சீனாவின் கறுப்பு பட்டியலில் இலங்கையின் அரச வங்கி

சீனாவின் கறுப்பு பட்டியலில் இலங்கை

இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. 

இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது.

சீனாவின் கறுப்பு பட்டியலில் இலங்கையின் மக்கள் வங்கி உள்ளதான செய்தியை சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமா்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை மக்கள் வங்கி எல்/சி செலுத்தத் தவறிதன் மூலம், சீன நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad சீனாவின் கறுப்பு பட்டியலில் இலங்கையின் அரச வங்கி