சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் ஆபத்து; அவசரகால நிலை பிரகடனத்துக்கு சுமந்திரன் கண்டனம்

ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் ஆபத்துஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் ஆபத்து: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அத்தியவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“நாட்டிலே உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப் படுத்துவதற்காக இதனை செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் அதனோடு சம்பந்தப்பட்ட விவாதங்களைத் தான் இந்தச் சட்டத்தின் மூலம் பாவிக்க முடியும்” என கூட்டமைப்பின் பேச்சாளர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“இதனாலேயே, பொது சுகாதார அவசர கால நிலைமைக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அதற்கான தனி நபர் சட்டமூலத்தையும் பாராளுமன்றில் பிரேரித்துள்ளேன். அதனை சட்டமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற தோரணையில் இப்போது அவரசகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்யே நடைபெறும். ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். அத்துடன் சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கைக்குச் சென்றடையும். எனவே இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021