உலங்கு வானூர்தி விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலி

108 Views

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த உலங்கு வானுார்தி விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல் துறை தலைவர் ஐகர் க்ளைமென்கோ ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து ஆளுநர் கூறுகையில், “கீவ் நகரின் ப்ரோவாரி என்ற பகுதியில் ஒரு குடியிருப்புக்கு அருகே உலங்கு வானுார்தி ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அருகிலிருந்த மழலையர் பள்ளியைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர்” என்றார்.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நெருங்கவுள்ள நிலையில் இன்னும் அங்கு யுத்தம் ஓயவில்லை.

இந்நிலையில், இன்று உலங்கு வானுார்தி விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் கடுமையான மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply