Home Blog Page 2349

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது குறித்த வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், காவல்நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 151 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மரக்கறிகளின் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்.

கொழும்பு மெனிங் சந்தையில் மொத்த வியாபாரத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க எமது செய்தி பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்த விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரம் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை ஏற்றி சென்று விநியோகிக்கப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாட்களில் கையிருப்பில் உள்ள மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மொத்த வியாபார சந்தை மூடப்படவுள்ளதுடன் அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மெனிங் சந்தையில் சி;ல்லறை முறையில் மரக்கரிகளை விற்பனை செய்வதற்கு இன்று முதல் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தபக்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் எம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இன்று (3) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர் அடங´கலாக மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களது உடல் நிலையில் மாற்றம் காணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாகவம் தெரிவித்தார் 96 படுக்கைகளை கொண்ட விடுதி ஒன்று மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதர அமைச்சு மேற்கொண்டுள்ளது என்றம் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக 36 நபர்கள் இது வரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டுவருகின்றது.

சமூக இடைவெளியினை கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் முக கவசம் வெளியில் செல்கின்றபோது கண்டிப்பாக அணிவதும் அவசியமானதாகும் கொரோனா தாக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அதிகமானோர் முககவசங்களையும் சமூக இடைவெளிகளை முன்னெடுத்ததாகவும் கைகளை நன்றாக கழுவுவதையும் கடைப்பிடித்தமையும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவர முடிந்ததாக தரவுகள் வெளியாகிதாக வைத்திய நிபுணர் சுந்தரேசன் தெரிவித்தார்.

ஊரடங்கு கால விதிமுறைகள் தொடர்பில் விசேட நடைமுறைகள்!

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுவொருபுறமிருக்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாவது உயிர் பலி.!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஐந்தாவது நபர் இவராவார். குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் – 07 ஆக அதிகரிப்பு!

இன்று யாழ்ப்பாணம் பலாலியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு சென்றவர்களான 36 வயதுடைய பெண் மற்றும் 20,15 வயதுடைய ஆண்கள் ஆகியோரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிவந்துள்ளது.

யாழில் மேலும் 6பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் மேலும் 6பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தொற்று அறிகுறி சந்தேகத்தில் 6பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய்ப் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 7பேருக்கு தொற்று இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 20பேரில் அடுத்த 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதய வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு தொடர்பில் மோசடி செய்தது உட்பட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று(03) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுது்த போது அவர் நீதிவான் உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்!

கொரோனாவினால் இலங்கையில் நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளது. மரணம் எமது வீடு வாசல்வரை வந்துவிட்டது.

கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு தடுமாறுகிறது.

தம்மிடம் இருக்கும் பணத்தை கொரோனாவுக்கு செலவு செய்ய முடியுமா? முடியாதா? என நம் பிரதேச சபைகள் பட்டிமன்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் என்றவுடன் ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்த எம் தலைவர்கள் பலர் கொரோனா என்றவுடன் ஓடி ஒளிந்துவிட்டார்கள்.

கொரோனாவினால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்தான். ஆனால் அன்றாடம் உழைத்து சாப்பிடுகிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக புதுக்குடியிருப்பில் ஒரு தாய் தன் தோட்டத்தில் விளைந்த வத்தக பழங்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்திருக்கிறார்.

இவ் ஏழைத்தாய் தன் மகனை முள்ளிவாய்க்காலில் பறி கொடுத்தவர். பழங்களை விற்பனை செய்யாவிடில் பழுதடைந்தவிடும்.

இதையறிந்த ஒரு இளைஞர் இத் தாயின் நிலையை தன் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

இதை முகநூலில் பார்த்த பெண் ஒருவர் உடனே 100 கிலோ வத்தக பழங்களை வாங்கி முள்ளியவளை பாரதி இல்ல சிறுவர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.

இவ்வாறு அந்த ஏழைத் தாயின் அனைத்து வத்க பழங்களும் விற்று தீர்ந்துள்ளன.

இந்த இளைஞர் தன் முகநூலில் போட்ட ஒரு பதிவானது சாதாரணமானதுதான். ஆனால் அது,

•ஏழைத் தாயின் பழங்கள் யாவும் விற்று அவருக்கு வருமானம் கிடைக்க வழி செய்தள்ளது.

•ஒரு பெண் உட்பட சிலர் இந்த பழங்களை வாங்கி வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்கும் மனோபாவத்தை கொடுத்துள்ளது.

•சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு மகிழ்வுடன் வத்தக பழம் உண்பதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஆம். இவ்வாறான இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். கொரோனாவை மட்டுமல்ல அதைவிடக் கொடிய எது வந்தாலும் எம்மால் எதிர் கொள்வதற்கு.

குறிப்பு – இவ் இளைஞர்போல் பலர் செய்து வருகின்றனர். இதனை ஊக்குவிப்பதற்காகவே இதை ஒரு உதாரணமாவே பதிவு செய்துள்ளேன்.

Tholar balan

அமெரிக்காவுக்கான உதவிப் பொருட்களுடன் ரஸ்யா விமானம்

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்தப் பொருட்களை நேற்று (2) ரஸ்யா அனுப்பியிருந்தது.

ஆனால் தாம் அவற்றை உதவியாக கேட்கவில்லை, பணம் கொடுத்தே வாங்கினோம் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்கா அரை பங்கு உபகரணங்களுக்கு பணம் தந்ததாகவும், மிகுதியை ரஸ்யா அன்பளிப்பாக வழங்கியதாகவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.