இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா இணக்கம்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சுற்றுலா, முதலீட்டுத்துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை நேற்று சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், பல்துறை நிறுவனங்கள், இருதரப்பு அபிவிருத்தி பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கைக்கு பொருளாதார ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்திய பாராளுமன்றத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் முன்வைத்த விடயத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Tamil News