தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்

679 Views

தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம்தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம் ஆனது கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. 2002 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்னார் மாவட்டமானது நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைக் கொண்டது. சிறு கரையோரப் பாதை மூலம் இவை யாவும் இணைக்கப்படுகின்றது.

மாவட்ட வளங்கள்2 தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் - தாஸ்

தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம்

திருக்கேதீஸ்வரம், மடுமாதா, மன்னார் கோட்டை, அருப்புக்கோட்டை, அல்லிராணி கோட்டை, இராமர் பாலம், வெளிச்ச வீடு, பெருக்க மரம் போன்ற புகழ்பெற்ற இடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்கேதீஸ்வர தலமானது பதினாறாம் நூற்றாண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, மீண்டும் 1903 ஆம் ஆண்டு மீளவும் கட்டப்பட்டது.

மன்னாரின் பிரபலத்துக்கு பெருக்கமாவட்ட வளங்கள் தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் - தாஸ் மரமும் ஒரு காரணமாகும். இந்தப் பெருக்க மரம் பதினைந்தாம் நூற்றாண்டு அரேபிய வியாபாரிகளால் கொண்டு வரப்பட்டது. 7.5 மீட்டர் உயரமும் 19.5 மீட்டர் சுற்றளவும் உடைய 150 ஆண்டுகள் பழமையான மரமாகும்.

மன்னார் வெளிச்ச வீடானது, 1915ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒவ்வொரு ஐந்து செக்கனிலும் வெளிச்சத்தை கொடுக்கக்கூடியது. இதன் ஒளியானது 10 கடல் மைல் தொலைவுக்கு வெளிச்சத்தை கொடுக்கக் கூடியது. தலைமன்னாரில் அமைந்துள்ள  வெளிச்ச வீடானது இந்த வழியில் தலைமன்னாரில் இருந்து இந்தியா செல்லும் கப்பல்களுக்கு துணையாக அமைந்துள்ளது.

தாயக மேம்பாடுமாவட்ட வளங்கள்1 தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் - தாஸ்மன்னார் கோட்டையானது, 1560ல் போர்த்துக்கேயரால் மூன்று பக்கம் பாதுகாப்பு அரணாகவும் ஒரு பக்கம் போர் வீரர்கள் கடல் வழியாக தப்பிச் செல்லக் கூடியதாகவும் அமைக்கப்பட்டது. பின்னர் இது ஒல்லாந்தரால் கடல்படைத் தளமாக மாற்றப்பட்டது.

ராமர் பாலம் மணலாலும், சுண்ணாம்பு பாறை கற்களாலும் கட்டப்பட்டது. இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கக் கூடியதாக இது அமைந்துள்ளது. மலையாளத்தில் இராமர் சேது பாலம் என மாற்றப்பட்டது. 30 கிலோ மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அகலமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ராமர் பாலம் ஊடாக பதினைந்தாம் நூற்றாண்டில்  மக்கள் பயணம் செய்தனர்.

புனித வெற்றி மாதா தேவாலயம் பதினெட்டாம் நூற்றாண்டு வெற்றி மண் பேசாலை குடியிருப்பில் உருவாக்கப்பட்டது. 2004ல் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த தேவாலயம் 17 ஆயிரம் சதுர பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 70 சதவீதமான மக்கள் விவசாயத்தையும், 25 சதவீதமான மக்கள் மீன்பிடித் தொழிலையும் 5 சதவீதமான மக்கள் ஏனைய தொழில்களையும் செய்து வருகின்றனர்.

தேக்கம் அணைக்கட்டில் மல்வத்து ஓயாவுக்குக் குறுக்காக அமைக்கப்பட்ட இரண்டு வாய்க்கால்கள் ஒன்று கட்டுக்கரை குளத்திற்கும் மற்றது அகத்தி முறிப்பு குளத்திற்கும் நீர் திறந்து விடப்படுகிறது. மிகுதி நீர் அருவி ஆறு ஊடாக கடலுக்கு செல்கின்றது.

கட்டுக்கரை குளம் 1969ல் நீர்ப்பாசன திணைக்களத்துடன் இணைக்கப்பட்டது. 16.25 மைல் நீளமான அருவியாறு ஊடாக நீர் குளத்துக்கு வருகின்றது. குளத்தின் நீளம் 4.5 மைல். 31இ500 கன அடி நீர் உள்ளது. 30 ஆயிரம் ஏக்கர் வயல்கள் செய்யப்படுகின்றது . 10 வான்கதவுகள் உள்ளது விளாத்தி குளம், அகத்தி குளம் ஊடாக ஏனைய குளங்களுக்கு நீர் செல்கின்றது.

மாவட்ட வளங்கள்3 தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் - தாஸ்மன்னார் மாவட்டத்தில் 99,051 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 80,568 தமிழர்களும் 16,087 முஸ்லிம்களும் 1961 சிங்களவர்களும் வசிக்கின்றனர். 153 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளது. 622 கிராமங்களும் மன்னார் மாவட்டத்தில் உள்ளன. 13,000க்கும் மேற்பட்ட பழ மரங்கள் இங்குள்ளன.

குளம் புனரமைப்பிற்காக ஒரு வருடம் 10 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டு வருகின்றது. 30 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு வருடாவருடம் இங்கிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் அதிக நீர் கடலுக்கு செல்லும் மாவட்டமாகவும் அதிக வறட்சியான பகுதியாகவும் மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. பல பகுதிகள் உவர் நிலமாக மாறி வருகின்றன. நிலப் பயன்பாடு குறைவாகவே காணப்படுகின்றன. வனவிலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. பல வேலைத்திட்டங்கள் இங்கு செய்யப்பட வேண்டியுள்ளது எனினும் அதற்கான உள்கட்டமைப்புகள் மிகவும் குறைவாக உள்ளன.

Leave a Reply