சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

142 Views

சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸிடம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று சுமார் நான்கரை மணி நேரமாக விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்காக வருகை தருமாறு குறித்த சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  அவர் வவுனியாவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் நான்கரை மணி நேரமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதில் தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  விடுதலைப் புலிகள் தொடர்பாக பதிவிட்ட பதிவுகள் தொடர்பிலும் தனது சமூக செயற்பாட்டு அமைப்பு  தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கனகசபை தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இலக்கு வைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

Leave a Reply