“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தான் கண்டிப்பதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 2022 இல் இலங்கையில் ஜனாதிபதிகள் மாற்றப்பட்டதன் மூலம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய மதிப்பீட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
I agree with Human Rights Watch’s recent assessment that the change of Presidents in Sri Lanka in 2022 has not led to improvements in the country's human rights record. https://t.co/CbEwLw6ttZ
— Siobhain McDonagh MP (@Siobhain_Mc) January 18, 2023