தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில்-நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் விபரம் வருமாறு,

கேள்வி: உங்கள் தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக அறிகிறோம். இதுஉண்மையா

பதில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்தகருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்கவேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன்.

அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து வெற்றிகரமாக“ எழுகதமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்று பட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.

வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்களகட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை.

எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம்அவசியமானதாக இருக்கின்றது.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன  அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.

இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ளதமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன்.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப் போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேநான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல்யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்றநிகழ்வுகளை ஒன்றுசேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக்கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றுவிரும்பினேன்.

இந்தஅடிப்படையில் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்றுபெரிதும் விரும்பினேன்.

ஆனால்,தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் EPRLF க்கும் இடையே கடந்த உள்ராட்சிசபை தேர்தலில் ஏற் பட்டமுரண்பாடுகள்,  இந்தகட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து செயற் படுவதற்கு எதிரானபிரதான சவால்களாக இருந்துவருகின்றன.

அத்துடன் எமதுதமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டுசெயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிபகிரங்கமாக கூறி இருந்தது.

இதுமுற்றிலும் தவறு. எனது அரசியலில் இதைசெய், இதைசெய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோகிடையாது.

எதுசரிஎன்றுநினைப்பதையேநான் இன்று வரை செய்து வந்துளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குநாம் விரும்பும் ஒருதீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கிய மானவை அல்ல.

அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்புஅவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத்தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திர குமார் பொன்னம்பலத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.

இதில் பல விடயங்களைநான் குறிப்பிட்டிருந்தேன். முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கைதமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒருகொள்கை அடிப்படையில் சரியானபாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.

தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன்.

இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன் வரவேண்டும்? ஆனால் இன்று வரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.

ஆனால், பத்திரிகைக்கு வழங்கிய ஒருபேட்டியில் நான் அனுப்பியகடிதம் பற்றிக்குறிப்பிட்டு எனது யோசனைகளைநிராகரிப்பதாகஅவர் கூறியிருந்ததைப பர்த்தேன்.

பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில்அண்மையில் நடந்த ஒருநிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக்கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல வேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.

இந்தநிலையில்தான், பரந்த கூட்டணி ஒன்றைஅமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டு வருவதற்குத்தான் அனுசரணை வழங்குவதாகக் கூறிஎனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார்.

அதனைநான் ஏற்றுக்கொண்டேன். பிரச் சினைகளைப்பேசித்தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒருசந்திப்பை ஏற்பாடுசெய்ய அவர் முயற்சித்தார்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலானபரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும்  பிரச்சினை களைத்தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே  இது அமையவிருந்ததால் எந்தமுன்நிபந்தனைகளும்  எமக்கு இடையே இருக்கவில்லை.

ஆனால், EPRLF கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்த போது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இது எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்படிஎந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கிய போது நடக்கஏற்பாடாகி இருந்த சந்திப்பு, ரத்துசெய்யப்பட்டது.

இந்தவிடயத்தில் நான் யாரையும் குறை கூறவிரும்பவில்லை. நல்ல ஒரு நோக்கத்துக் காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்தசந்திப்புமுயற்சிஏற்பாடாகி இருந்தது.

ஆனால், தவறான அணுகு முறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்துவிலகி எமதுகொள்கைகளை ஏற்றுச் செயற்பட விரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.

இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமதுமக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டுதான் கட்சிகள் செயற்படவேண்டும்.

அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படை யிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்க மானஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்பட வேண்டும்.

இந்தமுயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதே சமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.