என் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு சென்று இன்றுடன் 10 மாதங்கள் ஆகின்றன என அற்புதம்மாள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். அப்போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.

அவர்களது தண்டனை காலம் முடிவடைந்த பின்னரும் இன்னும் அவர்கள் விடுதலைச் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

10 மாதங்களாகியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து அவரது தாய் அற்புதம்மாள் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் வயித்துல குழந்தை இருக்குனு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல.