உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: கைது செய்யப்பட்ட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியல்

123 Views

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட  64 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21.4.2019  ஆண்டு  உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த தாக்குதலின் பின்னர், சந்தேகத்தின்பேரில்  காத்தான்குடியை சேர்ந்த  65 பேரை கைது செய்யப்பட்டனர். குறித்த  69  பேரும் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவன் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: கைது செய்யப்பட்ட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியல்

Leave a Reply