தமிழரசுக்குத் தாவினார் கோடீஸ்வரன்: திருமலைக் கூட்டத்தில் பூகம்பம்

கடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

திருமலையில் நேற்று இடம்பெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இறுதி நிமிடம் வரையில் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியாமல் இந்த விவகாரத்தை மாவை சேனாதிராஜா கையாண்டிருப்பதால், செல்வம் கடும் சீற்றமடைந்ததாகவும் தெரிகின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று, பின்னர் வசதி வாய்ப்பிற்காக சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள் முன்னர் கட்சி தாவிய வரிசையில், தற்போது கோடீஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார்.

திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. அம்பாறை வேட்பாளர் விவகாரம் நேற்று ஆராயப்பட்டபோது, ரெலோ தமது தரப்பில், தமது கட்சி உறுப்பினரான கோடீஸ்வரனின் பெயரையும், மேலும் இருவரையும் பரிந்துரைத்தது. உடனே, மாவை சேனாதிராசா, அவர் எமது வேட்பாளர் என்றார்.

ரெலோ தரப்பினர் கடுமையாக தர்க்கப்பட்டு, அவர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியாதா எனக்கேட்டனர். அப்படியயன்றால், கோடீஸ்வரனையே கேளுங்கள் என மாவை சொல்ல, செல்வம் அடைக்கலநாதன் தொலை பேசியில் கோடீஸ்வரனைத் தொடர்பு கொண்டார். இதன்போது, கட்சி தாவியமை யைக் கோடீஸ்வரன் ஏற்றுக்கொண்டாராம்.

இதையடுத்து, “”கட்சிக்கு துரோகம் செய்துள்ளாய், நீயல்லாம் ஒரு மனிதனா? என ஒருமையில் செல்வம் கடுமையாக அர்ச்சனை செய்துள்ளார் என இணையத் தளச் செய்திகள் தெரிவித்தன். பதிலளிக்க முடியாமல் திண்டாடிய கோடீஸ்வரன் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.

அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தமிழ் அரசு கட்சிக்குத் தாம் வரப் போகிறார் என்ற தகவலைத் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார் என்றும் அதனால் அவரைக் கட்சிக்குள் எடுத்துள்ளோம் எனவும் கூறி மாவை சமாளித்துள்ளார்.