பிரான்ஸின் விமானம்தாங்கி கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம்

பிரான்ஸ் நாட்டின் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலான சார்ள்ஸ் கொலேயில் பணியாற்றிவரும் கடற்படையினரிடம் அதிகளவிலான கோவிட்-19 தொற்றுதல் காணப்பட்டதால் கப்பல் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த படையினரில் 668 படையினருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அணுசக்தியில் இயங்கும் இந்த கப்பலானது, நேட்டோ படையினரின் நடவடிக்கையின் பொருட்டு அத்லாண்டிக் கடற்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தது.

அண்மையில் அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கும் முக்கிய விமானம் தாங்கி கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதும் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததும், பெருமளவானோர் பாதிக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.