மேதகு திரைப் படத்தை தரவிறக்கம் செய்தார்களாம் – நுவரேலியாவில் இருவர் கைது

199 Views

மேதகு திரைப் படத்தை தரவிறக்கம் செய்தார்களாம் - நுவரேலியாவில் இருவர் கைதுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “மேதகு” தமிழ்த் திரைப்படத்தை இணையத் தளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, ஹாவா எலிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப் பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் வியாபார நிலைய மொன்றை நடத்திவரும் நபரொருவரும் அவரது நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர்.

நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள பிரதான சந்தேக நபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபா வசூலிக்கப் பட்டு, படம் பிரதி யெடுத்துக் கொடுக்கப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் என்று நுவரெலியா பொலிஸார் மேலும் கூறினார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply