இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கடுமையான வெப்பம் நிலவுவதாகவும் மார்ச் மாதம் இறுதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக வியர்வை ஏற்படும் வேலைகள் செய்ய வேண்டாம். விளையாட்டு மாத்திரமின்றி வீதிகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும். பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளின் போது அதிக வெயில் இல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

வெளியில் இருப்பவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும். இல்லை என்றால் உடலை குளிர்ச்சிப்படுத்தும் பானங்களை பருக வேண்டும். நீர் சுரக்காய், பப்பாசி பானம், நெல்லி பானம், இளநீர் ஆகியவற்றை அதிகமாக பருக முடியும்.

முடிந்த அளவு அனைவரும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஒன்றரை லீட்டர் நீரை நாளாந்தம் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.