எல்லைப் பாது­காப்பு தொடர்­பாக சீனாவின் புதிய சட்­டத்திற்கு இந்தியா எதிர்ப்பு

எல்லைப் பாது­காப்பு தொடர்­பாக சீனா

எல்லைப் பாது­காப்பு தொடர்­பாக சீனா இயற்­றி­யுள்ள புதிய சட்­டம் ஒரு தலைப்பட்­ச­மா­னது என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

முந்­தைய ஒப்­பந்­தங்­களை மீறும் வகை­யில் இந்த புதிய சட்­டம் அமைந்­துள்­ள­தாக மத்திய அரசு சுட்­டிக்­காட்டி உள்­ளது. புதிய சட்­டத்­தின் கீழ் இரு நாடு­க­ளின் எல்­லைப் பகு­தி­யில் சீன இராணு­வம் தன்­னிச்­சை­யாக எத்­த­கைய நட­வ­டிக்­கை­யை­யும் மேற் கொள்­வ­தற்­கான அதி­காரம் வழங்­கப்­ப­டக் கூடாது என இந்திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

“புதிய சட்­டத்­தில் உள்ள சில அம்­சங்­கள் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான ஒப்­பந்­தங்களை மீறும் வகை­யில் உள்­ளன. அதில் குறிப்­பிட்­டுள்­ள­படி, எல்­லைப் பகு­தி­யில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை சீனா தவிர்க்­கும் என இந்­தியா எதிர்­பார்க்­கிறது,” என வெளி­யு­றவு அமைச்­சின் செய்தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

சீனா­வின் புதிய சட்­டத்­தால் எல்­லைப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தில் சிக்­கல் ஏற்படும் என்­றும் இதைத் தவிர்ப்­பது சீனா­வின் கையில்­தான் உள்­ளது என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

இகற்­கி­டையே, ஜம்மு காஷ்­மீர் முழு­மை­யாக இந்­தி­யா­வின் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் என இந்­திய விமா­னப் படை­யின் மேற்கு பிரி­வுத் தலை­வ­ரான ஏர் மார்­ஷல் அமித் தேவ் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரில் உள்ள மக்­களை அந்­நாடு சரி­யாக நடத்­து­வ­தில்லை என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“ஜம்மு காஷ்மீரை முழு­மை­யாக இந்­தி­யா­வின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வதே நமது இலக்கு. எனி­னும், ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரை மீட்­பது தொடர்­பாக தற்­போது எந்­தத் திட்­ட­மும் செயல்­ப­டுத்த மாட்­டாது,” என்­றார் ஏர் மார்­ஷல் அமித் தேவ்.

இதற்­கி­டையே, தென்பசி­பிக் கடற்­ப­கு­தி­யில் சீனா­வின் ஆக்­கி­ர­மிப்பு நடவடிக்கைகளுக்கு இந்­தியா மறை­மு­க­மாக கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­திய கடற்­ப­டை­யின் மாநாட்­டில் பங்­கேற்­றுப் பேசிய கடற்­ப­டைத் தலை­வர் கரம்­பீர் சிங், இந்­திய, பசி­பிக் வட்­டா­ரத்­தில் ஆதிக்­கம் செலுத்த சில நாடு­கள் நிலப்­ப­கு­தியை மைய­மா­கக் கொண்ட வட்­டார மன­நி­லை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்­டார்.

வியட்­நாம், பிலிப்­பீன்ஸ், மலே­சியா, புருணை, தைவான் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு இறை­யாண்மை தொடர்­பான பிரச்­சி­னை­கள் இருப்­ப­தாகவும்  தெரிவித்தார்.

இதற்­கி­டையே, அனைத்து நாடு­க­ளின் உரி­மை­க­ளை­யும் மதிப்­ப­தில் இந்­தியா உறு­தி­யாக உள்­ளது என்று மத்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

கடல்­சார் பிரச்­சி­னை­களில் இந்தோ-பசி­பிக் வட்­டார நாடு­கள் இடையே ஒருங்கிணைந்த செயல்­பா­டு­கள் தேவை என்­றும் பொது­வான நோக்­கங்­க­ளைக் கண்ட­றிய வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்தோ-பசிபிக் வட்டாரம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி- தமிழ் முரசு ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad எல்லைப் பாது­காப்பு தொடர்­பாக சீனாவின் புதிய சட்­டத்திற்கு இந்தியா எதிர்ப்பு