குறைந்தளவு பலன்தரும் தடுப்பூசியை அரசாங்கம் ஏன் கொள்வனவு செய்கின்றது – சுகாதார நிபுணர்கள்  எதிர்ப்பு

236 Views

download 1 5 குறைந்தளவு பலன்தரும் தடுப்பூசியை அரசாங்கம் ஏன் கொள்வனவு செய்கின்றது - சுகாதார நிபுணர்கள்  எதிர்ப்பு

இலங்கையில் பரவிவரும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்துவதில் குறைந்தளவு பலன் அளிக்ககூடிய சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து சுகாதார துறையை சேர்ந்தவர்கள்  தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களிற்கு விற்பனை செய்யப் படுகின்றது இது இலங்கையை பொறுத்த வரை மிகவும் பெரிய தொகை என சுகாதாரதுறை வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

மேலும் 13மில்லியன்  சினோவக் தடுப்பூசியை இலங்கை  கொள்வனவு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏனைய தடுப்பூசிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப் படுவதையும் சுட்டிக் காட்டியுள்ள அதேவேளை, மிகவும் பெறுமதியான சினோவக்  தடுப்பூசியின் செயல் திறன் மிகவும் குறைவானது எனவும்  தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவக் தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பயன்பாட்டிற்காக அனுமதித்துள்ள போதிலும் இந்த தடுப்பூசி டெல்டா வைரசிற்கு எதிராக எவ்வளவு தூரம் பயனளிக்க கூடியது என்பதுகுறித்து எந்த தரவுகளும்-புள்ளி விபரங்களும் இல்லை எனவும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள்  தெரிவித்துள்ளது.

அத்தோடு தற்போது இலங்கைக்கு தடுப்பூசி தொடர்ந்தும் கிடைப்பதால் சினோவக்கினை கொள்வனவு செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உலகின் ஏனைய நாடுகளில் சினோவக் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆறுமாதத்தில் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மூன்றாவது  தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply