அமெரிக்காவுக்கான உதவிப் பொருட்களுடன் ரஸ்யா விமானம்

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்தப் பொருட்களை நேற்று (2) ரஸ்யா அனுப்பியிருந்தது.

ஆனால் தாம் அவற்றை உதவியாக கேட்கவில்லை, பணம் கொடுத்தே வாங்கினோம் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்கா அரை பங்கு உபகரணங்களுக்கு பணம் தந்ததாகவும், மிகுதியை ரஸ்யா அன்பளிப்பாக வழங்கியதாகவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.