”முறையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” பிரிட்டனுக்கு சீனா எச்சரிக்கை

207 Views

119654242 tv067445835 ''முறையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்" பிரிட்டனுக்கு சீனா எச்சரிக்கை

பிரிட்டனின் ஹெச்.எம்.எஸ் குயின் எலிசபெத் போர் கப்பல் தலைமையிலான ‘கேரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ படைகள் தென் சீனக் கடலில் நுழைந்துள்ள நிலையில் ‘முறையற்ற செயல்களில்’ ஈடுபட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது.

இக்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படை சிங்கப்பூர் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சீன கப்பற்படை எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக சீன அரசுக்கு சார்புடைய க்ளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2016ம் ஆண்டு வழங்கப்பட்ட சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தென் சீனக் கடலின் பெரும் பகுதி தனக்கு சொந்தம் என சீனா தெரிவித்திருந்தது. இதை மீறும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தக் கடல் பரப்பை பயன்படுத்தி வருகின்றன.

சீனா இங்கு சில செயற்கை தீவுகளையும் அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply