Home Blog Page 2331

வாழைச்சேனையில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு.

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தும் திருடர்கள் பெண்கள் அணியும் முழு நீள ஆடைகளை அணிந்து முகங்களை மறைத்துக் கொண்டு திருடும் காட்சிகள் சீசீடிவிகளில் பதிவாகியுள்ளன.

அண்மையில் ஓட்டமாவடியில், நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருடப்பட்டுள்ளதுடன், அதே பகுதியில் வீடு ஒன்றின் கூரையைப் பிரித்து பணங்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஊர்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்புப் படையினர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி குறித்த திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இன்றைய தினம் நகரை நோக்கி வருகை தந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது. நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளிலும், காமினி மகா வித்தியாலய மைதானத்தினுள்ளும் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதனால் விவசாயிகள் குறித்த பகுதிகளில் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியிருந்தனர்.

மேலும் மருந்தகங்கள்,வங்கிகள், வியாபாரநிலையங்களில் பொதுமக்கள் நீண்ட
வரிசையில் நின்று தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவுசெய்திருந்தனர்.

நான்கு நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டமையால் அதிகமான மரக்கறிவகைகள் நகரில் தேங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

aaa 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a5 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a4 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a3 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a3 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a2 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

தமிழகத்தில் வௌவால்களில் கொரோனா தொற்று.

தமிழகம் உட்பட 4 மாநில வௌவால்களில் கொரோனா தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கிடையே நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வௌவால்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக வௌவால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்றும், வௌவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ கொரோனாவை பரப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் அறிக்கையின்படி, ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு வகையான வௌவால்களின் தொண்டையில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாசலப்பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற 4 மாநிலங்களின் வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வௌவால்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாமல் ராஜபக்ஸ

உலகெங்கிலும் கொரோனா தாக்கத்திற்குட்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடப்பட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் நேரடி தொடர்பு’;இல்லையென்கிறார் ரிஷாட்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க படும் எனவும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,

எனது சகோதரரர் அநீதியாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், பழிவாங்கலுக்கு எதிராகவும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகின்றோம் சகோதரரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நானோ, எனது குடும்பத்தினரோ அல்லது சகோதரர் ரியாஜ் பதியுதீனோ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாதவர்கள் என்பதை, மிகவும் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் நாங்கள் உதவமாட்டோம். அனுமதிக்கவும்மாட்டோம். அதற்கெதிராக அனைத்துக் கட்டங்களிலும் செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டு வருகின்றோம். ஆனால், இந்தப் பயங்கரவாதச் சம்பவத்துடன் எனது சகோதரரை தொடர்புபடுத்தி, இவ்வாறானதொரு அநியாயச் செயலை செய்திருப்பது, எனது அரசியல் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியே காரணமாகும் எனவும், அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் நம்புகின்றேன்.

பாதுகாப்புத் தரப்பினர் நடத்துகின்ற விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவது எமது கடமை என்ற வகையில், சகோதரர் ரியாஜ் பதியுதீனும் பூரண ஒத்துழைப்பை இந்த விசாரணைக்கு வழங்குவார். ஆனால், அவரது விசாரணை தொடங்கி, அது நிறைவடைவதற்கு முன்னரே, மறுகணத்திலிருந்தே “இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்புடையவர்” என்ற பொய்யான செய்தியை நாடு முழுவதும் இனவாத ஊடகங்கள் பரப்பி வருகின்றன. உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினத்தில், அடுத்த நிமிடத்திலிருந்தே “ரிஷாட் பதியுதீன் இந்தச் செயலுடன் தொடர்புற்றிருக்கிறார்” என அபாண்டங்களைப் பரப்பினர்.

எமது அரசியல் கருத்துக்கு மாறாக இருந்தவர்கள், கடந்த காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்தினால், ஒருசில அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக இந்த சம்பவத்துடன் என்னை தொடர்புபடுத்தி மோசமாகப் பேசினர். பிழையான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்தனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், பொலிஸ் மா அதிபர் மூன்று விசாரணைக் குழுக்களை அப்போது அமைத்ததுடன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலம், ரிஷாட் பதியுதீனுக்கு இதில் சம்பந்தம் இருந்தாலோ அல்லது இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்பான தகவல்கள் இருந்தாலோ பொலிஸில் வந்து முறையிடுமாறு, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் செய்தி பரப்பினார்கள். அதற்கான கால அவகாசமும் கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

என்மீதான இந்த விசாரணைக்கென மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், வழங்கப்பட்ட அத்தனை தகவல்களும் ஆவணங்களும் பொலிஸ் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் முடிவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலோ, வேறு எந்த பயங்கரவாதத்துடனோ ரிஷாட் பதியுதீனுக்கு எதுவித தொடர்புமில்லை என பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிவித்தனர். தற்போதிருக்கும் பதில் பொலிஸ்மா அதிபரே, இந்த விசாரணை அறிக்கையை எழுத்து மூலம் அப்போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வழங்கினார். இந்த விடயங்கள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

அத்துடன், எனது சகோதரரோ, எனது குடும்பத்தினரோ இந்த பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கமாட்டார்கள் என, நான் உறுதியுடன் மீண்டும் கூற விரும்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 – சிறீலங்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 238

கொரோனா வைரசின் தாக்கத்தால் சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்று (15) தெரிவித்துள்ளன.

நேற்று கண்டறியப்பட்ட 5 பேரில் நான்கு பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள்.

சிறீலங்காவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதுடன், 63 பேர் குணமடைந்துள்ளனர்.

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணியின் பின்னர், ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் முதலான கொரோனா இடர் வலயங்களில் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுககு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனாவின் தாக்கத்திற்கு கணவன் – மனைவி பலி

கோவிட்-19 வைரசின் தொற்று நோய்க்கு இலக்காகி கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு ஈழத்தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்.

கனடா பிரம்டன் ரொறொன்டோ பகுதியை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா மற்றும் அவரின் மனைவி ஆகியோரே மரணமடைந்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் பெற்றோரான இவர்கள் ஒன்றாக மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சியை அங்கு வாழும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிக ஈழத்தமிழ் மக்கள் பலியாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் விமானம்தாங்கி கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம்

பிரான்ஸ் நாட்டின் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலான சார்ள்ஸ் கொலேயில் பணியாற்றிவரும் கடற்படையினரிடம் அதிகளவிலான கோவிட்-19 தொற்றுதல் காணப்பட்டதால் கப்பல் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த படையினரில் 668 படையினருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அணுசக்தியில் இயங்கும் இந்த கப்பலானது, நேட்டோ படையினரின் நடவடிக்கையின் பொருட்டு அத்லாண்டிக் கடற்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தது.

அண்மையில் அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கும் முக்கிய விமானம் தாங்கி கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதும் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததும், பெருமளவானோர் பாதிக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.

கோவிட்-19 இறந்தோர் எண்ணிக்கை 134,068 ஆக உயர்வு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இதுவரையில் 134,068 பேர் பலியாகியுள்ளதுடன், 2,073,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 509,067 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 30,817

இந்தாலி – 21,645

ஸ்பெயின் – 18,708

பிரான்ஸ் – 17,167

பிரித்தானியா – 12,868

ஈரான் – 4,777

சீனா – 3,342

நெதர்லாந்து – 3,134

ஜேர்மனி – 3,592

பெல்ஜியம் – 4,440

பிரேசில் – 1,736

துருக்கி – 1,518

சுவிற்சலாந்து – 1,239

கனடா – 1,006

இந்தியா – 405

சுவீடன் – 1,203

இஸ்ரேல் – 130