அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள்

165 Views

219773270 1381172702255134 7144035628432457981 n அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஏதிலிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.  

“ஒவ்வொரு நாளும் எனது நிலைமை மோசமாகவே இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறும் சாஹப் உடின் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி நவுருத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 108 ஏதிலிகளில் ஒருவர். இதே போன்று பப்புவா நியூகினியா தீவிலும் 125 ஏதிலிகள் சிறை வைக்கப் பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலிய அரசால் படகு வழியாக வரும் ஏதிலிகள் தொடர்பான கொள்கையின் கீழ் இத்தீவுகளில் சிறை வைக்கப் பட்டவர்கள். கடல் வழியாக தஞ்சமடையும் எந்த ஏதிலிகளும் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதே அக்கொள்கை.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply