Home Blog Page 2389

நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

ரஸ்யாவுடனான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ படையினர் திட்டமிட்டபடி தமது போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (13) காலை பிரித்தானியாவில் உள்ள வான்படைத் தளத்தில் அமெரிக்காவின் மிக நவீன உருமறைப்பு பி-2 என்ற போர் விமானம் தரையிறங்கியுள்ளது.

image 1d2669a2ca நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்காimage c7b195ced3 நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

போத்துக்கல்லில் உள்ள அமெரிக்காவின் தளத்தில் இருந்து சென்று குண்டு வீச்சு ஒத்திகைகளை மேற்கொண்ட விமானம், பிரித்தானியாவின் குளொச்செஸ்ரர் பகுதியில் உள்ள வான்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ.சூசைதாஸ் இன்று கட்டளையிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண மதலமைச்சருமான சந்திரகாந்தன் உட்பட 5வேரை சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியைக் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வழக்கை எடுத்துக் கொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியதுடன் இந்த வேட்புமனுத் தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும், அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் 8 பேர் போட்டி

வடக்கும் கிழக்கும் சேர்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அதைப் பலமாக்குவதற்கும் வரும் காலத்தில் வடக்கும் கிழக்கும் கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்படக் கூடியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் காரியாலயத்தில் நேற்று (12) முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சி.வி. விகினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன் 4 கட்சிகள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அப்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்சி சேரவில்லையே என ஆதங்கத்தோடு இருந்தோம். அந்த ஆதங்கத்தை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கை தமிழர்கள் முற்போக்கு கூட்டணி எங்களுடன் சேர்ந்துள்ளது.

அதனடிப்படையிலே சேர்ந்து எங்கள் நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்ற பலமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் நூற்றுக்கு 17 சதவீதம் என்பதால் நாங்கள் தமிழ் கட்சிகளுடன் சோர்ந்து போட்டியிடுவதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவமான ஒன்றும் இல்லாமல் போய்விடும் ஆகவே தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய யாராவது ஒருவரை ஆதரவு கொடுக்க யோசித்திருக்கின்றோம்.

திருகோணமலையில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை ஆகவே நாங்கள் சிலரை அடையாளப் படுத்தியுள்ளோம். அவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கொடுப்பதா இல்லையா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியும்.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் நாங்கள் அதிதீவிரமாக போட்டியிடுவோம் எங்களுக்கு போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

அதேவேளை எமது கட்சியின் இணை செயலாளர் சீ. சோமசுந்தரத்தை பிரதம வேட்பாளராக நியமித்திருக்கின்றோம். பிரதம வேட்பாளர் ஒரு அரசியல் ரீதியாக உத்தியோக பூர்வமாக இல்லாவிடினும் மக்கள் ரீதியாக நன்மைகள் பெறலாம் என சோ.கணேசமூர்த்தி நினைக்கின்றார் அவ்வாறான தர்னத்திலே இணை வேட்பாளராக தம்மை காட்டிக் கொள்ளமுடியும். ஆனால் சோமசுந்தரம் பிரதம வேட்பாளராக செயற்படுவார்.

தமிழ் தேசிய கொள்கைக்காக கட்சி உருவாக்கப்பட்டது ஆகவே அந்த கொள்கைகளுக்கு எதிரான விதத்திலே கடந்த காலங்களில் நடந்து கொண்ட சிலர் இருக்கும் கட்சிகளுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்புகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்கள் என்ற முறையிலே நாங்கள் பாராளுமன்றம் சென்ற பின்னர் அங்கு வரும் நபர்களுடன் நாங்கள் சேர்ந்து சில நேரத்தில் தமிழ் மக்கள் சார்பிலே நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும் போது நாங்கள் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுடைய நன்மை கருதி நடவடிக்கைகளை எடுக்க முடியுமே தவிர தேர்தல் தொடர்பாக இந்த கட்சிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை

வன்முறைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் சிலர் அந்த கூட்டணியுடன் முக்கியத்துவம் வகிக்கின்றார்கள், அதேவேளை எந்த அரசாங்கத்துடனும் சேர்ந்து அமைச்சு பதவிகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் எங்கள் மக்களுக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும் என்பது உண்மை ஆனால் ஏற்படுகின்ற பாதகத்தையும் மனதிலே கொள்ளவேண்டும்.

அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்ற பின் அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு பலவிதமான விடயங்களை செய்து கொண்டு போகின்றனர். இவர்கள் தங்களுடைய அமைச்சு பதவிகளை வைத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது இருக்கின்றனர்.

ஆகவே இதனை நாங்கள் முற்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அரசாங்கத்துடன் இருந்து எதனை பெறலாம் என்ற நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றதுடன் அவர்கள் சொந்த அரசிலுக்காக ஈடுபடுகின்றனர் என்பது எங்களுடைய கருத்து என்றார்.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளை முதல் பூட்டு

நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து வெளியேறுகின்றது பிரித்தானியா

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து பிரித்தானியா வெளியேறவுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளர்.

சிறிலங்காவில் காலி மைதானத்தில் இடம்பெறவிருத்த பரீட்சாத்த துடுப்பாட்ட போட்டியை நிறுத்துவதாற்கு நேற்று (12) இரவு முடிவு செய்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரவி உள்ளிட்ட 4 பேருக்கும் அன்று 4 மணிவரை அவகாசம்.!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் தொடர்பில் தற்போது வௌியிடப்பட்டுள்ள பிடியாணைக்கு அமைய நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று மீண்டும் ஆராயப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிபதிகளான நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டார்

கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதமர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரசிற்குரிய நோய் அறிகுறிகள் காணப்படுவதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் பிரதமருக்கு நோய்க்கான அறிகுறிகள் காணப்படாத போதும் அவர் சுயமான தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளார்.

யாழில் உணவு,எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தியே

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாகவும் ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோன கண்டறிவு மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியது சீனா

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில் சீன அரசு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது.

இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது

தமிழரசுக்குத் தாவினார் கோடீஸ்வரன்: திருமலைக் கூட்டத்தில் பூகம்பம்

கடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

திருமலையில் நேற்று இடம்பெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இறுதி நிமிடம் வரையில் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியாமல் இந்த விவகாரத்தை மாவை சேனாதிராஜா கையாண்டிருப்பதால், செல்வம் கடும் சீற்றமடைந்ததாகவும் தெரிகின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று, பின்னர் வசதி வாய்ப்பிற்காக சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள் முன்னர் கட்சி தாவிய வரிசையில், தற்போது கோடீஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார்.

திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. அம்பாறை வேட்பாளர் விவகாரம் நேற்று ஆராயப்பட்டபோது, ரெலோ தமது தரப்பில், தமது கட்சி உறுப்பினரான கோடீஸ்வரனின் பெயரையும், மேலும் இருவரையும் பரிந்துரைத்தது. உடனே, மாவை சேனாதிராசா, அவர் எமது வேட்பாளர் என்றார்.

ரெலோ தரப்பினர் கடுமையாக தர்க்கப்பட்டு, அவர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியாதா எனக்கேட்டனர். அப்படியயன்றால், கோடீஸ்வரனையே கேளுங்கள் என மாவை சொல்ல, செல்வம் அடைக்கலநாதன் தொலை பேசியில் கோடீஸ்வரனைத் தொடர்பு கொண்டார். இதன்போது, கட்சி தாவியமை யைக் கோடீஸ்வரன் ஏற்றுக்கொண்டாராம்.

இதையடுத்து, “”கட்சிக்கு துரோகம் செய்துள்ளாய், நீயல்லாம் ஒரு மனிதனா? என ஒருமையில் செல்வம் கடுமையாக அர்ச்சனை செய்துள்ளார் என இணையத் தளச் செய்திகள் தெரிவித்தன். பதிலளிக்க முடியாமல் திண்டாடிய கோடீஸ்வரன் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.

அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தமிழ் அரசு கட்சிக்குத் தாம் வரப் போகிறார் என்ற தகவலைத் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார் என்றும் அதனால் அவரைக் கட்சிக்குள் எடுத்துள்ளோம் எனவும் கூறி மாவை சமாளித்துள்ளார்.