வடக்கு மாகாண வீடமைப்பு பணிகளுக்காக 24ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் பல இனங்காணப்பட்டுள்ளதாகவும்  2015இற்குப் பின்னர் வடமாகாண வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கென 24ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கென விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையேஇ தேர்தல் அண்மிக்கும் நிலையில் சிறீலங்கா அரசு அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்இ அதன் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த ஆலயங்களை அமைப்பதும், அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழேயே அண்மையில் வீடுகள் கையளிப்பு செய்யப்பட்ட நிகழ்வு கம்பகாவில் நடைபெற்றது. முழுவதும் சிங்களவரே வாழும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதியான கம்பகாவில் நடைபெற்றது. இந்த வீடமைப்பு அபிவிருத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், இந்திய வம்சாவளியினருக்காகவும் என்ற சொற்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இதில் இந்திய வம்சாவளியினருக்கான என்பதே இந்த கம்பகா வீட்டுத் திட்டமாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கில் இருக்கும் போது, முதலாவது மாதிரிக் கிராமம் கம்பகாவில் அமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

தெற்கு சூடானில் சிறிலங்காவின் போர் குற்றப்படையினர்: எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான நாடுகளைச் சேர்ந்த படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என ஐ.நாவை வலியுறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தெற்கு சூடானில் ஐநா அமைதிப்படையில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கப் படையினரை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தாரெஸ் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐநா அமைதிப்படையினரின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு ஆவன செய்யும்படி வலியுறுத்துகின்றோம்.

போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனப்படுகொலைக் குற்றமும் புரிந்ததாக ஐ.நாவினால் குற்ற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரை கொண்ட நாடுகளைச் சேர்ந்த படையினரை, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தையோ ஒரு பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தையோ அவர்கள் சந்திக்கும் வரை, ஐ.நா அமைதிப்படையில் நிறுத்தாமலிருப்பதன் மூலமே, நம்பகத்தன்மையை உறுதி செய்ய இயலும் என நா.க.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்கட்டியுள்ளது.

ஒருபுறம், ஐநாவே ஒரு நாட்டைப் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டுகிறது, மறுபுறம் குற்றச்சாட்டுக்கு ஆளான அதே நாட்டுப் படைகளை அமைதிக் காப்பாளர்களாக அமர்த்திக் கொள்கிறது.
மேலும், இச்செயல் நம்பகத்தன்மையை முழுமையாகக் குலைத்து விடுகிறது, குறிப்பாக ஐநா உயராணையர் அலுவலகம், ஐநா அமைதிப்படையின் அலுவலகம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது.

சிறிலங்கா போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் புரிந்திருப்பதாக ஐ.நாவின் அறிக்கைகள் பலவும் கடந்த காலங்களில் வெளிவந்திருந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள இக்கோரிக்கை முக்கியமானதாகவுள்ளது.

வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை கட்டியமைக்க சிறீலங்கா கடும் முயற்சி

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள வந்து இறங்கியதும் நுளைவு அனுமதி பெறும் நடைமுறை இலங்கையில் 39 நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த போதும், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலினால் இந் நடைமுறை அமுலுக்கு வராமல் போனது.

இந் நடைமுறைக்கு அமைவாக ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, தஸ்யா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்டிவியா. லித்வேனியா லக்சம்பேக், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ஸ்லோபேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்éர், நியுசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை

தமிழ்நாடு கும்மிடிபூண்டி இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அகதிமுகாம் அலுவலகத்தின் முன்னால் மின்குமிழ் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மின்சாரம் செலவாகும் மின்குமிழ் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், கடைகளில் மின்குமிழ் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடைகளில் மின்குமிழ் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில்-நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் விபரம் வருமாறு,

கேள்வி: உங்கள் தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக அறிகிறோம். இதுஉண்மையா

பதில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்தகருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்கவேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன்.

அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து வெற்றிகரமாக“ எழுகதமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்று பட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.

வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்களகட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை.

எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம்அவசியமானதாக இருக்கின்றது.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன  அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.

இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ளதமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன்.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப் போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேநான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல்யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்றநிகழ்வுகளை ஒன்றுசேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக்கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றுவிரும்பினேன்.

இந்தஅடிப்படையில் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்றுபெரிதும் விரும்பினேன்.

ஆனால்,தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் EPRLF க்கும் இடையே கடந்த உள்ராட்சிசபை தேர்தலில் ஏற் பட்டமுரண்பாடுகள்,  இந்தகட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து செயற் படுவதற்கு எதிரானபிரதான சவால்களாக இருந்துவருகின்றன.

அத்துடன் எமதுதமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டுசெயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிபகிரங்கமாக கூறி இருந்தது.

இதுமுற்றிலும் தவறு. எனது அரசியலில் இதைசெய், இதைசெய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோகிடையாது.

எதுசரிஎன்றுநினைப்பதையேநான் இன்று வரை செய்து வந்துளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குநாம் விரும்பும் ஒருதீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கிய மானவை அல்ல.

அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்புஅவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத்தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திர குமார் பொன்னம்பலத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.

இதில் பல விடயங்களைநான் குறிப்பிட்டிருந்தேன். முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கைதமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒருகொள்கை அடிப்படையில் சரியானபாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.

தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன்.

இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன் வரவேண்டும்? ஆனால் இன்று வரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.

ஆனால், பத்திரிகைக்கு வழங்கிய ஒருபேட்டியில் நான் அனுப்பியகடிதம் பற்றிக்குறிப்பிட்டு எனது யோசனைகளைநிராகரிப்பதாகஅவர் கூறியிருந்ததைப பர்த்தேன்.

பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில்அண்மையில் நடந்த ஒருநிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக்கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல வேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.

இந்தநிலையில்தான், பரந்த கூட்டணி ஒன்றைஅமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டு வருவதற்குத்தான் அனுசரணை வழங்குவதாகக் கூறிஎனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார்.

அதனைநான் ஏற்றுக்கொண்டேன். பிரச் சினைகளைப்பேசித்தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒருசந்திப்பை ஏற்பாடுசெய்ய அவர் முயற்சித்தார்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலானபரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும்  பிரச்சினை களைத்தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே  இது அமையவிருந்ததால் எந்தமுன்நிபந்தனைகளும்  எமக்கு இடையே இருக்கவில்லை.

ஆனால், EPRLF கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்த போது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இது எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்படிஎந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கிய போது நடக்கஏற்பாடாகி இருந்த சந்திப்பு, ரத்துசெய்யப்பட்டது.

இந்தவிடயத்தில் நான் யாரையும் குறை கூறவிரும்பவில்லை. நல்ல ஒரு நோக்கத்துக் காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்தசந்திப்புமுயற்சிஏற்பாடாகி இருந்தது.

ஆனால், தவறான அணுகு முறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்துவிலகி எமதுகொள்கைகளை ஏற்றுச் செயற்பட விரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.

இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமதுமக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டுதான் கட்சிகள் செயற்படவேண்டும்.

அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படை யிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்க மானஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்பட வேண்டும்.

இந்தமுயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதே சமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

150 க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்

இலங்கை விமானப்படையின் விமானக்குண்டுவீச்சில் யாழ் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு நேற்று (09) மாலை இடம்பெற்றது.

1995 ஆம் ஆண்டு யூலை 9ல் இடம்பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 380 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் 24 ஆவது நினைவேந்தலும் அஞ்சலி நிகழ்வும் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது அருட்தந்தை றோய் பேடின் தலைமையில் பிரார்த்தனை இடம்பெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Navaly 2019 150 க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்

  கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? – பூமிகன்

இலங்கை அரசியலில் இப்போது அனைத்துத் தரப்பினரதும் பார்வை கோத்தபாய ராஜபக்சவின் பக்கமே திரும்பியுள்ளது. இன்றைய தினத்தில் சனாதிபதித் தேர்தல் ஓட்டத்தில் வெற்றிபெறக் கூடிய ஒரே குதிரை என்றால் கோத்தாதான் என்ற கருத்து அனைத்துத் தரப்பினரிடமும்  உள்ளது.

குறிப்பாக கடும்போக்குள்ள சிங்கள மக்கள் அவரைத் தமது பாதுகாவலனாகக் கருதுகின்றார்கள். அவருக்கிருந்த செல்வாக்கு 21-4 க்குப் பின்னர் மேலும் அதிகரித்திருப்பதையும் காணமுடிகின்றது. சிங்கப்பூரில் சிகிச்சைக்காகச் சென்ற அவர் எப்போது திரும்புவார்? வந்தவுடன் என்ன அறிவிப்பை வெளியிடுவார்? என்பதையிட்டு அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

கோத்தாதான் சனாதிபதி வேட்பாளர் என்பதை அவர் சார்ந்த சிறீலங்கா பொது ஜன பெரமுன இன்றுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அதனை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளையே பெரமுனவில் காணமுடிகின்றது. ஆகஸ்ட் 11 ஆம் திகதி இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அன்றைய தினத்தில்தான் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் தலைமைப் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றார். அந்தத் திகதியிலிருந்து சனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகளை பெரமுன ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோத்தா களத்தில் இறங்கப்போவதாகக் கூறிக்கொண்டாலும், அவருக்கான ‘கடிவாளம்’ இப்போதும் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. கோத்தா களமிறங்கவேண்டுமானால், அமெரிக்க பிரசாவுரிமையைத் துறக்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை அவர் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்கனவே கையளித்துவிட்டார். விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தூதரக வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால், அதற்கான பதில் எப்போது கிடைக்கும் என்பதற்கு உறுதியான பதில் இல்லை.

ஆனால், கோத்தாவைக் களமிறக்குவதற்கான செயற்பாடுகள் சூடுபிடிக்க, தமது “பரிசீலனை”யை விரைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்படும் என கோத்தா தரப்பினர் நம்புகின்றார்கள். கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் 12 வழக்குகள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு உட்பட இறுதியாக யஸ்மின் சூக்கா தலைமையிலான அமைப்பின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவரை அனைத்துமே பாரதூரமானவைதான். சனாதிபதித் தேர்தலில் கோத்தா களமிறங்குவதைத்  தடுப்பதை இலக்காகக் கொண்டவையாகவே இந்த மனுக்கள் உள்ளன என்பதிலும் சந்தேகமில்லை.z p04 Lasantha’s1   கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? - பூமிகன்

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கோத்தாவுக்கான குடியுரிமையை ரத்துச் செய்வதை அமெரிக்கா தாமதப்படுத்தலாம் என்று ஒரு கருத்துள்ளது. இந்த மனுக்களைத் தாக்கல் செய்தவர்களும் அவ்வாறுதான் எதிர்பார்க்கின்றார்கள். கோத்தா களமிறங்குவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுதான் இந்த வேளையில் ஒரேயடியாக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், அவ்வாறு தாமதப்படுத்தி கோத்தா போட்டியிட முடியாத ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டால், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அலையை ராஜபக்ச தரப்பு உருவாக்கிவிடலாம் என்பதிலும் அமெரிக்கா அவதானமாக இருக்கும். அது ஐ.தே.க. தரப்பில் போட்டியிடுபவரைப் பாதிக்கும். அதனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா நிதானமாகவே கையாள வேண்டியிருக்கும் என இராசதந்திர வட்டாரங்களில் ஒரு கருத்துள்ளது.

வாசிங்டனிலிருந்து இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா வெளிவிவகார அமைச்சின் உயர் மட்டக்குழு இப்போது கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது பேசப்பட்டாலும், நடைபெறப்போகும் சனாதிபதித் தேர்தல் – கோத்தாவின் குடியுரிமைப் பிரச்சினை போன்றன குறித்தும் முக்கியமாக ஆராயப்படுகின்றது.Gota 2 0   கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? - பூமிகன்

கோத்தாவுக்கான ஆதரவு எப்படியுள்ளது என்பதை இந்தச் சந்திப்புக்களின் போது அவர்கள் அறிந்துகொள்ள முற்படுகின்றனர். மறுபக்கத்தில் “அவரது குடியுரிமைப் பிரச்சினை” தீர்க்கப்பட்டுவிடுமா என்பதை அமெரிக்க குழுவினரிடமிருந்து அறிந்துகொள்ள அரசியல் தலைவர்கள் முற்படுகின்றார்கள். குடியுரிமையைத் துறப்பதற்கான விண்ணப்பத்தை அவர் கையளித்துவிட்டாலும், இன்னும் அதற்குச் சாதகமாகப் பதிலளிக்கப்படவில்லை.

கோத்தாவைப் பொறுத்தவரையில் பல தடைகளையும் தாண்டித்தான் இந்தத் தேர்தலில் அவர் களமிறங்க வேண்டியிருந்தது. முதலில் – குடும்பம், உட்கட்சிப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினை – அதாவது அமெரிக்க விவகாரம் என பல தடைகளை அவர் ஒவ்வொன்றாகத் தாண்டவேண்டியிருந்தது.

குடும்பத்தில் அவருக்குத் தலையசைத்துவிட்டாலும், முழு அளவிலான ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் தகவலறிந்தவர்கள். தேர்தல் களத்தில் இறங்குவதற்கான வேலைகளைப் பாரிய அளவில் கோத்தா ஆரம்பித்துவிட்ட நிலையில் குடும்பத்தினால்  அதனைத் தடுக்கமுடியவில்லை. அதனைவிட குடும்பத்தில் அவரைவிட பலமான ஒருவர் இல்லை என்பதும் அவரது கோரிக்கைக்கு தலையசைக்க வேண்டிய நிர்ப்பந்தம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டமைக்கு காரணம். கூட்டு எதிரணியில் வாசு, திஸ்ஸ குழுவினர் கோத்தாவுக்கு எதிரான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள். அவர்களையும் ஒவ்வொருவராக அழைத்துப்பேசி தலையசைக்க வைத்துவிட்டார் கோத்தா.

அதாவது, குடும்பம் – கட்சி என்ற இரு தடைகளையும் அவர் தாண்டிவிட்டார். மூன்றாவது தடையாக இருப்பது அமெரிக்க குடியுரிமைப் பிரச்சினைதான். குடியுரிமைப் பிரச்சினையைக் கையாள்வதிலும் அமெரிக்காவுக்குச் சில அழுத்தங்கள் நிச்சயமாக இருக்கின்றது. அதனை இலக்காகக் கொண்டுதான் இந்தனை வழக்குளும் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்விடயத்தை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் கண்காணித்துக்கொண்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து யாழ். சென்ற உயர் குழுவை சந்தித்த சி.வி.விக்கினேஸ்வரன்கூட, கோத்தாவுக்கு எதிராக பல வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அமெரிக்க குடியுரிமையை வாபஸ் பெறுவதோ சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோ அவருக்கு சாத்தியமாகாது எனக் கூறியிருக்கின்றார்.

ஆனால், கோத்தாதான் சனாதிபதி வேட்பாளர் என்ற வகையிலான பிரச்சாரங்கள் அரசியலரங்கில் சூடாகப் பேசப்படுகின்றது. கோத்தாவின் முடிவு ஐதேக எடுக்கப்போகும் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக, இலங்கையின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அடுத்த மாதம் அமையும்.

என் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு சென்று இன்றுடன் 10 மாதங்கள் ஆகின்றன என அற்புதம்மாள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். அப்போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.

அவர்களது தண்டனை காலம் முடிவடைந்த பின்னரும் இன்னும் அவர்கள் விடுதலைச் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

10 மாதங்களாகியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து அவரது தாய் அற்புதம்மாள் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் வயித்துல குழந்தை இருக்குனு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல.