நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவிப்பு

குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.

தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி  7ஆம் திகதிக்கு  முன்பாக அவர் விலகவுள்ளார். அவருக்கான மாற்றுத் தலைவரை தேர்ந்தெடுக்க வரும்நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்.

நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது  உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண்  தலைவர் என்று அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.