Home Blog Page 2424

சிரிய அரசுப் படைகள் அலெப்போவில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றின

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அலெப்போ பகுதியின் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரிய அரசு ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலேப்போ பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிபர் ஆசாத் படைகள் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாகவும், இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமடைந்ததாகவும் சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவை புறக்கணியுங்கள் – ஐ.தே.க கோரிக்கை

சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் அமெரிக்காவுக்கான நுளை அனுமதிக்கு விண்ணப்பம் செய்வதை நிறுத்தி அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாhளுமன்ற உறுப்பினர் எம் மலிக்கர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நுளைவு அனுமதி வழங்கப்படும் வரை சிங்களவர்கள் இந்த புறக்கணிக்பை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் இந்த தடையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சியை கொண்டுவந்து தீர்வை தரும் என நம்பி அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களின் முகத்தில் ஐ.தே.க கரியை பூசியுள்ளதையே மலிக்கரின் கருத்து பிரதிபலிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறுகின்றது சிறீலங்கா

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது மெற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து வெளியேற சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

நேற்று (17) சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற அசவர கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிறீங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30/1 மற்றும் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து வெளியேறவே தாம் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா உட்பட பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.நா தீர்மானம் கலப்பு நீதிமன்ற விசாரணைகளை கொண்டுள்ளதுடன், அரச தலைவரின் அதிகாரங்களை குறைத்து அதிகாரங்களை பரவலாக்கும் சரத்துக்களையும் கொண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சிறீலங்கா அரசின் தீர்மானத்தை அடுத்த வாரம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும்.

சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரையிலுமான ஏறத்தாழ 4 மாத காலத்தில் பல படைத்துறை அதிகாரிகள் சிறீலங்காவுக்கு உயர் மட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திர தினத்திற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரபு உலகத்தின் வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகள் மீது மேற்குலகம் மேற்கொண்ட, தமக்கு ஆதரவான அரசுகளை உருவாக்கும் முயற்சி, சிரியாவில் இடம் பெற்று வரும் போரில் தடம் புரண்டுள்ளது. ஈரான் விவகாரத்திலும் அவர்களால் அதிகம் முன்நகர முடியவில்லை.

இவை இரண்டுக்கும் காரணம் ரஷ்யாவின் உள்நுழைவாகும். அதாவது ஈராக், லிபியா என மேற்குலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, பார்வையாளராக இருந்த ரஷ்யா சிரியா விவகாரத்தில் நேரிடையாக களமிறங்கியதுடன், ஈரான் விவகாரத்தில் ஈரானுக்கு தனது ஆயுத தொழில் நுட்பங்களை வழங்கி பலப்படுத்தியுள்ளது.

சிரியாவின் விவகாரத்தை பொறுத்த வரையில் ஏறத்தாழ 12 நாடுகள் இந்த போரில் பங்கெடுத்து வருகின்ற போதும், அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, கட்டார், ஈரான் ஆகிய நாடுகள் நேரிடையாக பங்கெடுத்து வருகின்றன.

இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என அமெரிக்கா களமிறங்கிய போதும், அவர்களின் உண்மையான நோக்கம் சிரியாவில் தமக்கு சார்பான ஆட்சியை கொண்டு வருவதே.91c53ac51187464fbee89142e2785199 18 அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆனால் ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கியதால் கள நிலமை மாறிவிட்டது. அதே சமயம், ஆட்சி மாற்றம் என்ற அமெரிக்காவின் உள்நோக்கம் அறிந்த துருக்கியும் ரஷ்யாவின் பக்கம் நிலையெடுக்க தலைப்பட்டது. அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்ற போதும், அமெரிக்காவின் எதிர்ப்புகளையும் மீறி ரஷ்யாவின் எஸ் 400 என்ற அதி நவீன ஏவுகணைகளை துருக்கி பெற்றுக் கொண்டது.

அதாவது தமக்கு ஆதரவான பூகோள சக்திகளை இணைப்பதன் மூலம் தமது வர்த்தக மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதே இந்த போரின் பின்னுள்ள நோக்கம்.

எனவே தான் தற்போது சிரியா விவகாரம் தொடர்பில் ரஷ்யாவும் துருக்கியும் முரண்பட்டுள்ள நிலையில், அதனை தனக்கு சதகமாக்க முயன்று வருகின்றது அமெரிக்கா. அதற்காக அமெரிக்கா தனது சிறப்புத் தூதுவரை துருக்கிக்கு அனுப்பியிருந்தது. அதாவது துருக்கியை ரஷ்யாவின் பக்கமிருந்து நகர்த்தும் திட்டம் இது. இந்த நிலையில் தான் தற்போது ரஷ்யாவின் பார்வை சிறீலங்கா மீது பதிந்துள்ளது.

ஒக்டோபர் மாதம் ரஷ்யாவின் அனைத்துலக படைத்துறை ஒத்துழைப்பு பிரிவு அதிகாரிகள் கேணல் மக்சீம் பென்கின் தலைமையில் சிறீலங்கா வந்திருந்ததுடன், இரு தரப்பு படைத்துறை ஒத்துழைப்புகள் குறித்த கரந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் இடம் பெறும் இந்த கலந்துரையாடல்களில் இரு தரப்பு பயிற்சிகள், படைத்துறை உதவிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால் போர்க் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட மற்றுமொரு சிறீலங்கா இராணுவ அதிகாரியான கமால் குணரட்ணவை

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் பாதுகாப்புச் செயலாளராக நியமித்தவுடன், சிறீலங்காவுக்கான ரஷ்யாவின் தூதுவர் யூரி மெற்றெரி அவரை சந்தித்திருந்தார். கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் இடம் பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டது.

அதன் பின்னர் ரஷ்ய இராணுவத்தின் தளபதியான ஜெனரல் ஒலெக் சலுகோவ் சிறீலங்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொண்டது மிகவும் முக்கியமானது. சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திர தினத்தில் பயணம் மேற்கொண்ட குழுவில் தரைப்படையின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் விளமிடீர் சிறிடோவ், கேணல் இகொர் ஸ்ரின் ஆகியோர் அடங்கியிருந்ததுடன், சிறீலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவின் 62 ஆவது ஆண்டு நிகழ்வையும் அவர்கள் கொண்டாடியதுடன், சிறீலங்கா அரச தலைவரையும் சந்தித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்ய படையினரின் பொறியியல் பிரிவினர் சிறீலங்காவுக்கு வருகை தந்ததுடன், வன்னிக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். லெப். ஜெனரல் லூறி ஸ்ரவிற்ஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் கண்ணி வெடிகளை அகற்றும் பயிற்சி என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்தனர்.russia 2020 1 அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இதனிடையே, சிறீலங்காவில் அணுசக்தி மின்னிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தாம் ஆய்வு செய்து வருவதாக சிறீலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெற்றெரி தெரிவித்துள்ளார்.

அதாவது ரஷ்யாவின் இந்த நகர்வுகள் என்பது அண்மையில் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அமைத்துக் கொண்ட புதிய வர்த்தக கூட்டணியின் திட்டமாகும் என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவுக்கு அதிக நேரம் எடுக்காது.

எனவே தான் கடந்த வாரம் ஊகவியலாளர்களிடம், பேசிய அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள், மிலேனியம் சலஞ்ச் உடன்படிக்கை தொடர்பில் அவசரம் காண்பித்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் பிரசன்னத்தை தென்னாசியாவில் தடுப்பதில் மேற்கூறப்பட்ட மூன்று நாடுகளுக்கும் தொடர்புகள்  உண்டு.

அமெரிக்காவின் உன்படிக்கைக்கு எதிராக பௌத்த துறவிகள் போராட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தது அமெரிக்காவுக்கு அதிக சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதவாது சிறீலங்காவின் அரசியலில் பௌத்த துறவிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்லா மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு  பயணத்தடை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சில்வா அதிகளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் பூகோள அரசியல் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதற்கான அடையாளம் தான் இந்த அறிவிப்பு. ஆனால் இதனை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றனர் என்பது தற்போது முக்கியமானது.

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரில் அமெரிக்கா தனது ஆதாரங்களை முன்வைத்து சிறீலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் அமெரிக்காவிடம் முன்வைக்க வேண்டும்.

அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

வைரசுக்கள் தாமாக வாழ முடியாதவை. இன்னோர் உயிருள்ள அங்கியின் உடலினுள் சென்றால் மட்டும் வாழக்கூடியவை. ஒரு உயிருள்ள அங்கியினுள் புகும் வைரசு அந்த அங்கியினை பயன்படுத்தி  தன்னை பெருக்க ஆரம்பிக்கும். இந்த அங்கிதான் விருந்து வழங்கி. வைரசுக்கள் மனிதர்களை மட்டும் விருந்து வழங்கியாக பயன் படுத்துவதில்லை.

வேறு விலங்குகளையும் விருந்து வழங்கியாக பயன்படுத்தும். வைரசுக்கள் விருந்து வழங்கியை பயன்படுத்தி தன்னை பெருக்கும் போது அதன் விளைவாக எங்களின் உடலில் நடைபெறும் மாற்றங்களே எமக்கு நோயை விளைவிக்கின்றன.  எனவே வைரசு  நோய் வராது இருக்க வைரசுக்களை உடலினுள் புகவிடாது தடுத்தல் சிறந்தவழி என்பது சரி. அதற்காகவே முகக்கவசமிடுதல், சாப்பிட முன்பு நன்றாக கைகளை கழுவுதல், நோயாளிகளின் அருகில் செல்லாதிருத்தல் போன்ற அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.  ஆனால் அதனையும் தாண்டி உடலினுள் புகும் வைரசினை என்ன செய்வது?. எப்படி அந்த வைரசிடமிருந்து தப்புவது?

இப்போது முன்னைய காலம் தொடர்பாக சிந்தியுங்கள். அந்தக்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பரிகாரிகள்  வாழ்ந்தார்கள். நோய்கள்  வரும்போது இவர்களிடம் சென்றால் மருத்துவம் செய்வார்கள். செலவும் குறைவு. இவர்களுக்கு தனித்த ஒரு மதிப்பு என்று  கிடைப்பதில்லை. மருத்துவம் என்ற அடிப்படையில் நாம் அவர்களை நம்புவதும் இல்லை. இன்றும் ஊரில் வாழ்ந்து கொண்டு, சித்த மருத்துவம் அல்லது ஊர் மருத்துவம் செய்பவர்கள் மதிக்கப்படுவதில்லை.maxresdefault 2 அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

ஆனால் பல்கலை கழகங்களில் கற்று ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர்கள் எம்மால் மிகவும் மதிக்கப்படுவார்கள். ஐயா  மிகவும் படித்தவர் என்ற எண்ணம் எங்களிடம் வலிமையாக உள்ளதால் நாம் அவர்களை நம்புகின்றோம். அவர்களின் ஆலோசனைக்கும் மருந்துகளுக்கும் அடிமையாகின்றோம்.

உண்மையில் எல்லா மருத்துவத்தையும் தாண்டிய சக்தி வாய்ந்த ஒன்று எங்கள் உடல் என்று எமக்கு தெரிவதில்லை. அதன் ஆற்றலையும் நாம் விளங்கிக்கொள்ளவதில்லை. தேவையற்று மருந்துகளை உண்பது எங்கள் உடலின் ஆற்றலை கெடுக்கும் என்பதும் எமக்கு புரிவதில்லை. ஊர் வைத்தியர்கள் வழங்கும் மருந்துப்பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டச்செய்யும். ஆபத்துகளை விளைவிப்பது குறைவு. அப்படி என்ன நோய் எதிர்ப்பு ஆற்றல்கள் எங்கள் உடலில் உண்டு?.

மனித உடலினுள் வெளிப்பொருட்கள் புகுவதற்கு பலவழிகள் உண்டு. தினம்தினம் நுண்ணுயிர்கள் உடலில் புகுந்த வண்ணமே உள்ளன. எமது உடலின் எதிர்ப்புத்தன்மை அவற்றை எல்லாவற்றையும் தடுத்த படிதான் உள்ளது. நோயிலிருந்து பாதுகாத்துதான் வைத்திருக்கிறது.  ஆனாலும் அதனையும் மீறி நுண்ணுயிர்கள் உடலினுள் நுழைக்கின்றன.

நுண்ணுயிர்கள் புகுந்து உடலின் உட்செல்ல   சுவாசவழி மிகவும் இலகுவானது.  நோய்க்கிருமிகள் நேரடியாக உடலின் உட்புறம் சென்று சேர்ந்துவிடும். ஆனாலும் சுவாசப்பாதை கிருமிகள் புகுவதை தடுக்க பலதடைகளை இயற்கையாகவே கொண்டிருக்கும். அதாவது  மூக்கிலிருந்து வளி சென்றடையும் சுவாசப்பாதை எல்லைவரை பிசிர்கள், ஓட்டும் தன்மையுள்ள சளி என்பன உண்டு. இங்கு கிருமிகள் புகுந்தவுடன் அவற்றை சளிமூலம் ஒட்டச்செய்து பிசிர்களால் அசைத்து வெளித்தள்ளிவிடும். எனவே   இவற்றை தாண்டித்தான் கிருமிகள்  உட்பிரவேசிக்கவேண்டும்.Immune System 600 அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

இந்த தடைகளை வெற்றிகரமாக தகர்த்து நோய் கிருமிகள்  உட்பிரவேசித்தால் அடுத்து என்ன?. எங்கள் உடலில் இருக்கும் சிலகலங்கள் வெளியிலிருந்து வந்த கிருமியை கண்டுபிடித்துவிடும். கிருமி வந்த செய்தி உரிய பகுதிக்கு அறிவிக்கப்படும்.  அதேபோல் உடலுக்குள் புதிதாக நுழையும்  கிருமிகளை  கட்டுப்படுத்தும் கலங்களும் இருக்கும். இக்கட்டுப்படுத்தும் கலங்கள் உடனடியாக விரைந்து வந்து கட்டுப்படுத்த தொடங்கும்.

இதுதான் நோய் தொற்று நிலை. அதாவது எங்கள் உடல் வழமைக்கு மாறான பல மாற்றங்களை காட்டும். இதேவேளை தொற்றியுள்ள கிருமி எது? எந்தக்  கலம் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது? என்ற ஆராய்ச்சியும்  உடலுக்குள்ளேயே நடக்கும். இந்த ஆராய்ச்சி மூலம் தொற்றியிருக்கும் கிருமியை அழிக்கும்  ஆற்றல் உள்ள கலங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் உற்பத்தி ஊக்குவீக்கப்படும். உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிரிகள்  உடனையாக நோய்த்தொற்று உள்ள இடத்துக்கு அனுப்பப்படும். இதனால் தான் புதிய நோய் ஒன்று தொற்றும்போது குறைந்தது மூன்று நாட்களில் இருந்து ஏழு நாட்கள்வரை நாம் பொறுமை காக்கவேண்டும். அதாவது உட்புகுந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டு சரியான முடிவு கண்டறிய உடல் எடுக்கும் கால அளவு  அது.

இதற்குள் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படின் எங்கள் உடலே  வந்த கிருமிகளை சிதைத்து அழிக்கும். அதேவேளை தொற்றிய கிருமி பலம் வாய்ந்ததாயின் உடல் கலங்களை தாக்கி மேலும் முன்னேறி தீவிர நோயை விளைவிக்கலாம். உடலும் அதற்கு எதிராக தொழிற்பட தயங்குவது இல்லை. இது எங்கள் உடலின்  நோய் எதிர்க்கும் ஆற்றலில்தான் தங்கியிருக்கும்.

இதன் விளைவு நோய் நீங்குதல் அல்லது இறப்பாக அமையலாம். மேலும் ஒருமுறை தாக்கிய அதே நோய்க்கிருமி  மீண்டும் வரும் எனின் உடனடியாக அவற்றை அழிக்கும் வல்லமை உடையதாக எமது உடல் இருக்கும். காரணம் எங்கள் உடலில் முன்பே இந்தக்  கிருமிகள் ஊடுருவியுள்ளதால் உடல் இலகுவாக இனம்கண்டு எதிர்தாக்கத்தை ஆரம்பிக்கும். அநேகமான  வைரசு நோய்களுக்கு இது பொருந்தும். இதனால் சிறிதளவு நோய்நிலை தோன்றலாம் அல்லது நோய் வராது போகலாம். ஆனால் இது எங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் தங்கியிருக்கும். cotona 2 1 அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

தற்காலத்தில் நோய் வந்தவுடன் மாறவேண்டும் என்று நாம் சிந்திக்கின்றோம். உடலில் இருந்து நோயை பிடுங்கி எறியவேண்டும் என்று விரும்புகின்றோம். இதனால் மருத்துவரே கதி மருந்தே வழி  என்று நினைக்கின்றோம். இதன் விளைவாக  எங்களின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நாமே குறைத்துக் கொள்கின்றோம். இதேவேளை  விசகடி  வைத்தியர் ஒருவர் எனக்கு  சொன்ன ஒரு செய்தியை கூறவிரும்புகின்றேன்.

அந்த வைத்தியர் நாட்டு மருத்துவம் செய்பவர். நாட்டு மருத்துவர்கள்  சில நடைமுறைகளை வைத்திருப்பார்கள். அதாவது ஒருவர் பாம்புக்கடிக்கு ஆளாகி அவரிடம் வந்தால் அவருக்கு மருந்து கொடுப்பார்கள். தங்கள் வீட்டில் தங்க வைத்திருப்பார்கள். பாம்பினால் கடியுண்டவரை   மற்றவர்கள் பார்க்க  அனுமதிக்க மாட்டார்கள். மருத்துவரிடம் காரணம் கேட்டேன். சொன்னார். பாம்பினால் கடியுண்டு என்னிடம் வருபவருக்கு மருந்து வழங்குவது மட்டுமல்ல, இதனால் ஒன்றும் உனக்கு ஆபத்தில்லை என்று நம்பிக்கையூட்டி,  அவரை சமாதானப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால்  பாம்பினால் கடியுண்டவர்கள் தாங்கள் இறந்துவிடுவோம் என்று பயப்படுவது வழமை.

இவ்வாறு மருத்துவ சிகிச்சை பெற்று தனது வீட்டில் தங்கி இருக்கும் ஒருவரை பார்க்க வரும் இன்னொருவர் வாசலுக்குள் வரும்போதே குளறி அழ ஆரம்பிப்பார். அதுவும் சும்மா அல்ல, “மலையான மலையடா, உன்னையே பாம்பு கடிச்சு   சரிச்சு போட்டுதடா. இனி எப்ப பாக்கப் போறனெண்டு  ஏங்கிப்போனன்” இப்படியான  வார்த்தைகளை கேட்டதும் ஏற்கனவே பயத்துடன் இருந்தவர் இன்னும் பயப்படுவார்.  எனவே அவரை தேற்றி மருந்து செய்வது மிகவும் கடினம். எனவே நோயாளியை நம்பிக்கையான நிலையில் வைத்தே மருத்துவம் செய்யவேண்டும் என்று கூறுவார்.  ஆனால் இன்று அப்படி அல்ல. நோயாளிக்கு தனது நிலை தெரியவேண்டும் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லவேண்டும் என்கிறார்கள்.

அதன்பின் அவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் என்கிறார்கள். இதுதான் இன்றைய வைத்தியமுறை. அவுத்திரேலியாவில் எனக்கு தெரிந்த ஒரு பெண் கூறினார். தனது கணவருக்கு புற்று நோய் மருத்துவ மனையில் இருந்தார். இறுதி நாளில் நடந்த சம்பவம். கணவர் வாந்தி எடுத்துள்ளார்.

அந்த வாந்தி வழமையிலும் வேறுபாடாக இருந்தது. அதனை  பார்த்த மருத்துவர் சாவு நேரம் நெருங்கிவிட்டது என்று அவருக்கு நேரடியாகவே  சொன்னாராம். அந்த வேளையில் தான் கணவர் தன்னை பார்த்த ஏக்கம் தாங்கமுடியவில்லை என்று சொன்னார்.  அதன்பின் தன் கணவர் தன்னுடன் எதுவும் பேசவில்லை. சாகப்போகின்றேன் என்ற  ஏக்கத்துடன் இறந்துபோனார் என்று சொன்னார்.

எனவே நோய்க்கு பயந்து ஏங்குவதை தவிர்த்து, மருத்துவத்தை நம்பி ஏங்கி அலைவதிலும், நம்மையே நம்பி உடலை பாதுகாத்து, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதே  சிறப்பு.

 

சவேந்திர சில்வா தொடர்பில் விக்னேஸ்வரனின் தகவல்

சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டுள்ளார் என்பதை அடையாளம் கண்டதையிட்டு நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்.

மேலும் 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு ஒலிபரப்பு செய்த போது பின்வரும் சில்வாவின் கட்டளையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில்வாவின் இந்தக் கட்டளையானது அப்பாவி பொது மக்களையும் சரணடைந்த போராளிகளையும் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களையும் படுகொலைகளுக்கு இடமளித்தது.

இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுளது.

இதில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த நல்லகுமார் நிஷாந்தன் வயது 18 என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

மேல்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பாதுகாப்பற்ற முறையில் சுற்றப்பட்டிருந்த மின்சார வயரில் கால் பட்டதனால் , ஈர நிலத்தில் நின்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

திடீரென மின்சாரம் தடை பட்டதை அடுத்து அங்கு கடமையிலிருந்த பணியாளர்கள் மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞன் துடிதுடித்துக் கொண்டு இருப்பதை கண்டுள்ளனர்.

அவரை எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்து இருந்த போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குளிர்பான விற்பனை நிலைய நிர்வாகத்தினரின் அசட்டையீனம் காரணமாகவே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழக்க காரணம் என முதற்கட்ட பொலிஸ் விசாரணையில்

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கடுமையான வெப்பம் நிலவுவதாகவும் மார்ச் மாதம் இறுதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக வியர்வை ஏற்படும் வேலைகள் செய்ய வேண்டாம். விளையாட்டு மாத்திரமின்றி வீதிகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும். பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளின் போது அதிக வெயில் இல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

வெளியில் இருப்பவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும். இல்லை என்றால் உடலை குளிர்ச்சிப்படுத்தும் பானங்களை பருக வேண்டும். நீர் சுரக்காய், பப்பாசி பானம், நெல்லி பானம், இளநீர் ஆகியவற்றை அதிகமாக பருக முடியும்.

முடிந்த அளவு அனைவரும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஒன்றரை லீட்டர் நீரை நாளாந்தம் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தார்மீகப் பொறுப்பிலிருந்து இந்தியா தப்பிச் சென்றுவிட முடியாது: விக்கினேஸ்வரன்

இறுதிப் போர் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்புக் கூறல் சம்பதமாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்படவேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாகப் பொறுப்புக் கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்தவேண்டும். இதுவே இந்தியாவுக்குப் பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் தாம் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையிலேயே அவர் இப்படிக் கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்துதப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது.

1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் காட்டி போராட்ட இயக்கங்களை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஆயுதப்போராட்டத்தைக் கைவிடச் சொன்னது இந்தியாவே. இந்தியாவின் நேர்மை மீது நம்பிக்கை இழந்த புலிகள் இந்தியாவுடன் நேரடியாக மோதிய காரணத்தினால் இந்தியா-இலங்கைத் தமிழ் மக்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமை காரணம் என்று பலர் எழுதி இருக்கின்றார்கள். அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதில்வெற்றி கண்டார் என்று சிலர்கூறுவதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. பின்னர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதும் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசல் அடைந்ததுடன் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை நீண்ட காலம் இந்தியா கடைப்பிடித்தது.

ஆனால், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படு கொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது.

யுத்தத்தை நிறுத்துவதற்கான பல வெளிநாட்டு ராஜதந்திர முயற்சிகள் நடைபெற்றபோதும் இந்தியா அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் குந்தகமாக செயற்பட்டமை வெள்ளிடைமலையான ஒரு உண்மையே. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் அப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தமையும், எமது நாட்டு அரசியல் வாதிகள் இந்திய உயர்ஸ்தானிகர்களை உச்சி குளிரச் செய்து எம்நாட்டுத் தமிழர்கள் பற்றிப் பிழையான கருத்துக்களை அவர்களுக்குப் புகட்டி வந்தமையும், இலங்கை அரசுகள் சீனாவைப் பயன்படுத்தி பூச்சாண்டி காட்டி இந்திய அரசை இலகுவாக ஏமாற்றி வந்தமையும் இந்த வரலாற்றுத் தவறுக்கான காரணங்கள் எனலாம்.

இதே ஏமாற்று வித்தையை தற்போதும் இலங்கை அரசு பயன்படுத்த எத்தனித்து வருகின்றது. ஆனால், மோடி தலைமையிலான அரசும் தற்போதுள்ள இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்றே நம்புகின்றேன். ஆனாலும், எமக்கு எதிராகத் தொடரும் இன அழிப்பைநிறுத்தி எமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்குக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்காமல் ஒரு சில கூற்றுக்களைக் கூறிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றமை எமக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

1987 இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக வந்த 13வது திருத்தத்தின் மூலம் கிடைத்த குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட மாகாண சபை அமைப்பை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு இன்று இல்லை. அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர், கிராம சேவகர் போன்றோர் இப்போது மாகாண அரசின் அதிகாரத்தின்கீழ் இல்லை. கல்வி சுகாதாரத் துறைகள் சம்பந்தமாக மாகாண சபைக்கு தரப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுள்ளன. 13ஆவது திருத்தத்தின் கீழ் தரப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் அன்றிலிருந்து தரப்படவே இல்லை.

அதே போல 16ஆம் திருத்தத்தின் மூலமாக கூறப்பட்ட மொழி உரிமைத் தத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழே ஆட்சி மொழி என்ற அரசமைப்பின் 22ஆவது விதி கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. மத்தியில் இருந்து கடிதங்கள் பல தடவைகள் மாகாணத்திற்குத் தனிச் சிங்களத்திலேயே இன்றும் அனுப்பப்படுகின்றன. 99 வீதம் தமிழர் வாழும் பிரதேசங்களில் கூட தமிழைப் பெயர்ப்பலகைகளில் முதலாவதாக எழுதக்கூடமுடியாதுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30/01 தீர்மானத்தினை இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அதில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அது எடுத்து வரும் நிலையில், இந்தியாவின் ஆதரவினைத் தமக்கு அது சம்பந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக பிரதமர் மஹிந்த ராஜபகஷவின் அண்மைய விஜயம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எம்மக்கள் மத்தியில் இருக்கின்றன.

ஆனால், மனித உரிமைகள் சபையின் ஏனைய உறுப்பு நாடு களுடன் சேர்ந்து மனித உரிமைகள் சபையின் ஊடாக இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்பட வேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக் கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.

இந்தியா எது செய்தாலும் இலங்கை அரசுகள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும். எவ்வளவுதான் இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கினாலும் இலங்கையின் சிங்கள அரசுகள் இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்ப்பன. ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமாட்டார்கள். எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக்கொண்டு வரலாம்.

அண்மையில் ஒரு அரசதலைவர் வருகின்றபோது கடைப்பிடிக்கவேண்டிய சில இராஜதந்திர சம்பிரதாய வரைமுறைகளையே இந்தியா மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளித்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் இருக்கிறார்.

அவரது திறமை, சாணக்கியம், ராஜதந்திரம் ஆகியவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்வர். ஆகவே, இந்திய வெளியுறவு அமைச்சர் எமது பிரச்சினையைத் திறம்பட கையாள்வார் என்று நாம் நம்புகின்றோம். இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்பதை கடந்தகால பட்டறிவிலிருந்து இந்தியா உணர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன். அதற்கேற்ப திரைமறைவில் நகர்வுகளை மேற்கொள்வர் என்பது எனது எண்ணப்பாடாகும். ஆனால் அதற்காகநாம் விரும்பும் எல்லாம் எமக்குக் கிடைக்கும் என்பதல்ல இதன் அர்த்தம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கேற்ப நாம் திரும்பத்திரும்ப எமது நிலைப்பாடுகளை அவர்களிடத்தில் வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

எமது நிலைப்பாடுகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். என்றோ ஒருநாள் எமக்கான கதவு திறக்கப்படும். ஆனால், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம் பெற்றுக்கொண்ட சலுகைகள், சுக போகங்களுக்காக இலங்கை அரசுக்கு எதிர்ப்புகள் காட்டாமலும் “விலாங்கு மீன் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல’ செயற்பட்டு வந்துள்ளார்கள். சலுகைகளுக்காக தமது மெளனத்தை இதுகாறும் இவர்கள் விலை பேசி விற்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டாவைப் பலப்படுத்தவே தேர்தலில் களமிறங்குகிறோம்; மைத்திரி அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரித்தானியர்களிடம் சுதந்திரம் பெற்று நாடு என்ற ரீதியில் நாம் தலைத்தூக்கிக் கொண்டிருக்கும்போதுதான், யுத்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

30 வருடங்களுக்கும் மேல் நீடித்த இந்த யுத்தம்தான் இலங்கையை வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளியது. மக்களை ஏழைகளாக்கியது. யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட கடன்களை நாம் இன்றும் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகுமே ஒழிய, இயற்கையாக தோன்றியதல்ல.

அரசுகள் எவ்வளவு சிறப்பான திட்டங்களைக் கொண்டுவந்தாலும், இதன் பலனை மக்களால் முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளது. நாம் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டாலும், நாடு என்பதற்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காகத் தான் நாம் மீண்டும் பொதுத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானிக்கவுள்ளோம். ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் தீர்மானித்தேன்.

எனினும், எமது கட்சியினர் என்னிடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்கவே நான் மீண்டும் களமிறங்கவுள்ளேன். அத்தோடு, புதிய ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டில் நான் அனுபவித்ததைப் போன்ற சவாலுக்குத்தான் தற்போது முகம் கொடுத்து வருகிறார். எனினும், அப்போது எனக்கு மஹிந்த ராஜபக்ஷ முழுமையான ஆதரவினை வழங்கிய காரணத்தினால்தான் வரவு – செலவுத் திட்டத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருந்தது.

இந்த ஒத்துழைப்பு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைப்பதில்லை. இதனால்தான் நாம் அவரைப் பலப்படுத்த தீர்மானித்துள்ளோம். புதிய அரசொன்று வந்தவுடன், அதனை கவிழ்க்கத்தான் அனைவரும் முற்படுகிறார்கள். இது கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும். நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாம் ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும். அதற்கிணங்க, பொதுத்தேர்தலில் நாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, புதிய ஜனாதிபதியை பலப்படுத்தவே தீர்மானித்துள்ளோம்” என்றார்.