தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டுள்ளது.
தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மத்தேயு பாடசாலை, தெனியாய ராஜபக்ஸ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை ஆகியவை மூடப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



