வட கொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு முடக்கநிலை அமுல்
வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சுவாச நோய் தொற்று ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை...
கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 7 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல நடன மண்டபமொன்றில் 11 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரத்தில்...
பெருவில் அரசுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்-உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மூடப்பட்டது
பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டது.
தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு...
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை மீள்குடியமர்த்துவதில் தாமதம்: ஆம்னெஸ்டி அமைப்பு கவலை
நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாமில் இருக்கும் அகதிகளை மீள்குடியமர்த்துவதில் இன்னும் கூடுதலான முன்னேற்றம் தேவை என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக...
நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவிப்பு
குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.
தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம்...
ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய பாணியில் நாடுகடத்திய பிரான்ஸ்
இந்திய பெருங்கடலில் பிரஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசு நாடுகடத்தியுள்ளது. அத்துடன் இதுபோன்று படகு வழியாக...
இந்தியாவுடன் பேச்சு நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார்.
கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,...
உலங்கு வானூர்தி விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த உலங்கு வானுார்தி விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல்...
ஜூனுக்கு பின் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு ஒப்புதல்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய...
சீனாவில் கொரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு
சீனாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும்...










