Home Blog Page 25

Ilakku Weekly ePaper 394 | இலக்கு-இதழ்-394 | சனி, 06 ஜூன், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 394 | இலக்கு-இதழ்-394 | சனி, 06 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 394

Ilakku Weekly ePaper 394 | இலக்கு-இதழ்-394 | சனி, 06 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 394 | இலக்கு-இதழ்-394 | சனி, 06 ஜூன், 2026: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • பாடவும் ஆடவும் எழுதவும் கருத்துச்சுதந்திரமில்லையென வெளிப்படையாகவே ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அநுர ஆட்சி | ஆசிரியர் தலையங்கம் 
  • முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? | விதுரன்
  • வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் பின்னடைவுகள்.! | பா.அரியநேத்திரன்
  • இராணுவ ஆக்கிரமிப்புகளும் தமிழர் தேசத்தின் பொருண்மிய நிலையும் |  தீபச்செல்வன்
  • தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் தியாகி மாணவன் ‘பொன்.சிவகுமாரன்’ | மட்டு.நகரான்
  • மறைக்கப்பட்ட உண்மைகளும் மலையகத்தின் எதிர்காலமும் | மருதன் ராம்
  • ஆப்பிரிக்காவில் சீனாவின் டிஜிட்டல் பாய்ச்சல் – ஸ்விஃப்ட்டின் முடிவா? | தமிழில்: ஆர்தீகன்
  • அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை கொடுக்க தயாராகின்றதா ஈரான்? | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

இலங்கைக்கான புதிய சீன பாதுகாப்பு அதிகாரியுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சீனப் பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இரு அதிகாரிகளும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.

இராணுவப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரிஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம் : ரவிகரன் எம். பி.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது அந்த அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், அரசிற்கும் கொடுமையான நிலைகளே ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

மயிலிட்டி மக்களால் தமது காணிவிடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1986ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த இந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இவ்வாறு தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கை அரசானது எமது மக்களுக்கு செய்யும் கொடுமையிலும் கொடுமையான செயற்பாடாகவே இதனைக் காண்கின்றோம். கடந்த கால அரசாங்கங்கள் இந்த மக்களை மீள்குடியமர்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை

எனவே தற்போதைய ஆட்சியாளர்களாவது தங்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ‘ஹிரிகம’ என்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றும்போது ” நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து, அதனை நீங்கள் பேணிப்பாதுகாக்கவேண்டும்” என கருத்துத் தெரிவித்திருந்ததை ஊடகங்களின் ஊடாகப் பார்வையிட்டிருந்தோம்.

ஜனாதிபதி குறிப்பிட்ட அதே விடயத்தைத்தான் நாமும் கோருகின்றோம். நிலம் என்பது எமது உரிமை, எமது சொத்து, எங்களுடைய நிலத்தை எமக்குத்தாருங்கள் என்பதைத்தான் எமது மக்களும் நாங்களும் கோருகின்றோம்.

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் அனுஸ்டிப்பு

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மதநாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

வட்டுக்கேட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (5) மாலை (05.06) இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கும் தீபம் ஏற்றியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது : கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

1287e211 c3a4 4676 aadf dc6278d73cda சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது : கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் செவ்வாய்க்கிழமை (02) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அவலங்களையும்,  தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய்,  சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும், சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாட உரிமை எங்கள் உரிமை, பறிக்காதே பறிக்காதே, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து! கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு, சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா? கிளிநொச்சிக் கலைஞனை உடனே விடுதலை செய், பாடினால் சிறையா? பேசினால் கைதா? ஏதேச்சதிகாரக் கைதுகளை உடனே நிறுத்து, கலைஞர்களின் படைப்புரிமை சட்டப்பூர்வமானது, சட்டம் வழங்கிய உரிமையை அதிகாரத்தால் பறிக்காதே, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதிக்கக் கற்றுக்கொள், கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை  உடனே நீக்கு போன்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,  மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி நேற்று வெள்ளிக்கிழழை (05) போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அது இன்று சனிக்கிழமை (06)  இடம்பெற்றது.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது.

IMG 20260606 WA0008 யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!IMG 20260606 WA0004 யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றும் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.

இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்றையதினம் பிரச்சனை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வின்படி, உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதாரக் காரணிகளால், இவ்வாறு அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, சோமாலியாவில் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 2.5 மில்லியனாலும், ஆப்கானிஸ்தானில் இந்த நிலைமை 2.3 மில்லியனாலும் அதிகரித்துள்ளது.

குறித்த நாடுகளில் எரிசக்தி விலைக்கும் உணவுப் பொருட்களின் விலைக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதே இந்த நிலைமைக்கு முதன்மைக் காரணம் என உலக உணவுத் திட்டத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழ்மையான நாடுகளில் வாழும் மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிடுவதாகவும், இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அவர்கள் உண உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் கார்ல் ஸ்காவ் மேலும் விளக்கியுள்ளார்.

இதற்கமைய, மத்திய கிழக்கு நெருக்கடி வரும் நாட்களில் தணிந்தாலும் கூட, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தமை போன்ற மோசமான விளைவுகளால், எதிர்வரும் சில மாதங்களில் இந்த நாடுகளில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது.

ஜூன் மாத இறுதியில் உலகளவில் புதிதாக 45 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே நிதியுதவிக் குறைப்புகளை எதிர்கொண்டுள்ள உலக உணவுத் திட்டம், இந்த மனிதாபிமான நெருக்கடியைத் தடுப்பதற்காக சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

பசியை ஒழிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உலகளவில் செயற்பட்டு வரும் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) என்பது குறிப்பிடத்தக்கது.

சஹாரா பாலைவனத்தில் குடிநீரின்றி தவித்த 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், வடக்கு நைஜரில் தங்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையிலான முக்கிய எல்லைக் கடப்புப் பகுதியான அசாமாகாவிலிருந்து (Assamaka) மேற்கே 80 கிலோமீட்டருக்கும் (50 மைல்) அதிகமான தொலைவில் அந்தக் குழுவினர் சிக்கிக்கொண்டனர்; இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-அதா (பக்ரீத்) கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் தண்ணீர் தீர்ந்துபோனது.

“தீவிரமான வெப்பநிலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் இல்லாத சூழல் காரணமாக உயிர் வாழ்வது மிகவும் கடினமாக உள்ள பகுதியின் மையப்பகுதியில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்,” என்று அகடேஸ் (Agadez) ஆளுநர் கூறினார்.

இதில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அவர்கள் பாலைவனத்தைக் கடந்து அசாமாகாவை அடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களது சடலங்கள் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பாடகரான சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று சனி்க்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தனன் (24) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்னமும் அவ்வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாத நிலையில், பயங்கரவாதத்டைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கும் இக்கைது குறித்து அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் அரச பயங்கரவாதத்தினால், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட கலைஞனை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்’ எனும் மகுடத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி, பழைய கச்சேரிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து  நேற்றைய தினம் (5), மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றன.

அதன்போது 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து சிறுவர்களுடைய மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, 296 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 290 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, எலும்புக்கூடு ஒன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்றும் மீட்கப்பட்டு, அது சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (06)அகழ்வுப் பணிகள் இடம்பெறாது எனவும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.