அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு: இதுவரை 73 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மழை – வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை அந்த மாநிலத்தில் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டத்தின் 127 வருவாய் வட்டத்தில் உள்ள 5137 கிராமங்கள் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. 744 முகாம்களில் சுமார் 1.90 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை இராணுவம், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினரால் சுமார் 30,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Tamil News