Home Blog Page 2388

ஏழு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன்,ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 29 ஆம் திகதிவரை பயணிகள் இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு சென்று திரும்பிய ஒருவரும் இத்தாலியில் இருந்து வந்த இருவருக்குமே இந்த தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு தனது விமான சேவையை இரத்துச் செய்தது எயார் இந்தியா 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே பல நாடுகளுக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி, இலங்கை உட்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை இரத்துச் செய்துள்ளதாக எயார் இந்தியா அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகளின் விசா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் பல நாடுகளுக்கு விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எயார் இந்தியா விமான நிறுவனம் நேற்று ரோம் மற்றும் மிலனுக்கு சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்று இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விமான சேவையை இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

வவுனியாவில் பண்;டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் சுயேற்சைக்குழுவில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பதாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்டுள்ள மாவீரன் பண்டார வன்னியன் சிலைக்கு கௌரவமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 2 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

01 1 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

01 3 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

வவுனியாவில் கொரனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே முன்னாள் எம்.பி செல்வம்

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இவ் உயிர்கொல்லி வைரஸில் இருந்து மக்களை காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமே.

எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதனை பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை அமையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

கடந்த வருடம் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை உடனடியாக வவுனியாவிற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. இதற்கு வவுனியா மக்கள் எதிர்ப்பை காட்டியபோதிலும் அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

இதேபோன்றதான மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளை பார்க்கும் போது எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசு செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.

இத்தாலி தென்கொரியா ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது எதற்காக வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத்தோன்றுகின்றது என தெரிவித்தார்

எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர பாரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் மாநில முதல்வர் பாரூக் அப்துல்லா உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். படிப்படியாக பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவை மாநில முதன்மை செயலாளர் விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த பாரூக் அப்துல்லா, எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இருந்தாலும் அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும் போது இந்த சுதந்திரம் முழுமையடையும். அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா. மெகபூபா முக்தி உட்பட சிலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனத்தை அழிக்காதே! நாடு சீனாவிற்கு மக்கள் கொரோனாவிற்கா? திரண்ட பல்கலை மாணவர்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட கிழக்கு பிரதேசத்திற்கு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, அவர்களை அழைத்துவர வேண்டாம் என வலியுறுத்தும் கண்டனப் போராட்டம் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்டனப் போராட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பங்கேற்றது.

வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் முன்பாக நடைபெற்ற எதிப்பு நடவடிக்கையில் பெருந்திரளான மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்துகொண்டு கண்டன சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு கோஷங்களை எழுப்பினர்.

‘வேண்டாம் வேண்டாம், கொரோனா வேண்டாம்’ ‘அழிக்காதே அழிக்காதே, எம் இனத்தை அழிக்காதே’ ‘நாடு சீனாவிற்கு, மக்கள் கொரோனாவிற்கா’ ‘மீட்போம் மீட்போம், உயிர்களை மீட்போம்’ ‘நோய்களைப் பரப்ப, நாம் தான் கிடைத்தோமா’ ‘இல்லாத கொரோனாவை, எம் மண்ணில் விதைக்காதே’ கொன்றது போதும், கொள்ளை நோய் தேவையா’ ‘வேண்டாம் வேண்டாம், கொரோனாவிற்குள் அரசியல் வேண்டாம்’ ‘மாற்று மாற்று, கொரோனாவிற்கான இடத்தை மாற்று’ போன்ற கோஷங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உச்சரித்தவாறு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்து இடையூறுகள் எற்பட்டதனால், நிலமையை கட்டுப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து பொலிசார் கடமைகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான்

சீனாவிற்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான் என சீன வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (zhao lijian) வெளியிட்ட ருவிற்றர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுகூடத்தில் 60 வயதான பெண்ணிற்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பெண் வூகானில இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார் என்றும் அவர் மூலம் அவர் கணவருக்கும் அந்நோய் பரவி பின்னர் இருவரும் குணமடைந்தனர் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு வந்த நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச்சென்றுள்ளார்.IMG 7367 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

கொழும்பில் உள்ள ஹோட்டலில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.IMG 7656 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சுயேட்சைக் குழு இன்று நியமனப் பத்திரம் தாக்கல்

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு இன்று நன்பகல் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரத்தை புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக்குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முதலாவது நியமனப் பத்திரத்தை தெரிவு அத்தாட்சி அலுவலர் திருமதி கலாமதி பத்மராஜா உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நியமனப் பத்திரத்தை கெயேற்றுள்ளது.

நியமனப் பத்திரங்களை கையேற்கும் இரண்டாவது நாளான இன்று (13) பொலிஸ் பாதுகாப்பு மாவட்டச் செயலக வளாகத்தில் பலப்படுத்தப் பட்டிருந்தது.